Published:Updated:

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

பானுமதி அருணாசலம்.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

பானுமதி அருணாசலம்.

Published:Updated:
##~##

இந்த வாரம் அடிப்படை உலோகங்கள் குறித்து ஜியோஜித் காம்ட்ரேட் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் சி.பி.கிருஷ்ணன் கூறுகிறார்.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடிப்படை உலோகங்கள்!

''அமெரிக்கா மற்றும் சீனாவிலிருந்து டிமாண்ட் குறைந்ததன் காரணமாக சென்ற வாரத்தில் அடிப்படை உலோகங்களின் விலை குறைந்து வர்த்தகமானது. அடிப்படை உலோகங்களை அதிகம் பயன்படுத்தும் சீனாவில் தயாரிப்பு குறித்த புள்ளிவிவரங்கள் குறைவாக இருப்பதும் அடிப்படை உலோகத்திற்கு பாதகமாக இருக்கிறது. மேலும், எல்.எம்.இ. மற்றும் எஸ்.ஹெச்.எஃப்.இ. சந்தையில் அதிகப்படியான ஸ்டாக்குகள் இருப்பதும் விலை குறைவிற்கு காரணமாக அமைந்தது.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

அமெரிக்காவின் செலவினங் கள் குறைவு மற்றும் ஐரோப்பாவின் பொருளாதாரப் பிரச்னைகள் உள்ளிட்டவைகள் அடிப்படை உலோகத்தின் தேவையைத் குறைத்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்காவில் பொருளாதாரம் சீராவதும், சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி குறித்த புள்ளி விவரங்கள் அடுத்த வாரம் வெளிவர இருப்பதைப் பொறுத்து அடிப்படை உலோகங்களின் விலை இருக்கும்'' என்றார்.

தங்கம்!

கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவுக்கு ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்ததை அடுத்து தங்கத்தின் விலை சென்ற வாரம் வியாழக்கிழமையன்று அதிகரித்தது. அமெரிக்காவின் பாண்ட் வாங்கும் திட்டம் அங்கு பொருளாதாரம் சீரடையும் வரை தொடரும் என அறிவித் துள்ளதும் தங்கம் விலை உயர்வுக்கு இன்னொரு காரணம்.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

ஏப்ரல் 12 முதல் 16-ம் தேதி வரையில் சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸ் 225 டாலர் குறைந்து வர்த்தகமானதற்கு காரணம், அமெரிக்காவில் பாண்ட் வாங்கும் திட்டம் கைவிடப்படும் என்ற பயம்தான். மேலும், உலகளவில் பார்க்கும் போது, தங்கத்திற்கான பிஸிக்கல் டிமாண்ட் பாதியாகக் குறைந்துள்ளது. கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி பாண்ட் வாங்கும் திட்டம் தொடரும் எனவும் 85 பில்லியன் டாலர் மதிப்பிலான பாண்டுகள் வாங்கப்படும் எனவும் அறிவித்ததை அடுத்து டாலரின் மதிப்பு குறைந்து தங்கத்தின் மதிப்பு அதிகரித்தது.

சென்ற வாரத்தில் அமெரிக்காவின் வேலையில்லாத நபர்கள் வாங்கும் உதவித்தொகை எண்ணிக்கை 2007-2009 வருடத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள குறைவான எண்ணிக்கையாகும். வெள்ளியன்று வெளியான வேலை வாய்ப்பு பற்றிய புள்ளி விவரங்கள் அங்கு வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக வந்துள்ளது. இதன்பிறகு சர்வதேச சந்தையில் சற்று விலையேற்றம் காணப்பட்டது. இருந்தாலும் நடுத்தர காலத்தில் விலை இறங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

கச்சா எண்ணெய்!

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

கச்சா எண்ணெய்க்கான டிமாண்ட் குறைவு மற்றும் அதிகப்படியான உற்பத்தி உள்ளிட்ட காரணங்களால் கச்சா எண்ணெய்யின் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. அமெரிக்கா மற்றும் சீனாவில் டிமாண்ட் அதிகளவில் குறைந்துள்ளதால் இந்த விலை இறக்கம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைத்துள்ளது மற்றும் அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்கள் கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதும் கச்சா எண்ணெய் விலை சற்று முன்னேறி வருவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. எனினும், 1981 ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இன்வென்ட்டரி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயற்கை எரிவாயு!

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

அமெரிக்காவின் இயற்கை எரிவாயு இன்வென்ட்டரி அதிகரித்ததை அடுத்து சென்ற வாரத்தில் விலை 7 சதவிகிதம் வரை குறைந்தது. மேலும், குளிர்காலம் முடிந்து வெப்பம் நிலவுவதால் இயற்கை எரிவாயுக்கான தேவை குறைந்து வருகிறது. சென்ற வாரத்தில் நியூயார்க் சந்தையில் விலை குறைந்தே வர்த்தகமானது. டிமாண்ட் குறைவு மற்றும் உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வரும் வாரத்தில் இயற்கை எரிவாயு விலை குறைந்தே வர்த்தகமாகும்.

வெள்ளி!

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

தங்கத்தின் விலை அதிகரிப்பை அடுத்து வெள்ளியின் விலையும் சென்ற வாரத்தில் அதிகரித்து வர்த்தகமானது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஜூன் கான்ட்ராக்ட் வெள்ளியின் விலை 476 ரூபாய் அதிகரித்து 45,144 ரூபாய்க்கு வர்த்தகமானது. அமெரிக்காவின் வேலையில்லாத நபர்கள் வாங்கும் உதவித் தொகை புள்ளிவிவரங்கள் குறைந்திருப்பது மற்றும் டாலரின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் வெள்ளியின் விலை அதிகரித்தது. வரும் வாரத்தில் தங்கத்தின் விலையை பின்னோக்கி வெள்ளியின் விலை இருக்கும்.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)
கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism