Published:Updated:

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

Published:Updated:

 மிளகு! (Pepper)

##~##

மே மாத கான்ட்ராக்ட் மட்டுமே என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் இருப்பதாலும் ஷார்ட் கவரிங் நடந்ததாலும்  சென்ற வியாழன் அன்று மிளகு விலை சற்று உயர்ந்தது. சென்ற வாரம் கொச்சி சந்தைக்கு வார ஆரம்பத்தில் 78 டன்களாக வந்த மிளகு, வார இறுதியில் 50 டன்னாக குறைந்தது. சர்வதேச சந்தையில் இந்திய மிளகு ஒரு டன் 6,800 டாலருக்கு விலை கோரப்பட்டது. ஸ்பாட் விலையாக நூறு கிலோ 35,700 ரூபாய்க்கு வர்த்தகமானது. லாங்க் பொசிஷன் எடுத்தவர்கள் தாங்கள் வைத்திருந்த கான்ட்ராக்ட்களை விற்க முயன்றனர். புதிய கான்ட்ராக்ட் அறிமுகம் செய்யும்வரை மிளகு விலையில் மந்தநிலையே காணப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்ரி கமாடிட்டி !

 ஜீரகம்! (Jeera)

சர்வதேச அளவில் ஜீரகத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் துருக்கி மற்றும் சிரியாவில் அரசியல் பிரச்னைகள் காரணமாக உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. சென்ற வாரத்தில் நூறு கிலோ ஜீரகம் ஸ்பாட் விலையாக 12,800 ரூபாய்க்கு வர்த்தகமானது. குஜராத் மாநிலம் உஞ்ஹா சந்தையில் சென்ற வியாழன் அன்று வரத்து 20,000 பைகளிலிருந்து (ஒரு பை 55 கிலோ) 16,000 பைகளாக குறைந்தது.  உள்ளூர் மற்றும் அயல்நாட்டு தேவை குறைந்தே காணப்படுகிறது. ஜீரகத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு களிலிருந்து உற்பத்தி குறைந்துள்ளதால் இந்திய ஜீரகத்திற்கு வரும் வாரங்களில் நல்ல டிமாண்ட் இருக்கும். எனினும், இந்தியாவில் இந்த வருடம் உற்பத்தி உயர்ந்து 35 லட்சம் பைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் விலையேற்றம் அதிகளவு இருக்காது.

அக்ரி கமாடிட்டி !

மஞ்சள்! (Turmeric)

உள்நாட்டுத் தேவை அதிகமாக இல்லாதது மற்றும் அதிக கையிருப்பு போன்ற காரணங்களால் விலை மந்தமாகவே இருந்தது. குறைந்த விலையினால் வர்த்தகர்கள் புதிய ஸ்டாக் கொண்டுவராமல் உள்ளனர். வடமாநிலங்களில் இருந்து வரும் ஆர்டர்கள் சமீப நாட்களாக குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் 2,997 பைகள் ஈரோடு சந்தைக்கு வரத்து வந்ததில் 40 சதவிகிதம் மட்டுமே விற்பனையானது. குடோன்களில் பழைய மஞ்சள் இன்னும் இருப்பு இருப்பதால் அதுவும் விலையில் பிரதிபலித்தது.

அக்ரி கமாடிட்டி !

எனினும், மொத்த உற்பத்தி குறைந்துள்ளதால், விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது. கடந்த வாரத்தில் ஈரோடு சந்தையில் நூறு கிலோ 7,200 ரூபாய்க்கு வர்த்தகமானது. குறுகியகாலத்தில் பார்க்கும்போது, டிமாண்ட் குறைவாக இருப்பதால் விலை குறைந்து வர்த்தகமாகும். நீண்டகால நோக்கில் பார்க்கும்போது, உற்பத்தி குறைவாக இருப்பதால் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

ஏலக்காய்! (Cardamom)

அக்ரி கமாடிட்டி !

ஸ்பாட் சந்தையில் நல்ல டிமாண்ட் இருந்ததாலும், வர்த்தகர்கள் ஷார்ட் கவரிங் செய்ததாலும் சென்ற வாரத்தில் ஏலக்காய் விலை அதிகரித்து வர்த்தகமானது. சென்ற வியாழன் அன்று வரத்து 55 டன்னாகவும் விற்பனை 54 டன்னாகவும் இருந்தது. சென்ற வாரத்தில் குறைந்தபட்ச விலையாக கிலோ 574 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 866 ரூபாய்க்கும் வர்த்தகமானது. குறுகியகாலத்தில் பார்க்கும்போது, வரத்து குறைந்ததும், ஏற்றுமதி ஆர்டர்கள் வந்ததாலும் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. தென் இந்தியாவில் இந்தாண்டு பருவமழை பொய்த்ததால் ஏலக்காய் உற்பத்தி 20-25 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. மொத்தத்தில் பார்க்கும்போது, வரும் வாரத்தில் விலை அதிகரித்து ஏலக்காய் வர்த்தகமாகும்.

மிளகாய்! (chilli)

அக்ரி கமாடிட்டி !

ஆந்திர மாநிலம் குண்டூர் சந்தையில் வரத்து அதிகரித்ததாலும், டிமாண்ட் குறைந்ததாலும் சென்ற வாரத்தில் மிளகாய் விலை குறைந்து வர்த்தகமானது. மே 13-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை குண்டூர் சந்தைக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. வரத்து காலம் முடியப்போவதால் மேலும் விலை குறையாமல் தடுக்கப்பட்டது. கடந்த வருடத்தை ஒப்பிடும்போது, இந்த வருடம் 30 சதவிகிதம்வரை உற்பத்தி குறைந்துள்ளது. சென்ற வாரத்தில் குண்டூர் சந்தைக்கு 30,000 (ஒரு பை என்பது 45 கிலோ) பைகள் வரத்து வந்தது. நூறு கிலோ 5,700 ரூபாய்க்கு சென்ற வாரத்தில் வர்த்தகமானது.

கடுகு எண்ணெய்! (Mustard oil)

அக்ரி கமாடிட்டி !

கடந்த வாரத்தில் டிமாண்ட் குறைந்ததன் காரணமாக கடுகு எண்ணெய் விலை குறைந்து வர்த்தகமானது. சென்ற வருடத்தில் கடுகு விதை உற்பத்தி 58 லட்சம் டன்களாக இருந்தது; இந்த வருடம் 71 லட்சம் டன்னாக இருக்கும். மே மற்றும் ஜூன் மாத கான்ட்ராக்ட் விலை குறைவாக இருந்ததால் அதிகளவில் வர்த்தகர்கள் சென்ற வாரத்தில் வாங்கினர். சென்ற வாரத்தில் 2.80 லட்சம் பைகளாக வரத்து இருந்தது. இந்தோர் சந்தையில் 10 கிலோ கடுகு எண்ணெய் 632 ரூபாய்க்கு வர்த்தகமானது. வரும் வாரத்திலும் நடுத்தரமான விலையிலே கடுகு எண்ணெய் வர்த்தகமாகும்.

திருத்தம்: கடந்த இதழில் ஏலக்காய் விலை குறித்து கூறும்போது, ''குறைந்தபட்ச விலையாக நூறு கிலோ 614 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 894 ரூபாய்க்கும் வர்த்தகமானது'' என தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. 'நூறு கிலோ’ என்பதற்கு பதில் 'ஒரு கிலோ’ என திருத்திப் படிக்கவும். தவறுக்கு வருந்துகிறோம்.

அக்ரி கமாடிட்டி !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism