வெள்ளி!

இந்த வாரம் வெள்ளி குறித்து விளக்கமாக கூறுகிறார் ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் கமாடிட்டி கிளஸ்டர் ஹெட் சிவக்குமார்.

''சர்வதேச அளவில் வெள்ளிக்கான டிமாண்ட் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு திருப்திகரமாக இல்லை என வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். உலகின் மிகப் பெரிய இ.டி.எஃப். நிறுவனமான எஸ்.பி.டி.ஆர். சமீபநாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியை அதிகளவில் விற்று வருகிறது. இதுவும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய காரணம். இதன்காரணமாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள் மிகுந்த தடுமாற்றத்துடன் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. சோலார் பேனலில் வெள்ளி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. சோலார் பேனல் தேவை 2012-ம் வருடத்தில் 18 சத விகிதமாக இருந்ததிலிருந்து இந்த வருடம் 9 சதவிகிதமாக குறையும் என ஹெச்.எஸ்.பி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளியின் மொத்த தொழிற்துறை பயன்பாட்டில் சோலார் பேனல் தயாரிப்புக்கு 10 சதவிகிதம் செல்கிறது.

சீனாவில் அதிக கெப்பாசிட்டி மற்றும் லாபத்தில் குறைவு போன்றவற்றால் சோலார் பேனல் டிமாண்ட் குறையும் என தெரிகிறது. எனினும், எலெக்ட்ரானிக் தொழிற்சாலை பயன்பாடு, போட்டோகிராபி துறை பயன்பாடு குறைவு மற்றும் சப்ளை அதிகமாக உள்ளது போன்ற காரணங்களாலும், வெள்ளியின் விலை குறுகியகாலத்தில் விலை குறைந்தே வர்த்தகமாகும். வரும் வாரத்தில் வெள்ளி 44,200 ரூபாய்க்கு கீழ் சந்தை முடிந்தால் 43,320 ரூபாய்க்கு வரும். அதிலிருந்து 42,400 ரூபாய்க்கும் போக வாய்ப்புள்ளது. அல்லது 45,600 என்ற நிலையில் சந்தை முடிந்தால் அடுத்து 47,000 ரூபாய்க்கு வரும் வாரத்தில் வெள்ளி வர்த்தகமாகும்'' என்றார்.

தங்கம்!

டாலரின் மதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து தங்கத்தின் விலை சென்ற வாரத்தில் ஒரு சதவிகிதம் வரை குறைந்து வர்த்தகமானது. கடந்த நான்கு வருடங்களில் இல்லாதளவுக்கு யென் கரன்சிக்கு எதிரான டாலரின் மதிப்பு அதிகரித்தது. மேலும், அமெரிக்காவில் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையைப் பெறுகிறவர் களின் எண்ணிக்கை மே 4-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் குறைந்துள்ளது. 2008 ஜனவரி மாதத்திற்கு பிறகு இதுவே மிகக் குறைவு. சென்ற புதன்கிழமையில் ஆறு நாட்டு கரன்சியைவிட டாலரின் மதிப்பு அதிகரித்திருந்ததாக ஐ.சி.இ. டாலர் இண்டெக்ஸ் தெரிவித்தது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் சாதகமாக வந்தது, அங்கு பொருளாதாரம் முன்னேறி வருவதைக் காட்டுகிறது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் முழுவதும் டாலரின் பக்கம் திரும்பியதால் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதாமல் ரிஸ்க்கான முதலீடாகப் பார்த்தனர். இந்தியாவில் தங்கம் விலை வரும் வாரத்தில் குறைவதற்கான வாய்ப்புள்ளது.

கச்சா எண்ணெய்!

கடந்த வாரத்தில் யூரோ மற்றும் யென் கரன்சிக்கு எதிராக டாலரின் மதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வர்த்தகமானது. மேலும், சீனாவின் தொழிற்சாலை குறித்த புள்ளிவிவரங்கள் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் சீனாவிலிருந்து வரும் டிமாண்ட் கணிசமாக குறையும் என கூறப்படுகிறது. எனினும், அமெரிக்காவில் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை எண்ணிக்கை கடந்த வாரத்தில் குறைந்ததையடுத்து அங்கு பொருளாதாரம் முன்னேறி வருவது கச்சா எண்ணெய்க்கு சாதகமாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் சிரியா நாடு களுக்கிடையே போர் உருவாகும் அபாயம் நிலவுகிறது. இஸ்ரேல் சமீபத்தில் சிரியா மீது நடத்திய தாக்குதலுக்கு சிரியா தக்க பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு தலைவர் அறிவித்துள்ளார். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஏற்ப வரும் வாரத்தில் கச்சா எண்ணெய்யின் விலை இருக்கும்.

இயற்கை எரிவாயு!

பிராஃபிட் புக்கிங் காரணமாக சென்ற வாரத்தில் இயற்கை எரிவாயு விலை அதிகரித்து வர்த்தகமானது. எனினும், அதன்பிறகு வந்த இன்வென்ட்டரி குறித்த புள்ளிவிவரங்கள் எதிர்பார்த் ததைவிட அதிகரித்ததைத் தொடர்ந்து விலை மேலும் உயராமல் தடுக்கப்பட்டது. மே 3-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் அமெரிக்காவின் இயற்கை எரிவாயு ஸ்டோரேஜ் 88 பில்லியன் கியூபிக் ஃபீட்டாக அதிகரித்து, 1.865 டிரில்லியன் கியூபிக் ஃபீட்டாக உயர்ந்துள்ளதாக அமெரிக்காவின் எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததைவிட இன்வென்ட்டரி அதிகரித் துள்ளதால் வரும் வாரத்தில் இயற்கை எரிவாயு விலை குறைந்து வர்த்தகமாகும்.

அடிப்படை உலோகங்கள்!

டாலரின் மதிப்பு அதிகரித் ததைத் தொடர்ந்து அடிப்படை உலோகத்தின் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது.

சீனாவிலிருந்து வந்த சில புள்ளிவிவரங்கள் காப்பரின் டிமாண்டை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜெர்மனி குறித்த சில புள்ளி விவரங்கள் எதிர்பார்த்ததைவிட நன்றாக வந்துள்ளது.

எல்.எம்.இ. இன்வென்ட்டரி 75 டன் குறைந்து, 605,750 டன்னாக இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த இரு வாரங்களாக இன்வென்ட்டரி குறைந்து வருகிறது. சீனாவில் காப்பர் இறக்குமதி கடந்த ஏப்ரலில் 7.4% குறைந்துள்ளது. இது கடந்த 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவு. உலகப் பொருளாதார நிலவரம் முன்னேறி வருவது, எல்.எம்.இ. மற்றும் ஷாங்காய் குடோன்களில் இன்வென்ட்டரி குறைந்துள்ளதால் அடிப்படை உலோகத்தின் விலை வரும் வாரத்தில் அதிகரிக்கும்.