Published:Updated:

செக்டார் அனாலிசிஸ் - கை தருமா ஹாஸ்பிடாலிட்டி..?

செக்டார் அனாலிசிஸ் - கை தருமா ஹாஸ்பிடாலிட்டி..?

செக்டார் அனாலிசிஸ் - கை தருமா ஹாஸ்பிடாலிட்டி..?

செக்டார் அனாலிசிஸ் - கை தருமா ஹாஸ்பிடாலிட்டி..?

Published:Updated:
##~##

கோடை விடுமுறை என்றாலே நமக்கெல்லாம் கொண்டாட்டம்தானே! ஊட்டி, கொடைக்கானல் என சென்னையின் 40 டிகிரி கத்திரி வெயிலில் இருந்து தப்பிக்க கிளம்பியிருப்பீர்கள். ஆனால், ஹோட்டலில் ரூம் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பு! எவ்வளவு லாபம் ஈட்டவேண்டும் இந்தத் துறை!

ஆனால், உண்மை அதுவல்ல. நம்மூர் பெரிய ஹோட்டல்கள் எல்லாம் அதிகம் சம்பாதிப்பது வெளிநாட்டுப் பயணிகள் மூலம்தான். அக்டோபர்/நவம்பர் மாதம் துவங்கி, பிப்ரவரி/மார்ச் மாதம் வரை கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை எல்லா ஸ்டார் ஹோட்டல்களிலும் ரூம் கிடைக்கவே கிடைக்காது. நம்மூர் கோடை வெயிலைத் தாங்கமுடியாது என்பதால் பெரும்பான்மையான வெளிநாட்டுப் பயணிகள் வருகை பொதுவாகவே குறைவாக இருக்கும். எனவே, சீஸனைத் தவிர, மீதமுள்ள மாதங்களில் ஈ ஓட்ட வேண்டியதுதான்.

ஆக, இத்துறையின் மிகப் பெரிய பிரச்னையே இதுதான். சீஸனில் ரூம் கிடைக்காது; ஆஃப் சீஸனில் ஆட்களே வரமாட்டார்கள். இரண்டுக்கும் இடையில் சம்பாதிக்க வேண்டும். இதுதான் சிக்கல். இதை எப்படி கையாளுகிறார்களோ, அதைப் பொறுத்துதான் இவர்களின் லாபமும் அமைகிறது.  

இத்துறையில், இரண்டு வகை நிறுவனங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம். அவை: ஹோட்டல்கள் மற்றும் பயண வடிவமைப்பு / திட்டமிடல் நிறுவனங்கள். ஹோட்டல்கள் என பார்க்கையில், இந்தியன் ஹோட்டல், ஈஸ்ட் இந்தியா ஹோட்டல், ஓரியன்டல் ஹோட்டல், தாஜ் ஜி.வி.கே., சவேரா போன்றவை அடங்கும். காக்ஸ் அண்டு கிங்ஸ், தாமஸ் குக் போன்ற நிறுவனங்கள் பயண வடிவமைப்பு நிறுவனங்களாகும்.

செக்டார் அனாலிசிஸ் - கை தருமா ஹாஸ்பிடாலிட்டி..?

'ப்ரிக்’ நாடுகளை எடுத்துக்கொண்டால், ஆண்டுக்கு 18 சதவிகித சராசரி வளர்ச்சியுடன் பிரேசிலுக்குத்தான் முதல் இடம். அடுத்ததாக, 9 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சியில் சீனாவும், 8 சதவிகித வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில்தான் இந்தியாவும் வருகிறது. இதுவும் அவ்வப்போது அடி வாங்கும். மேலே சொன்ன மாதிரி, சீஸனல் ஏற்ற, இறக்கங்கள் ஒருபக்கம், வேலைக்கு ஆட்கள் பிரச்னை மறுபக்கம். கடந்த பத்து ஆண்டுகளில் ஹோட்டல்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் காரணமாக நல்ல பயிற்சி பெற்ற ஆட்கள் வேலைக்குக் கிடைப்பது கடினமாக இருக்கிறது.

செக்டார் அனாலிசிஸ் - கை தருமா ஹாஸ்பிடாலிட்டி..?

புதியவர்களை எடுத்து பயிற்சி தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அப்படியே பயிற்சி தந்தாலும், போட்டியாளர்கள் காத்திருந்து அவர்களைக் கொத்திக்கொண்டு போவதும் இன்று நடக்கிறது. இதனால் சம்பளச் செலவுகள் கடுமையாக அதிகரித்துவிட்டன.  

கடந்த பத்து ஆண்டுகளில் யானை விலை குதிரை விலையாக அதிகரித்த ரியல் எஸ்டேட் விலையும் இத்துறையின் வளர்ச்சிக்கு பெரிய முட்டுக்கட்டையாக விளங்குகிறது. இரண்டாம் கட்ட நகரங்களில்கூட இட விலை கடுமையான ஏற்றத்தைச் சந்தித்திருப்பது இத்துறைக்குப் பெரிய பின்னடைவு.

சுனாமி, பூகம்பம் என இயற்கையும் ஒரு கட்டத்தில் இத்துறைக்கு எதிராக இருந்தது. உடனே கடற்கரைக்கு அருகே இருக்கும் எல்லா ஹோட்டல்களும் காலி! இதில் இருந்து ஒரு வழியாக மீண்டு எழுந்தால், அடுத்து வந்தது பொருளாதாரத் தேக்கநிலை. டூரிஸ்ட்களும் இல்லை; தொழிற்துறையும் காலி என்பதால் எல்லா ஹோட்டல்களிலும் அறைகளும் காலி. பின்னர் வந்தது மும்பை தீவிரவாத அட்டாக்! ஏற்கெனவே நம்மூர் சுகாதாரச் சூழலை எப்போதுமே எள்ளி நகையாடும் சர்வதேச ஊடகங்களுக்கு இந்த நிகழ்வு வகையாகச் சிக்கியது. அவ்வளவுதான்; இந்தியாவே ஏதோ தீவிரவாத நாடு போல

செக்டார் அனாலிசிஸ் - கை தருமா ஹாஸ்பிடாலிட்டி..?

சித்தரிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்தால் இப்போது கடுமையான போட்டிகள் காரணமாக மீண்டும் வளர்ச்சி குறைவாக இருக்கிறது.  

பல அடுக்கு அரசு வரிச்சுமை, இத்துறையைப் பாதிக்கும் இன்னொரு முக்கியமான விஷயம். அரசு அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதங்கள், செலவு வகைகளை அதிகப்படுத்துகின்றன. இந்தமாதிரி சிக்கல்கள், சிலசமயம் இத்தொழிலை லாபமற்றதாகவும் ஆக்கிவிடுகிறது.

இத்துறையின் எதிர்கால வளர்ச்சிக்குச் சாதகமான அம்சங்களும் இல்லாமலில்லை; விசா ஆன் அரைவல் வசதி என எளிமைப்படுத்தப் பட்ட விசா முறை ஜனவரி 2010-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது; முதல்கட்டமாக பின்லாந்து, ஜப்பான், லக்ஸம்பர்க், நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதல்கட்டமாக இதில் அடக்கம். ஜனவரி 2011-ல், கம்போடியா, இந்தோனேஷியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், லாவோஸ் மற்றும் மியான்மர் உள்ளிட்ட ஆறு நாடுகள் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டன.

நம் நாட்டில் வந்திறங்கியவுடனேயே இத்திட்டத்தின் கீழ் விசா தரப்படும். இந்த ஆண்டு மட்டுமே முதல் நான்கு மாதங்களில் இந்நாடுகளில் இருந்து மட்டும் 7,000 பேருக்கு மேல் வருகை தந்திருக்கின்றனர். இத்திட்டம் மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர் வருவதற்கு இத்திட்டம் வழிவகுக்கும் என நம்பலாம்.

செக்டார் அனாலிசிஸ் - கை தருமா ஹாஸ்பிடாலிட்டி..?

பொருளாதார/தனிநபர் வருவாய் அதிகரிப்பு காரணமாக இந்தியர்களும் அதிகம் பயணம் செய்யத் துவங்கி யிருக்கிறார்கள். குறிப்பாக, நடுத்தட்டு/மேல்நடுத்தட்டு மக்கள். இத்துறையின் சீரான வளர்ச்சிக்கு இது முக்கியம். மேக் மை ட்ரிப் மாதிரியான ஆன்லைன் புக்கிங் பிரபலமாகி வருவதும், டைகர் ஏர்வேஸ் போன்ற பட்ஜெட் ஏர்லைன்ஸ் பிரபலமாவதும் இத்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு வித்தாகும்.

செக்டார் அனாலிசிஸ் - கை தருமா ஹாஸ்பிடாலிட்டி..?

பின்னடைவில் இருந்து வெளிப்பட்டு, சர்வதேச பொருளாதாரச் சூழல் இப்போது ஸ்திரமாவதின் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கிறது. வெளிநாடுகளில் ஹோட்டல்கள் வைத்திருக்கும் இந்தியன் ஹோட்டல்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு இது பலமளிக்கும்.    

சமீப காலமாக, ரியல் எஸ்டேட் விலைகளும் ஓரளவுக்கு ஸ்திரம் அடைய ஆரம்பித்திருப்பது, இரண்டாம்கட்ட நகரங்களில் செயின் ஹோட்டல்கள் துவங்கத் திட்டமிட்டிருக்கும் நிறுவனங்களுக்கு நல்லது. நம் நாடு முழுக்கப் பரவி இருக்கும் பாரம்பரியமிக்க சரித்திர பிரசித்தி பெற்ற இடங்கள், சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சம். குறிப்பாக, அமெரிக்கர்களை. நம் நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறைக்கு (Current Account Deficit) அத்தியாவசியத் தேவையான அந்நியச் செலாவணியை அதிக அளவில் ஈட்டித்தர வாய்ப்புள்ள செக்டார் இது என்பதால் அரசிடமிருந்து மேலும் சில சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

முதலீட்டுக்கு ஏற்ற நிறுவனங்கள்:

இந்தியன் ஹோட்டல்ஸ்:

தற்போது சந்தித்துவரும் பல்வேறு சிக்கல்களுக்கு நடுவிலும்கூட, நீண்டகால அடிப்படையில் நல்ல முதலீடு. டாடா குழுமம்; பெரிய நெட்வொர்க்; பன்னாட்டு நிறுவனம் என்றுகூடச் சொல்லலாம் ஒருவகையில். இப்போதைய விலை யிலேயே வாங்கத் துவங்கலாம்.

தாமஸ் குக்:

பயணத் திட்டமிடும்/வடிவமைக்கும் நிறுவனம். வெளிநாட்டுப் பயணம் என்றாலே பெரும்பாலோருக்கு நினைவுக்கு வருவது இந்நிறுவனம்தான். இப்போதைய விலை கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், நீண்டகால அடிப்படையில் வாங்கிச் சேர்க்கலாம்.

காக்ஸ் அண்டு கிங்ஸ்:

தாமஸ் குக்கைவிட எந்தவிதத் திலும் குறைந்ததல்ல இந்நிறுவனம். இப்போது இறங்குமுகத்தில் உள்ள பங்கின் விலை, மேலும் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை இறக்கத்தின்போது வாங்கலாம்.

கவனிக்கவேண்டிய பங்குகள்!

சவேரா இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட்,
ஈஸ்ட் இந்தியா ஹோட்டல்,
ஹோட்டல் லீலா வென்சர்ஸ்,
ஓரியன்டல் ஹோட்டல்ஸ்,
தாஜ் ஜி.வி.கே,
காமத் ஹோட்டல்ஸ்,
ராயல் ஆர்சர்ட் ஹோட்டல்ஸ்.
(அலசுவோம்)