Published:Updated:

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

Published:Updated:

வர்த்தகம்

மிளகு! (Pepper)

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிக ஏற்ற, இறக்கங்கள் இல்லாமல் சென்ற வாரத்தில் மிளகு விலை நடுநிலையாக வர்த்தகமானது. கொச்சி சந்தையில் நூறு கிலோ மிளகு 35,000 ரூபாய்க்கு சென்ற வாரத்தில் வர்த்தகமானது. இந்தியாவைப் பொறுத்தவரை உள்நாட்டு தேவைக்கே மிளகு சரியாகி விடுகிறது என கூறப்படுகிறது. ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் 7,000 டன் மிளகு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே, சென்ற வருடத்தில் 9,000 டன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே காலக்கட்டத்தில் வியட்நாமிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மிளகு சுமார் 50,000 முதல் 53,000 டன்களாக உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக சுமார் 1,20,000 டன் மிளகு ஆண்டுக்கு வியட்நாமில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எனினும், சீதோஷ்ண நிலை சரியில்லாத காரணத்தால் இந்த வருடம் வியட்நாமில் உற்பத்தி குறையும் என கூறப்படுகிறது. வரும் வாரத்திலும் நிலையாகவே மிளகு வர்த்தகம் இருக்கும்.

அக்ரி கமாடிட்டி !

ஜீரகம்! (Jeera)

முக்கிய சந்தைகளில் சென்ற வாரத்தில் ஜீரகத்தின் விலை அதிகரித்து வர்த்தகமானது. உள்நாட்டு டிமாண்ட் அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகமாக வருவது உள்ளிட்ட காரணங்களால் ஜீரகத்தின் விலை அதிகரித்தது. சென்ற வாரத்தில் நூறு கிலோ 13,100 ரூபாய்க்கு வர்த்தகமானது.  குஜராத் மாநிலம் உஞ்ஹா சந்தைக்கு தின வரத்தாக சென்ற வாரத்தில் 11,000 பைகள் (ஒரு பை என்பது 55 கிலோ)  வரத்து வந்தன. சிரியா மற்றும் துருக்கியில் உற்பத்தி பாதிப்படைந்துள்ளதால் இந்திய ஜீரகத்திற்கான ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்துள்ளது. எனினும், இந்தியாவில் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானதால், மேலும் விலை அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது. இந்த வருடத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஜீரகம் 34-35 லட்சம் பைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த வருடத்தைவிட அதிகமானதாகும். வரும் வாரத்திலும் விலை அதிகரித்தே ஜீரகம் வர்த்தகமாகும். என்.சி.டி.எக்ஸ். ஜூன் கான்ட்ராக்ட்டை 12,950-13,000 அளவில் வாங்கலாம். டார்கெட் 13,500, ஸ்டாப்லாஸ்-12,850. விலை 12,900க்கும் கீழே தொடர்ந்து முடிவடைந்தால் மேலும் விலையிறக்கம் இருக்கும்.

அக்ரி கமாடிட்டி !

மஞ்சள்! (Turmeric)

சென்ற வாரத்தில் மஞ்சளின் விலை அதிகரித்து வர்த்தக மானது. எனினும், அதிகப்படியான கேரிஓவர் ஸ்டாக் மற்றும் டிமாண்ட் குறைவு உள்ளிட்ட காரணங்களால், மேலும் விலை அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது. நிஜாமாபாத் சந்தைக்கு 5,000 பைகளும், ஈரோடு சந்தைக்கு 2,500 பைகளும் மஞ்சள் வரத்து சென்ற வியாழன் வந்தது. ஈரோடு சந்தையில் நூறு கிலோ மஞ்சள் 6,900 ரூபாய்க்கு வர்த்தகமானது. மஞ்சள் கான்ட்ராக்ட்டை பொறுத்தவரை கான்ட்ராக்ட் எடுக்கும்போது அதன் டிக்கெட் விலை 2 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும், லாட் அளவு 5 டன்னிலிருந்து ஒரு டன்னாக குறைக்கவும் இருந்ததை ஒத்திவைத்துள்ளதாக என்.சி.டி.இ.எக்ஸ். தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் வாரத்தில் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அக்ரி கமாடிட்டி !

ஏலக்காய்! (Cardamom)

வரத்து அதிகமாக இருந்ததால் சென்ற வாரத்தில் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. தரமான உற்பத்தி மற்றும் சீதோஷ்ண நிலை காரணமாக உற்பத்தி நன்றாக இருக்கும் என்பவை விலையில் பிரதிபலிக்கும். கேரளா மற்றும் தமிழ்நாட்டின் புதிய வரத்து வரும் ஜூன் மாதத்திலிருந்து தொடங்கும். மேலும், இறக்குமதி அதிகரித்த தால் ஏலக்காய் விலையில் பாதிப்பு ஏற்பட்டது. சென்ற வியாழன் ஏலத்திற்கு 61 டன் ஏலக்காய்  வந்தது. ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 537 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 862 ரூபாய்க்கும் சென்ற வாரத்தில் வர்த்தகமானது. சென்ற வருடத்தை ஒப்பிடும்போது இந்த வருடம் ஏலக்காய் உற்பத்தி இந்தியாவில் 20-25 சதவிகிதம் வரை குறையும் என தெரிகிறது.

அக்ரி கமாடிட்டி !

மிளகாய்! (Chilli)

சென்ற வாரத்தில் மிளகாய் விலை குறைந்து வர்த்தகமானது. ஆந்திர மாநிலம் குண்டூர் சந்தைக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஸ்பாட் சந்தையில் டிமாண்ட் எவ்வளவு, சப்ளை எவ்வளவு என்பது தெரியாமல் இருப்பதால் கான்ட்ராக்ட் எடுப்பதில் வர்த்தகர்கள் மத்தியில் சற்று குழப்பமான சூழ்நிலை நிலவியது. அதிக கையிருப்பால் ஏற்றுமதியும் மந்தநிலையில் உள்ளது. எனினும், வரத்து காலம் இந்த மாத இறுதியில் முடிவடையவிருப்பதால், மேலும் விலை குறையாமல் தடுக்கப்பட்டது. சென்ற வருடத்தை ஒப்பிடும்போது, இந்த வருடம் 30 சதவிகிதம் உற்பத்தி குறையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் வாரத்திலும் விலை குறைந்து மிளகாய் வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !

கடுகு எண்ணெய்! (Mustard oil)

வரத்து குறைந்ததால் சென்ற வாரத்தில் கடுகு எண்ணெய் விலை அதிகரித்து வர்த்தகமானது. திருமண சீஸன் என்பதால் குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடுகு விதைக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. சென்ற வாரத்தைவிட கடுகு எண்ணெய் விலை 9 ரூபாய் அதிகரித்து, பத்து கிலோ 650 ரூபாய்க்கு வர்த்தகமானது. வாங்கும் டிமாண்ட் அதிகரிப்பு மற்றும் வரத்து குறைவு காரணமாக ராஜஸ்தான் சந்தையிலும் விலை அதிகரித்தது. கடுகு விதை ஒரு குவிண்டால் 4,200-4,300 ரூபாய்க்கு விலை போனது. என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஜூன் மற்றும் ஜூலை கான்ட்ராக்ட் குவிண்டால் 3,509 மற்றும் 3,556 ரூபாய்க்கு வர்த்தகமானது.

அக்ரி கமாடிட்டி !

சென்ற வாரத்தில் தினவரத்தாக 2.65 லட்சம் பைகள் நாடு முழுவதும் உள்ள மண்டிகளில் வரத்து வந்துள்ளது. சீனா கடுகு எண்ணெய் இறக்குமதிக்கு விதித்தி ருந்த தடையை விலக்கியுள்ளது. சீனாவின் இறக்குமதியில் 80 சதவிகிதம் இந்தியாவிலிருந்துதான் வருகிறது. ஆறுமாதம் வரை இறக்குமதி வரி இருக்காது. டிமாண்ட் இருப்பதால் வரும் வாரத்திலும் சற்று விலை அதிகரித்து கடுகு எண்ணெய் வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism