Published:Updated:

தங்கம்... இன்னும் எவ்வளவு குறையும்..?

வா.கார்த்திகேயன்

தங்கம்... இன்னும் எவ்வளவு குறையும்..?

வா.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

ஏப்ரல் 15-ம் தேதி ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை 9 சதவிகிதம் அளவுக்கு குறைந்தது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஏற்பட்ட பெரிய சரிவு இது. இதன்பிறகு தங்கம் விலை கொஞ்சம் உயர்ந்தது.

தங்கம்... இன்னும் எவ்வளவு குறையும்..?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் கடந்த வாரம், தங்கம் வீழ்ச்சி தொடருமா, வாங்கும் தருணமா என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில் சர்வதேச சந்தையில் 1,200 டாலர் வரை குறைய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி இருந்தோம்.  கடந்த திங்களன்று ஒரு அவுன்ஸ் 1,336 டாலர் வரைக்கும் சென்றது. இதுபோன்று ஏற்ற இறக்கம் அதிகம் உள்ள நிலையில் தங்கத்தின் நிலைமை என்னவாகும் என ஆனந்த்ரதி-ன் சீனியர் அனலிஸ்ட் சிவசுப்ரமணியம் பல தகவல்களுடன் நம்மிடம் பேசினார்.

திங்களன்று காலையில் ஆசிய சந்தை களிலே தங்கம் சரிந்தது. இதற்கு காரணம், முக்கியமான ஒரு பெரிய முதலீட்டு வங்கி அதிகளவில் வெள்ளியை விற்கப்போவதாக வந்த செய்திதான். வெள்ளியைத் தொடர்ந்து தங்கமும் சரிந்தது. மேலும், கடந்த இரண்டரை வருடங்களில் இல்லாத அளவுக்கு டாலர் இண்டெக்ஸ் அதிகமாக இருந்ததாலும் தங்கம் சரிந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை, முக்கியமான தரக்குறியீட்டு நிறுவனமான 'மூடி’ அமெரிக்காவை டவுன் கிரேடு செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் வந்ததும், மீண்டும் தங்கம் உயர்ந்தது.

தங்கம்... இன்னும் எவ்வளவு குறையும்..?

புதன்கிழமை அமெரிக்க காங்கிரஸில் ஃபெடரல் ரிசர்வ்-ன் தலைவர் பென் பெர்னான்கி பேசினார். அப்போது, அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து வளராதபட்சத்தில் கியூ.இ.3 (புதிதாக பணத்தை அச்சடிப்பது) தொடரும் என்று சொன்னவுடன், தங்கம் 1,413 டாலர் வரைக்கும் சென்றது. பிறகு கேள்வி நேரத்தில், வளர்ச்சி தொடர்ந்தால், கியூ.இ.3 குறைக்கப்படும் என்று சொன்னவுடன் தங்கம் விலை மீண்டும் சரிந்தது.

இதற்கிடையே மே மாதம் முதல் வாரத்தில் நடந்த எஃப்.எம்.ஓ.சி. மீட்டிங்கில் பெரும்பாலானவர்கள் கியூ.இ.3-யை நிறுத்தவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். (இதில் பெரும்பாலானவர்கள் ஜூன் மாதம் முதலே குறைக்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்!) ஆனால், எந்த தகவலின் அடிப்படையில் குறைக்கவேண்டும் என்பதில் அவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை.

தங்கம் விலை உயர்ந்ததற்கு முக்கியமான காரணங்கள், அமெரிக்கப் பொருளாதாரப் பிரச்னை, பலவீனமான டாலர், ஐரோப்பிய யூனியன் உடையுமோ என்ற கவலை, அதிகளவு இ.டி.எஃப். முதலீடு, பிஸிக்கல் தங்கத்தின் தேவை. இப்போது பிஸிக்கல் தங்கத்துக்கான தேவையைத் தவிர மற்ற எதுவுமே தங்கத்தின் விலை உயர்வதற்கு சாதகமாக இல்லை. மேலும், உலகளவில் பணவீக்கமும் பெரிதாக இல்லை.

தங்கம் விலை உயர்வதற்கு இன்னொரு சிறிய காரணமும் இருக்கிறது. அதிக செலவு காரணமாக அமெரிக்கா கடன் வாங்கவேண்டிய கட்டாயம். ஒருகட்டத்தில் இந்தக் கடன் அதிகமாகச் செல்லவே, அடுத்த 9 ஆண்டுகளில் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் அளவுக்கு செலவுகளை குறைக்கும் முடிவை கடந்த மார்ச் மாதத்தில் எடுத்தது அமெரிக்கா. இதனால் ஜி.டி.பி. 0.06 சதவிகிதம் குறையும்; அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி செலவைக் குறைப்பது பொருளாதாரத்தில் நெகட்டிவ் பாதிப்புகளையே உண்டாக்கும்.

இதனால் கியூ.இ.3 தொடரும் என்று பலரும் நினைப்பதால், தங்கம் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. தங்கம் விலை அப்படி உயர்ந்தாலும் கூட, ஏறிய வேகத்தில் இறங்க வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், அமெரிக்கா தவிர, வேறு எந்த நாடும் இதுபோல சலுகைகளைக் குறைக்க நினைக்கவில்லை. மாறாக, அதிகரிக்கவே நினைக்கிறார்கள். ஜப்பான் புதிய சலுகைகளை வழங்கி இருக்கிறது. ஐரோப்பிய

தங்கம்... இன்னும் எவ்வளவு குறையும்..?

யூனியனும் எந்த சலுகையையும் நிறுத்துகிற மாதிரி தெரியவில்லை.  அதனால் டாலர் உயர வாய்ப்பு இருக்கிறது. இதனால் தங்கம் சரியும்.

மேலும், அடுத்த ஆண்டு முதல் மாதத்தில் பென் பெர்னான்கி காலம் முடிவு அடைவதால்,  இவருக்கு அடுத்து தலைவராக வர வாய்ப்பு இருப்பவர்கள் அனைவரும், கியூ.இ.3-யை குறைக்கவே வாய்ப்பு அதிகம். அப்படி குறைக்கும் பட்சத்தில் டாலர் மதிப்பு உயரும், தங்கம் விலை குறையும்.

தங்கம் விலை சரிய வாய்ப்பு இருக்கிறது என்றாலும், குறைகிற வாய்ப்பை பயன்படுத்தி முதலீடு செய்யலாம். 1975-ம் ஆண்டில் 40 சத விகிதமும், 1980-களில் 50 சதவிகிதமும் விலை குறைந்தது. இந்த அளவுக்கு சரிய ஆரம்பித்த போதும், தங்கம் இனி அவ்வளவுதான் என்று பேச்சு இருந்தது. ஆனாலும், மீண்டு வந்தது. இனி தங்கம் சரிந்தாலும் நீண்டகாலத்துக்கு இப்போது வாங்குவது நல்லது. ஒரு கிராம் 2,300 ரூபாய்க்கு (22 கேரட்) வரும்போது முதலீட்டை தொடரலாம். இது 2,100 வரைக்கும் செல்லலாம். இது தங்கத்தின் உற்பத்தி விலைக்கு அருகே இருக்கும் விலைதான் என்பதால் இதற்கு கீழே செல்ல வாய்ப்பு இல்லை'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism