Published:Updated:

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

பானுமதி அருணாசலம்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

பானுமதி அருணாசலம்.

Published:Updated:

வர்த்தகம்

##~##

இந்த வாரம் வெள்ளி குறித்து விளக்கமாக கூறுகிறார் ஐ.எஃப்.ஐ.என். கமாடிட்டி நிறுவனத்தின் ரிசர்ச் அனலிஸ்ட் ரங்கராஜன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெள்ளி!

''தொழிற்சாலையில் அதிக அளவில் உபயோகிக்கப்படும் வெள்ளியின் பயன்பாடு, இந்த வாரம் உலகப் பொருளாதார நிலவரங்கள் சரியில்லாத காரணத்தால் குறைந்தது. தங்கத்தின் விலை குறைவு வெள்ளியிலும் பிரதிபலித்தது. வரும் மாதத்தில் அமெரிக்காவில் கியூ.இ.3-யை  குறைக்கவிருப்பதாக அமெரிக்க ஃபெடரல் வங்கித் தலைவர் அறிவித்திருப்பதும் வெள்ளியின் விலையில் பிரதிபலித்தது.

சீனாவின் பி.எம்.ஐ. கடந்த ஏழு மாதங்களில் இல்லாதளவுக்கு இந்த மே மாதத்தில் குறைந்து 49.6 சதவிகிதமாக இருந்தது. இது அங்கு பொருளாதாரம் சரிவடைந்து வருவதைக் காட்டுகிறது. அமெரிக்காவில் கியூ.இ.3 பாலிசியைக் குறைக்க ஃபெடரல் வங்கி நடவடிக்கை எடுத்து வருவது அங்கு பொருளாதாரம் முன்னேறி வருவதைக் காட்டுகிறது. தவிர, அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட குறைந்துள்ளது. மேலும், அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய வீட்டு விற்பனை 2.3 சதவிகிதம் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது.

கமாடிட்டி -  மெட்டல் - ஆயில்

கியூ.இ.3 நடவடிக்கையால் டாலரின் மதிப்பு அதிகரித்து வரும் வாரத்தில் வெள்ளியின் விலை குறையும். எனினும், ரூபாயின் மதிப்பு குறைந்தால், விலை மேலும் குறையாமல் தடுக்கப்படும். எம்.சி.எக்ஸ். சந்தையில் 44,600 ரூபாய் ஸ்ட்ராங் ரெசிஸ்டன்ஸாக கொள்ளவும். இதைத் தாண்டி சென்றால், 45,300-45,800 ரூபாய்க்குச் செல்லும். சப்போர்ட் 42,400, 41,500, 40,800 என கொள்ளவும். 44,500-44,600 ரூபாய் வரும்போது விற்றுவிடலாம்.''

தங்கம்!

சென்ற வார ஆரம்பத்தில் விலை குறைந்து இருந்த தங்கம் வார இறுதியில் விலை அதிகரித்தது. கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு சீனாவின் பி.எம்.ஐ. விகிதம் குறைந்தது, வர்த்தகர்கள் தங்கத்தின் மீது கவனம் செலுத்த காரணமாக அமைந்தது. அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி  கியூ.இ.3 பாலிசியைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளதும் டாலரின் மதிப்பைக் குறைத்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியா மற்றும் சீனாவில் பிஸிக்கல் தங்கத்திற்கான டிமாண்ட் கடந்த இரண்டு வருடங்களில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம், தங்கத்தின் விலை அவுன்ஸ் 1,387 டாலருக்கு சென்றதே.

அமெரிக்காவின் வேலையில்லாத நபர்கள் உதவித் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது, அங்கு பொருளாதாரம் முன்னேறி வருவதைக் காட்டுவதால், வரும் வாரத்தில் தங்கத்தின் விலை குறையவே அதிக வாய்ப்புள்ளது.

கமாடிட்டி -  மெட்டல் - ஆயில்

  கச்சா எண்ணெய்!

ஃபெடரல் வங்கியின் கியூ.இ.3 பாலிசி குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் சீனாவின் தயாரிப்பு குறித்த புள்ளிவிவரங்கள் குறைவு உள்ளிட்ட காரணங்களால் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. பிரன்ட் கச்சா எண்ணெய் 1.4 சதவிகிதம் வரை குறைந்தது. எம்.சி.எக்ஸ். ஜூன் கான்ட்ராக்ட் சப்போர்ட் 5,160

ரூபாயாகக் கொள்ளவும். இதிலிருந்து விலை ஏறினால் 5,305 ரூபாய்வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை விலை குறைந்தால் 5,120 ரூபாய் என்ற நிலையில் இறங்கும். உலக நிலவரங்களைப் பார்க்கும்போது, வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

கமாடிட்டி -  மெட்டல் - ஆயில்

  இயற்கை எரிவாயு!

கமாடிட்டி -  மெட்டல் - ஆயில்

அமெரிக்காவின் இயற்கை எரிவாயு ஸ்டாக் சென்ற வாரத்தில் அதிகரித்தது. சென்ற வார முடிவில் 89 பில்லியன் கியூபிக் ஃபீட் இயற்கை எரிவாயு ஸ்டாக் அதிகரித்து 2.053  டிரில்லியன் கியூபிக் ஃபீட்டாக உள்ளது. இயற்கை எரிவாயுக்கான தேவை அந்தளவுக்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும், ஸ்டாக் நிலவரங்கள் மற்றும் இன்வெட்டரி மட்டுமே விலையைத் தற்போது தீர்மானித்து வருகிறது.

  அடிப்படை உலோகங்கள்!

அடிப்படை உலோகங்களை அதிகளவில் பயன்படுத்தும் சீனாவில் பி.எம்.ஐ. விகிதம் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. உலக காப்பர் பயன்பாட்டில் சீனா மட்டும் 40 சதவிகித பயன்பாட்டை கொண்டுள்ளது. நிமிக்ஸ் சந்தையில் சென்ற வாரத்தில் காப்பர் ஜூலை கான்ட்ராக்ட் 2.3 சதவிகிதம் வரை குறைந்தது. மற்ற தொழில் துறை உலோகமான அலுமினியம் 1.4 சதவிகிதமும், நிக்கல் 2 சதவிகிதமும் விலை குறைந்தது. மேலும், ஜிங்க் 1.4 சதவிகிதமும், லெட் 1.2 சதவிகிதமும் சர்வதேச சந்தையில் விலை குறைந்தது. இதன் முக்கிய காரணம், சீனாவின் பொருளாதார புள்ளிவிவரம் குறைந்ததே. அடிப்படை உலோகத்தின் தேவை அதிகளவில் குறையும் என்ற எதிர்பார்ப்பால் வரும் வாரத்திலும் விலை குறைந்து வர்த்தகமாகும்.

கமாடிட்டி -  மெட்டல் - ஆயில்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism