பிரீமியம் ஸ்டோரி

வர்த்தகம்

 மிளகு! (Pepper)

##~##

தேவை அதிகமாக இருந்த காரணத்தால் சென்ற வாரத்தில் மிளகு விலை அதிகரித்து வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் மிளகு விலை நடுநிலையாகவே இருந்தது. மிளகை உற்பத்தி செய்யும் பெரும்பாலான நாடுகளில் அதன் விலை குறைந்தே இருந்தன. வியட்நாம் நாட்டில் அதிக விலையை எதிர்பார்த்து விவசாயிகள் மிளகை ஸ்டாக் செய்து வைத்துள்ளனர். இந்தோனேஷியாவின் முக்கிய மிளகு சந்தையான லாம்பங் மார்க்கெட்டில் வாங்குவோர் அதிகம் இல்லாததால் விலையும் குறைந்தே காணப்பட்டது. அங்கு உற்பத்தியாகும் கறுப்பு மிளகின் அளவு கணிசமாக குறையும் என்றே சொல்லப்படுகிறது. சுமத்ரா தீவுப் பகுதியைச் சேர்ந்த பங்கா சந்தையில் வெள்ளை மிளகு விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. அங்கு வரும் ஜூன் மாதத்திலிருந்து மிளகு அறுவடை செய்யப்படும். தேவை அதிகமாக இருப்பதால் வரும் வாரத்திலும் விலை அதிகரித்தே வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !

ஜீரகம்! (Jeera)

ஸ்பாட் சந்தையில் தின வரத்து அதிகமாக இருந்ததும், உள்நாட்டு தேவை அதிகமாக இருந்ததாலும் சென்ற வாரத்தில் ஜீரகத்தின் விலை ஏற்ற, இறக்கம் கலந்த கலவையாக வர்த்தகமானது. சென்ற வியாழக்கிழமையன்று ஊஞ்ஹா சந்தையில் வரத்து கணிசமாக குறைந்தது. அதற்கு முந்தைய தினம் வரை தினமும் 16,000 பைகள் (ஒரு பை என்பது 55 கிலோ) வந்தன. எக்ஸ்சேஞ்சில் திரும்பத் தருகிற அளவுக்கு தரம் வாய்ந்த நூறு கிலோ ஜீரகம் 13,200 ரூபாய்க்கு வர்த்தகமானது. சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் துபாய் நாடுகளிலிருந்து இந்திய ஜீரகத்திற்கு நல்ல டிமாண்ட் இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜீரகத்தை அதிகம் விளைவிக்கும் நாடுகளில் உற்பத்தி குறைந்திருக்கிறது. இதில் குறிப்பாக, சிரியா மற்றும் துருக்கி நாடுகளில் உற்பத்தி கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இந்தியாவில் இந்த வருடம் உற்பத்தி அதிகமாக இருக்கும் என கூறப்பட்டதால், மேலும் விலை உயராமல் தடுக்கப்பட்டது. இந்த வருடம் இந்தியா 35 லட்சம் பைகள்  உற்பத்தி செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவை அதிகமாக இருப்பதால் வரும் வாரத்தில் விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

அக்ரி கமாடிட்டி !

மஞ்சள்! (Turmeric)

முக்கிய சந்தைகளில் மஞ்சளின் விலை குறைந்து சென்ற வாரத்தில் வர்த்தகமானது. அதிகப்படியான கையிருப்பு மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் டிமாண்ட் குறைவு உள்ளிட்ட காரணங்களால்

மஞ்சளின் விலை குறைந்தது. தரம் குறித்த சந்தேகம் மேலும் விலை குறைய காரணமாக அமைந்தது. சென்ற வாரத்தில் நிஜாமாபாத் சந்தையில் தினவரத்தாக 2,500 பைகள் (ஒரு பை என்பது 70 கிலோ) இருந்தன. விரலி மஞ்சள் நூறு கிலோ 5,700 ரூபாய்க்கு விற்பனையானது. ஈரோடு சந்தைக்கு 3,500 பைகள் வரத்து வந்தன. என்.சி.டி.இ.எக்ஸ். அங்கீகாரம் பெற்ற குடோன்களில் மே 29-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 3,558 டன் மஞ்சள் ஸ்டாக் உள்ளது. இதுவே, அதற்கு முந்தைய வாரத்தில் 3,351 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ரி கமாடிட்டி !

ஏலக்காய்! (Cardamom)

ஏலக்காய் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. நல்ல சீதோஷ்ண நிலை நிலவியதால் தரமான ஏலக்காய் சந்தைக்கு வந்தது. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஜூன் மாதத்திலிருந்து வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற வியாழன் சந்தைக்கு 53 டன் ஏலக்காய் வரத்து வந்தது. ஸ்பாட் சந்தையில் ஒரு கிலோ 563 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 831 ரூபாய்க்கும் விலை கேட்கப்பட்டது. எம்.சி.எக்ஸ். அங்கீகாரம் பெற்ற குடோன்களில் ஏலக்காய் இருப்பு 29-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 53.60 டன் இருந்தது. இதுவே, சென்ற வாரத்தில் 61.90 டன் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் வாரத்தில் ஏலக்காய் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !

மிளகாய்! (Chilli)

ஸ்பாட் சந்தைகளில் சென்ற வாரத்தில் மிளகாய் விலை குறைந்து வர்த்தகமானது. குண்டூர் சந்தைக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தேவை குறித்த நிலவரம் தெளிவில்லாமல் இருக்கிறது. தேவை குறைந்துள்ளதால் அது விலையில் பிரதிபலிப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்ல தரமான மிளகாய்க்காக வர்த்தகர்கள் காத்திருப்பதால், ஏற்றுமதி ஆர்டர்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. என்.சி.டி.இ.எக்ஸ். அங்கீகாரம் பெற்ற குடோன்களில்  29-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 15,971 டன் இருப்பு இருந்தது. இது அதற்கு முந்தைய வாரத்தில் 15,956 டன்னாக இருந்தது. வரத்து காலம் முடிவடையவிருப்பதால் வரும் வாரத்திலிருந்து வரத்து குறையும். இதனால் வரும் வாரத்தில் விலை குறைப்பு தடுக்கப்படும்.

அக்ரி கமாடிட்டி !
அக்ரி கமாடிட்டி !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு