Published:Updated:

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

பானுமதி அருணாசலம்.

பிரீமியம் ஸ்டோரி

 வர்த்தகம்

அடிப்படை உலோகங்கள்!

இந்த வாரம் அடிப்படை உலோகங்கள் குறித்து வெல்த் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமணன் விளக்கமாக கூறுகிறார்.

''கடந்த சில நாட்களில் அடிப்படை உலோகங்களில் காப்பர், நிக்கல் தவிர மற்ற அனைத்தும் நல்ல விலை ஏற்றம் கண்டுள்ளன. இதனால் காப்பர் மற்றும் நிக்கலை வர்த்தகர்கள் இப்போது உள்ள நிலையில் வாங்கலாம்.

சர்வதேச சந்தையைப் பொறுத்தவரை, அடிப்படை உலோகங்கள் விலை அதிகரித்து வந்தாலும் இந்தியாவில் ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால் விலை அதிகரித்தே  வர்த்தகமாகி வருகிறது. டிமாண்டைப் பொறுத்தவரை, சீனா மற்றும் அமெரிக்காவில் ஆர்டர்கள் குறைவாக இருந்தாலும் டெக்னிக்கல்படி, சமீப நாட்களாக விலை குறைந்த காப்பர் மற்றும் நிக்கல் விலை அதிகரிக்கும்.

ரூபாயின் மதிப்பு கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 6 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இப்போது சர்வதேச சந்தையில் காப்பரின் விலை குறைவாக உள்ளதால் 380, 390 ரூபாய் என்ற ரீதியில்தான் இந்தியாவில் வர்த்தகமாகவேண்டும். ஆனால், ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால் 412 ரூபாய் என்ற ரீதியில் வர்த்தகமாகி வருகிறது. அதனால், ரூபாயின் மதிப்பை உன்னிப்பாக கவனித்துதான் காப்பர் மற்றும் நிக்கலை வாங்கவேண்டும்.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

காப்பரின் விலை சர்வதேச சந்தையில் 5 சதவிகிதம் அதிகரித்தால் ரூபாயின் மதிப்பு 3 சதவிகிதம் அதிகரித்தால் மட்டுமே காப்பரை வாங்கலாம். தற்போதிருக்கும் நிலையில் 390 முதல் 410 ரூபாய் என்ற விலையில் காப்பரை வாங்கலாம். இலக்கு விலை 418, 424 மற்றும் 433 ரூபாய். நிக்கலை பொறுத்தவரை, 810-140 ரூபாய்  என்ற விலையில் வாங்கலாம். இலக்கு விலை 857, 863, 880 ரூபாய். அலுமினியம் தற்போது 107 ரூபாயில் இருக்கிறது. இதிலிருந்து 124 ரூபாய்க்கு வர வாய்ப்புள்ளது.

லெட் மற்றும் ஜிங்க் விலை ஏற்கெனவே நல்ல விலை ஏற்றத்தைக் கண்டுவிட்டதால் குறுகியகாலத்திற்கு இந்த அடிப்படை உலோகத்தை வாங்குவதைத் தவிர்க்கலாம். வரும் வாரத்தில் சர்வதேச சந்தையில் அடிப்படை உலோகங்கள் விலை அதிகரித்தாலும், ரூபாயின் மதிப்பைக்கொண்டே இந்தியாவில் விலை இருக்கும். அதனால், ரூபாயின் மதிப்பை நன்கு கணக்கிட்டு பிறகு வாங்கவும்'' என்றார்.  

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

தங்கம் !

அமெரிக்காவில் ஜூன் டெலிவரி கான்ட்ராக்ட் 1.4 சதவிகிதம் அதிகரித்து 1,417 டாலருக்கு வர்த்தகமானது. அமெரிக்காவின் ஜி.டி.பி. மிகக் குறைவாக வந்ததும், ஃபெடரல் வங்கி பாண்டுகளைத் திரும்ப வாங்கும்  திட்டத்தைக் கூடியவிரைவில் நிறுத்திவிடும் என்ற பயம் தடுக்கப்பட்டதாலும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதனால் மற்ற கமாடிட்டிகளிலும் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் ஜி.டி.பி. எதிர்பார்ப்பு பொய்த்ததாலும், வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் முதலீட்டாளர்களை தங்கத்தில் முதலீடு செய்யத் தூண்டுகிறது. மேலும், ஐரோப்பா பகுதிகளிலிருந்து வெளிவர இருக்கும் புள்ளிவிவரங்கள் தங்கத்தின் விலையைத் தீர்மானிக்கும். இந்தியாவில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவாக இருப்பதால், தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எம்.சி.எக்ஸ். சந்தையில் ஜூன் கான்ட்ராக்ட் பத்து கிராம் 27,147 ரூபாய்க்கு வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகமானது. வரும் வாரத்திலும் தங்கத்தின் விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

கச்சா எண்ணெய் !

சென்ற வாரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வர்த்தகமானது. ஐரோப்பிய மற்றும் ஜெர்மனி தொடர்பான பொருளாதார புள்ளிவிவரங்கள் வெளியாக உள்ளன. மேலும், அமெரிக்காவின் பொருளாதார புள்ளிவிவரங்கள் வெளியாக உள்ளது கச்சா எண்ணெய் விலையில் பிரதிபலிப்பை ஏற்படுத்தும். ஒபேக் நாடுகளின் கூட்டம் நடைபெறவிருப்பதை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வியன்னாவில் நடக்கவிருக்கும் இந்தக் கூட்டத்தில் சப்ளை மற்றும் ஒருநாளில் 30 மில்லியன் பேரலுக்கு குறைவாக உற்பத்தி செய்யவேண்டும் என்பது பற்றி பேசப்படவிருப்பதாக கூறப்படு கிறது. அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இன்வென்ட்ரி 3 பில்லியன் பேரல் கடந்த வாரத்தில் அதிகரித்துள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

இயற்கை எரிவாயு !

அமெரிக்க சந்தைகளில் இயற்கை எரிவாயு விலை குறைந்து சென்ற வாரத்தில் வர்த்தக மானது. சென்ற வாரத்தில் மட்டும் 4-6 சதவிகிதம் வரை விலை குறைந்தது. வானிலை சாதகமாக இல்லாததும், நியூக்ளியர் ப்ளான்ட் தேவைகள் குறைந்திருப்பதும் இயற்கை எரிவாயு தேவை குறைய காரணமாக அமைந்திருக்கிறது. இன்வென்ட்ரி அதிகரித்துள்ளதால் வரும் வாரத்தில் இயற்கை எரிவாயு விலை குறைந்தே வர்த்தகமாகும்.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு