Published:Updated:

மைனர் பெயரில் முதலீடு... வருமான வரி கட்டணுமா..?

மைனர் பெயரில் முதலீடு... வருமான வரி கட்டணுமா..?

மைனர் பெயரில் முதலீடு... வருமான வரி கட்டணுமா..?

மைனர் பெயரில் முதலீடு... வருமான வரி கட்டணுமா..?

Published:Updated:

கேள்வி -  பதில் !

##~##

என் மகன் பெயரில் கடந்த மூன்று ஆண்டுகளாக முதலீடு செய்து வருகிறேன். அவனுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் 18 வயது நிறைவடைந்துவிடும். இதற்கு நான் வருமான வரி கட்டவேண்டுமா?

- ஆண்டனிராஜ், திருச்சி. சத்தியநாராயணன், ஆடிட்டர்.

''உங்களின் மகன் தற்போது மைனராக இருப்பதால் யாருடைய வருமானத்திலிருந்து அவனது பெயரில் முதலீடு செய்கிறீர்களோ, அவர்கள் அந்த முதலீட்டில் கிடைக்கும் வருமானத் திற்கு வரி கட்டவேண்டும். உங்கள் மகனுக்கு 18 வயது தொடங்கிய பிறகு அவன் பெயரிலே நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யலாம்.''

நான் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் வைத்திருக்கிறேன். அதில் டி.டி.எஸ். பிடித்துவிட்டார்கள். இதை வருமான வரித் துறையிலிருந்து எப்படி திரும்பப் பெறுவது?

- கோபிநாத், புதுக்கோட்டை. கோபால கிருஷ்ணராஜு, ஆடிட்டர்.

மைனர் பெயரில் முதலீடு... வருமான வரி கட்டணுமா..?

''நீங்கள் பான் கார்டு வைத்திருந்து அந்த நம்பரை வங்கியில் தந்திருந்தால், உங்களிடமிருந்து டி.டி.எஸ். பிடித்தம் செய்த பணம் உங்கள் பான் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும். எனவே, ஆண்டின் இறுதியில் உங்களின் மொத்த வருமான கணக்கை தாக்கல் செய்து அந்தப் பணத்தைத் திரும்பப் பெறலாம். பான் கார்டு இல்லாதவர்கள், பான் நம்பர் வாங்கி அந்த நம்பரை வங்கியில் கொடுத்து பிடித்தம் செய்த பணத்தை உங்களின் வருமான வரிக் கணக்கில் வரவு வைக்குமாறு கேட்டு, அதன்பின் வருமான வரி தாக்கல் செய்து அந்த பிடித்த பணத்தைப் பெறலாம்.''

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வாகனக் கடன் பெற்றிருந்தேன். அந்தக் கடனை என்னால் முதலில் சரிவரக் கட்ட முடியவில்லை என்றாலும், பிற்பாடு கஷ்டப்பட்டு முழுத் தொகையையும் கட்டி முடித்துவிட்டேன். ஆனால், அந்த நிறுவனம் என் வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தைத் தர மறுக்கிறது. கூடுதலாக பணம் தந்தால்தான் ஆர்.சி. புத்தகம் தரமுடியும் என்கிறது. அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

- விநாயகமூர்த்தி, சென்னை. என்.ரமேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.

''கடன் தொகையை கட்டி முடித்தபின் கூடுதலாக பணம் கேட்பது சட்டப்படி குற்றமாகும்.  இது உங்களை மிரட்டுவதற்கு சமம். முதலில், நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று பிரச்னையைக் கூறி, அந்த நிறுவனத்தை அழைத்து விசாரிக்குமாறு கேட்டுக்கொள்ளலாம். அதிலும், சரியான பதில் கிடைக்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். இதன்மூலமாக உங்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.''

மைனர் பெயரில் முதலீடு... வருமான வரி கட்டணுமா..?

இ.ஐ.டி. பாரி நிறுவனத்தின் பங்குகளை 214 ரூபாய்க்கும், ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் பங்குகளை 120 ரூபாய்க்கும் வாங்கினேன். தற்போது இந்தப் பங்குகள் நஷ்டத்தில் உள்ளன. இந்தப் பங்குகளை இப்போது என்ன செய்வது?

- ராமானுஜம், அரும்பாக்கம். வெங்கடேஸ்வரன், இயக்குநர், மெக்கனோசி அண்ட் கோ.

''இ.ஐ.டி. பாரி நிறுவனத்தின் பங்கு தற்போது 136 ரூபாய் அளவில் வர்த்தகம் ஆகிறது. இந்நிலையில் உங்களுக்கு நஷ்டம்போல தோன்றினாலும், எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி தரக்கூடிய பங்கு. காரணம், இ.ஐ.டி. பாரி நிறுவனத்தை மறுசீரமைத்து, சர்க்கரை தயாரிப்பு நிறுவனத்தை தனியாகப் பிரிக்க உள்ளார்கள். இப்படி செய்யும்போது இந்த நிறுவனப் பங்கு நல்ல வளர்ச்சி அடையும். அதோடு, இந்நிறுவனத்துக்கு கடன் எதுவும் இல்லை.  அதிக பணம் உள்ள நிறுவனம் இது. இன்னும் ஆறு மாதகாலம் பொறுத்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

மைனர் பெயரில் முதலீடு... வருமான வரி கட்டணுமா..?

ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் பங்குகள் நஷ்டத்தில் இருந்தாலும், உடனடியாக விற்று விடுவது நல்லது. இதன் விலை தற்போது 38 ரூபாய் அளவில் உள்ளது. ஏனெனில், இந்நிறுவனத்தின் புரமோட்டர்கள் பங்குகளை அடமானம் வைத்துதான் இந்நிறுவனத்தையே நடத்தி வந்தனர். கடனை திரும்பக் கட்டாததால் அந்தப் பங்குகளையும் வங்கிகள் விற்றுவிட்டன. இன்னும் விலை இறங்கத்தான் செய்யும். எனவே, உடனடியாக விற்றுவிடுவது நல்லது.''

கடந்த சில வருடங்களாக வரிச் சேமிப்பிற்காக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். இதில் 'லாக்-இன் பீரியட்’ என்கிறார்கள். அப்படி என்றால் என்ன?

- ரமணி, திருவாரூர். ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை இயக்குநர், ஃபண்ட்ஸ் இந்தியா.காம்  

''லாக்-இன் பீரியட் என்பது ஃபண்டுகளில் செய்த முதலீட்டை குறிப்பிட்ட இடைவெளியில் எடுக்க முடியாமல் இருப்பதைக் குறிக்கும். குறிப்பாக, வரிச் சேமிப்புத் திட்டங்களில் இந்த 'லாக்-இன் பீரியட்’ என்பது மூன்று வருடங்கள் இருக்கும். அதன்பிறகு விற்கலாம்.''

மைனர் பெயரில் முதலீடு... வருமான வரி கட்டணுமா..?

நான் என் மகனை பவர் ஆஃப் அட்டர்னியாக வைத்து வீடு வாங்கியுள்ளேன். இந்த வீட்டிற்கான வில்லங்கச் சான்றிதழில் என் பெயர், வீடு விற்றவர் பெயர், பவராக உள்ள என் மகனின் பெயர் என மூன்று பெயரும் உள்ளது. இதனால் பிற்காலத்தில் ஏதாவது சிக்கல் வருமா?

- எம்.எஸ். ராமமூர்த்தி, கோடம்பாக்கம். பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்.

''உங்கள் மகனின் பெயரில் பவர் தந்திருப்பதால் எந்தவிதமான பிரச்னையும் வருவதற்கான வாய்ப்பு இல்லை. நீங்கள் தந்திருப்பது பொதுவான பவர் என்பதால் உங்களுக்குத் தெரியாமல் அந்தச் சொத்தை உங்கள் மகன் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. நீங்கள் விரும்பினால், உங்கள் மகனுக்கு நீங்கள் தந்த பவரை ரத்து செய்து, அதனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். அதன்பிறகு, வில்லங்கச் சான்றிதழில் நீங்கள் பவர் ரத்து செய்த விஷயம் இடம்பெறும்.''

நான் டீமேட் கணக்கு ஆரம்பித்தேன். அந்தக் கணக்கு செயல்பாட்டிற்கு வந்த நிலையில் அதை நான் பயன்படுத்த விரும்பவில்லை. அதோடு நான் பவர் ஆஃப் அட்டர்னியில் கையெழுத்து  போட்டுத் தந்துள்ளேன். இப்போது நான் என்ன செய்யவேண்டும்?

- தியாகு, திருச்சி. ஏ.ஆர். வாசுதேவன். சி.டி.எஸ்.எல்.

மைனர் பெயரில் முதலீடு... வருமான வரி கட்டணுமா..?

''இதனால் எந்தவிதமான பிரச்னையும் வராது. நீங்கள் எந்த புரோக்கரிடம் டீமேட் கணக்கு ஆரம்பித்தீர்களோ, அவரிடம் சென்று, என்ன காரணத்தினால் அந்தக் கணக்கை பயன்படுத்தவில்லை என்பதைத் தெரிவிக்கலாம். அவர்களிடமே கணக்கை ரத்து செய்வதற்கான விண்ணப்பம் இருக்கும். அதில் கையெழுத்து போட்டுத் தந்தால் போதும், அடுத்த மூன்று நாட்களில் உங்களின் கணக்கு ரத்தாகிவிடும். ஆனால், டீமேட் கணக்கு வைத்திருந்த காலத்திற்கு பராமரிப்புக் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.''  

நான் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் பங்குகளை 25 ரூபாய் 50 காசு இருக்கும்போது வாங்கினேன். இப்போது இந்தப் பங்கை நான் என்ன செய்ய வேண்டும்?

- சத்யா நாராயணன், ரெஜி தாமஸ், பங்குச் சந்தை ஆலோசகர்.

''ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி தற்பொழுது பெரிய அளவில் இல்லை. இனிவரும் நாட்களிலும் இந்தப் பங்கின் விலை உயருவதற்கான வாய்ப்பு குறைவுதான். நஷ்டம் ஏற்பட்டாலும் இந்தப் பங்கை விற்பது நல்லது.''