Published:Updated:

சரியும் ரூபாய்..எதிர்காலம் என்ன ?

வா.கார்த்திகேயன்.

சரியும் ரூபாய்..எதிர்காலம் என்ன ?

வா.கார்த்திகேயன்.

Published:Updated:
##~##

கடந்த வாரத்தில் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது. இதற்கு முன்பு 57.32 என்பதுதான் மிகக் குறைந்த அளவாக இந்திய ரூபாய் இருந்தது. இந்தமுறை இந்த அளவையும் தாண்டி 58.98 என்கிற அளவுக்கு குறைந்துவிட்டது. என்ன காரணம், ஏன் இந்த அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்தது?

பொதுவாக வளர்ந்த நாடுகளில் வளர்ச்சி குறைவாக இருக்கும்போது, அங்கிருக்கும் பணம் வளர்ந்த நாடுகளுக்குச் செல்லும். ஆனால், இந்த நடைமுறைக்கு மாறாக, வளர்ந்த நாடுகள் மீண்டும் வளர்ச்சி அடைய வாய்ப்பு இருக்கிறது எனில் வளரும் நாடுகளில் போட்ட முதலீடு மொத்தத்தையும் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். இப்படி செய்வதினால் அவர்களுக்கு கரன்சி ரிஸ்க் கிடையாது. மேலும், இப்போது அமெரிக்காவில் நீண்டகால பாண்டுகளுக்கே அதிக வட்டி கிடைப்பதினால் அந்த முதலீட்டை எடுத்துக்கொண்டு தங்கள் நாட்டிலே முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதனால், கடந்த வாரத்தில் கடன் சந்தையில் சில ஆயிரம் கோடி முதலீடு வெளியே சென்று டாலருக்கான தேவையை அதிகப்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்பாட் மார்க்கெட்டில் 58.98 ரூபாய் வரைக்கும் கடந்த வாரத்தில் ரூபாய் சரிந்தது. அதன்பிறகு ரூபாய் உயர ஆரம்பித்து. ரூபாயின் சரிவுக்காக காத்திருந்த ஏற்றுமதியாளர்கள், இந்த நிலையில் வந்தவுடன் டாலரை விற்க ஆரம்பித்தார்கள். தேர்தல் காலம் நெருங்கிக்கொண்டிருப்பதால், வெளிநாட்டில் பதுக்கி இருக்கும் பணம் இந்தியாவுக்கு வரத் தொடங்கிவிட்டது என்றும் கரன்சி சந்தையில் பேச்சு பரவியது. ரூபாயின் மதிப்பு ஏற்ற, இறக்கம் குறித்து ஆனந்த்ரதியின் சீனியர் அனலிஸ்ட் சிவசுப்ரமணியத்திடம் பேசினோம்.

சரியும் ரூபாய்..எதிர்காலம் என்ன ?

''இந்தியாவுக்கு இன்னும் நிறைய அந்நிய முதலீடு வரும் என்று அர்விந்த் மாயாராம் சொன்னது, அந்நிய நேரடி முதலீட்டில் வரம்பு தளர்த்தப்படும் என்று நிதி அமைச்சர் சிதம்பரம் சொன்னது போன்ற காரணங்களால், வேகமாக சரிந்த ரூபாய் இப்போது மீண்டுவர ஆரம்பித்திருக்கிறது.

மேலும், ரேட்டிங் ஏஜென்சி யான ஃபிட்ச் இந்தியாவுக் கான அவுட்லுக்கினை உயர்த்தி யிருக்கிறது. இதனால் நம் நாட்டின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. இதனால் ரூபாய் மதிப்பு உயர்ந்திருக்கிறது.

இருந்தாலும் ஒரு சிறிய அச்சுறுத்தல் இருக்கிறது. இனிமேலும் இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. அதாவது, பணவீக்கம் இனி பயமுறுத்தும் விஷயமாக இருக்காது என்பதால்,

சரியும் ரூபாய்..எதிர்காலம் என்ன ?

விரைவில் வட்டி விகிதம் குறைப்பதற்குதான் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. வட்டி விகிதம் குறையும்போது கடன் சார்ந்த அந்நிய முதலீடுகள் வெளியே செல்ல வாய்ப்பு இருக்கும். வெளிநாடுகளில் அதிக வட்டி, இங்கு குறைவான வட்டி என்கிறபோது, வட்டி குறைப்பு அறிவிப்பு வந்தவுடன் ரூபாயில் இன்னும் கொஞ்சம் சரிவு இருக்கும். ஆனாலும், நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது, வட்டி குறைப்பு என்பது நல்ல விஷயமே. வட்டி குறைந்தால், அது பொருளாதாரத்துக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது ரூபாய் பலமாகும்'' என்று முடித்தார் சிவசுப்ரமணியம்.

ரூபாய் உச்சபட்ச சரிவில் இருக்கும் இச்சூழ்நிலையில் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து பங்குச் சந்தை ஆலோசகர் விக்னேஷிடம் பேசினோம். ''டெக்னிக்கல்படி இப்போது (ஐலேண்ட் ரிவர்ஸல்) ஏற்றம் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால், இந்த பேட்டர்ன் சந்தை மிகவும் கீழே இருக்கும்போதுதான் நன்றாக வேலை செய்யும். ஒருவேளை, வரும்நாட்களில் இந்த பேட்டர்ன் தோல்விகூட அடையலாம். இப்போதைக்கு ஒரு ரேஞ்ச்பவுண்டிலே சந்தை வர்த்தகமாகிறது. 5500-க்கு கீழே செல்லவில்லை. அதேபோல, 6200-க்கு மேலேயும் செல்ல முடியவில்லை. ரேஞ்ச்பவுண்டில் சந்தை இருக்கிறது என்றால் சந்தையை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்வதற்கு எந்த செய்திகளும் இல்லை என்று அர்த்தம். இப்போதைக்கு 5975 என்பது முக்கிய மான ரெசிஸ்டென்ஸ் நிலையாக இருக்கிறது.

இருக்கிற கடனை குறைத்துவிட்டு, மெதுவாக செட்டில் ஆகி அதன்பிறகு புதிய கடன்கள் வாங்கும்போதுதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் மேலே போகும். அதைத் தொடர்ந்து பங்குச் சந்தையும் உயரும். இப்போதைக்கு நாம் கடனை குறைக்கும் நிலையில் இருக்கிறோம். இதைத் தொடர்ந்து பொருளாதாரம் செட்டில் ஆகவேண்டும். அல்லது அதற்கேற்ற செய்திகள் மாற்றத்தைத் தரவேண்டும். 2002-ல் சந்தை எப்படி இருந்ததோ, அப்படித்தான் இப்போது நாம் இருக்கிறோம். ஆனால், 2003-க்குப் பிறகு என்ன நடந்தது என்பதைச் சொல்லவே தேவை இல்லை'' என்று முடித்தார் விக்னேஷ்.

கவுன்ட்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டதா என்பது போகப்போகதான் தெரியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism