மிளகு! (Pepper)

சென்ற வியாழன் அன்று வரத்து குறைந் ததினால் மிளகு விலையேற்றம் கண்டது. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்களிடம் இருக்கும் ஸ்டாக்குகளை தற்போதிருக்கும் விலைக்கு விற்க முன் வந்தாலும், பெரிய விவசாயிகள் அந்த விலைக்கு விற்க முன்வரவில்லை. கொச்சி சந்தையில் ஒரு கிலோ 350 ரூபாய் வரை உயர்ந்து வர்த்தகமானது. சென்ற வாரம் தினவரத்து 17 டன் அளவில் இருந்தது. 2012-13-ல் மிளகு ஏற்றுமதி 16,000 டன்னாகும். இதுவே, அதற்கு முந்தைய வருடத்தில் 26,700 டன்னாக இருந்தது.

கடுகு விதை! (Mustard seed)

மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பாளர்களிடமிருந்து நல்ல டிமாண்ட் வந்ததன் காரணமாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள மண்டிகளில் கடுகுவிதை நன்கு விற்பனையானது. ஜூன் கான்ட்ராக்ட் என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் 3,485 மற்றும் 3,523 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்துக் காலம் முடிவடைந்து வரத்து குறைவதாலும், டிமாண்ட் அதிகமாக இருப்பதாலும் வரும் வாரத்தில் கடுகு விதை விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

மஞ்சள்! (Turmeric)

சென்ற வாரத்தில் ஒரு குவிண்டாலுக்கு 100 ரூபாய் குறைந்து மஞ்சள் வர்த்தகமானது. சென்ற வியாழக்கிழமையில் வரத்து அதிகரித்து 2,480 பைகள் வந்தன. ஈரோடு கூட்டுறவு சங்கம் 40 பை மஞ்சளை தலா 6,669 ரூபாய்க்கு வாங்கியது. மஞ்சளின் தரம் நன்றாக இருந்ததால் விலையை அதிகரித்து வாங்கியது. எனினும், மீதமுள்ள பைகள் விலை குறைந்தே வர்த்தகமானது. ஈரோடு சந்தையில் விரலி மஞ்சள் 4,144 - 6,437 ரூபாய்க்கும், சாதாரண மஞ்சள் 4,094-5618 ரூபாய்க்கும் வர்த்தகமானது. அதிகமான கையிருப்பு காரணமாக வரும் வாரத்திலும் மஞ்சளின் விலை குறைந்தே வர்த்தகமாகும். வரத்து குறைந்து, விலையும் குறைந்ததாலும் ஈரோடு சந்தை ஒரு வார காலத்துக்கு விடுமுறை அளிக்கப்படுவதால், டிரேடர்கள் கவனமாக வர்த்தகம் செய்யவும்.

ஜீரகம்! (Jeera)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி டிமாண்ட் காரணமாக ஜீரகத்தின் ஸ்பாட் விலை சென்ற வாரத்தில் அதிகரித்து வர்த்தகமானது. இருந்தும் ஃப்யூச்சர் சந்தையில் வர்த்தகர்கள் லாபத்தை புக் செய்ததால் விலை சற்று குறைந்தது. சென்ற வியாழக்கிழமை அன்று உஞ்ஹா சந்தைக்கு 7,000 பை ஜீரகம் வந்தது. 100 கிலோ ஸ்பாட் விலை 13,800 ரூபாயாக இருந்தது. வடமாநிலங்களில் திருவிழா வரவிருப்பதால் வரும் நாட்களில் டிமாண்ட் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல தரமான ஜீரகம் வரத்து இருப்பதால் நல்ல விலையில் வர்த்தகமாகிறது.

இந்த ஆண்டு நாட்டின் மொத்த ஜீரக உற்பத்தி 34-35 லட்சம் பைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, சென்ற வருடத்தைவிட ஒரு லட்சம் பைகள் அதிகம். ஜீரகம் உற்பத்தி அதிகரிக்க காரணம், குஜராத் மாநிலத்தில் அதிகளவில் ஜீரகம் பயிரிடப்பட்டு இருப்பதே. 2012 - 2013 ஏப்ரல் முதல் மார்ச் மாதத்தில் இங்கிருந்து 79,900 டன் ஜீரகம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் உற்பத்தி குறைந்துள்ளதே, இந்திய ஜீரகம் ஏற்றுமதி அதிகரிக்க காரணம். நல்ல ஏற்றுமதி டிமாண்ட் இருப்பதால் வரும் வாரத்தில் ஜீரகத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஏலக்காய்! (Cardamom)

உள்நாட்டு தேவை அதிகரித்ததன் காரணமாக ஏலக்காய் விலை அதிகரித்து சென்ற வாரத்தில் வர்த்தகமானது. பிறகு, ஏலக்காய் விளையும் பகுதிகளில் நல்ல மழை பெய்திருப்பதால் உற்பத்தி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விலை குறைந்தது. சென்ற வியாழன் அன்று வரத்து மற்றும் விற்பனை 52 டன்னாக சந்தைகளில் இருந்தது. 2012-2013-ல் ஏப்ரல் முதல் மார்ச் மாதத்தில் இந்தியாவில் ஏலக்காய் ஏற்றுமதி 2,250 டன்னாக இருந்துள்ளது. இதுவே, சென்ற வருடத்தில் 4,650 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தேவை அதிகமாக இருப்பதால் ஏலக்காய் வரும் வாரத்தில் அதிகரித்து வர்த்தகமாகும்.

மிளகாய்! (Chilli)

தேவை குறைவு மற்றும் வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மிளகாயின் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. சென்ற வியாழனன்று 45,000 பைகள் சந்தைக்கு வந்தன. வரவிருக்கும் நாட்களில் வரத்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பினால் விலை குறையும். 2012-2013-ல் இந்தியாவின் மிளகாய் ஏற்றுமதி சென்ற வருடத்தைவிட அதிகரித்து 2,81,000 டன்னாக இருந்துள்ளது. இதுவே, சென்ற வருடத்தில் 2,41,000 டன்னாக இருந்துள்ளது என ஸ்பைஸ் போர்டு ஆஃப் இந்தியா தெரிவித் துள்ளது. தேவை குறைவாக இருப்பதால் வரும் வாரத்தில் விலை குறைந்து வர்த்தகமாகும்.