நிறுவனங்களுக்கு வரும் பெரும் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம், நேரத்தை சரியாக கையாளாததே. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், நேரத்தை வீணடிப்பது. யார் ஒருவருக்கு நேரம் இல்லையோ, அவருக்குத்தான் அதன் அருமை நன்றாகத் தெரியும். விடுமுறை முடியும்போதுதான் அதன் முக்கியத்துவம் புரியும். இன்னும் ஒரு மாதத்தில் வேலையில் இருந்து ஓய்வு பெறப் போகிறீர்கள் எனில், அப்போதுதான் அந்த வேலையின் முக்கியத்துவம் முழுவதுமாகத் தெரியும். இப்படியான ஒரு மனநிலையில்தான் ஒவ்வொரு நிமிஷத்தையும் நாம் பயன்படுத்தவேண்டும்.

பிசினஸில் பிரச்னை என்று வந்தவுடன், முதலில் செலவைக் குறைக்கிறீர்கள். செலவு என்பது நேரம் மாதிரி. கடிகாரத்தில் இருக்கும் மணி காட்டும் சிறிய முள், முதலீடு மாதிரி. நிமிடம் காட்டும் நீளமான முள், திறமை மாதிரி. நொடியைக் காட்டும் முள், லாப வரம்பு மாதிரி. இதெல்லாம் சரியாக வேலை செய்தால் மட்டுமே பணம் கிடைக்கும். நேரத்தை திறமையாக பயன்படுத்தும்போதுதான் லாபம் அதிகமாகும்.

நேரம் என்பது ஒன்றல்ல; அதை 12 விதமாக பிரிக்கலாம். இப்படி பிரித்துப் பார்த்தால், உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி செலவழிக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெளிவாகத் தெரியும்.

லைஃப் டைம்: நம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே இருக்கும் நேரம் இது. நாம் கடன் வாங்குகிறோம். வாங்கிய பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டுகிறோம். அதேபோல, நமக்கு கிடைக்கும் நேரத்தை வைத்து எவ்வளவு சம்பாதிக்கிறோம்?

ஷோ டைம்: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது. உங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் திறமையை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறீர்களா, இல்லை கல்லூரி நாட்கள் போல ஜாலியாக செலவழிக்கிறீர்களா?

அப் டைம் அண்ட் டவுன் டைம்: சிக்கனமாக செலவுசெய்து, நேரத்தையும் பணத்தையும் சேர்க்க ஆரம்பித்தீர்கள் எனில், அது உங்களுடைய அப் டைம். உபரியை உருவாக்க வாய்ப்புகளைத் தேடி, கடன் வாங்க ஆரம்பித்தீர்கள் எனில், அது உங்கள் டவுன் டைம். நீங்கள் எதில் இருக்கிறீர்கள், அப் டைமிலா இல்லை, டவுன் டைமிலா?

டச் டைம்: வாய்ப்புகளோடு நேரடியாக கைகுலுக்கும் நேரமிது. உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் எதிர்காலம் இருக்கும்.

லீடு டைம்: ஒரு புராஜக்டை ஆரம்பித்து அதை முடிப்பதுவரைக்குமான காலமே லீடு டைம். ஆனால், ஒரு புராஜெக்ட் சந்தையில் இருக்கும் காலம் மிகவும் குறைவு. கூடவே, நிறைய போட்டிகளும் இருக்கும். எப்படி சமாளிப்பீர்கள்?

டேக்ட் டைம்: ஒரு சேவையை முடிக்கும் காலத்தை டேக்ட் டைம் (Tact time) என்பார்கள். இந்தக் காலத்தை தீர்மானிக்கப் போவது உங்கள் வாடிக்கையாளர்கள்தான். உதாரணமாக, வங்கியில் வாடிக்கையாளர்கள் இருக்கும் நேரத்தில்தான் உங்கள் சேவையை அவர்களுக்குத் தரமுடியும். நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தருகிறீர்களா?

ஆன் டைம்: சரியான நேரத்தில் ஒரு சேவையையோ புராடக்டையோ தருவது. குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவோ, பின்பாகவோ இது இருக்கக்கூடாது. செய்கிறீர்களா?

வெயிட் டைம்: முடிவெடுக்கத் தேவையான அனைத்து தகவல்களும் கிடைத்தபின், முடிவெடுக்க நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் வீண்தான்.

ஜெஸ்டேஷன் (Gestation) டைம்: ஒரு காய் கனியாகும் காலம் வரை நீங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும். அதுபோல உங்களுக்கான காலம் வரும் வரை நீங்கள் காத்திருப்பதே ஒரே வழி.

பிரைவேட் டைம்: இது உங்களுக்கான டைம். உங்களை தனிப்பட்ட முறையில் மேம்படுத்திக் கொள்ள, கற்றுக்கொள்ள, நண்பர்களுடன் உரையாட, தூங்க எடுத்துக்கொள்ளும் நேரம். இதற்கு கணிசமாக நேரம் ஒதுக்கினால், உங்களால் இன்னும் ஆக்கப்பூர்வமாக இருக்க முடியும்.

பாஸ் டைம்: எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கை இல்லாமல், எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே காலத்தைக் கடத்துவது.

ஷெல்ஃப் லைஃப்: எந்த ஒரு செயலை செய்யும்போதும் உங்கள் ரசனை, திறமை போன்றவை அதிகரித்து, உங்கள் வேலைதிறனை நீண்டகாலத்துக்கு வளர்த்துக்கொள்கிற மாதிரி பார்த்துகொள்ளுங்கள்.

இனியும் பிசினஸில் பிரச்னை என்றால், செலவை குறைக்க நினைக்காமல், நேரத்தை சரியான முறையில் செலவு செய்யப் பாருங்கள். காரணம், Time is money.

(சொல்கிறேன்)