தங்கம்!

இந்த வாரம் தங்கம் விலை நிலவரம் குறித்து மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் கூறுகிறார். ''சென்ற வாரத்தில் தங்கம் நடுநிலையான நிலையில் 1,383-1,385 டாலருக்கு வர்த்தகமானது. பெரியளவில் விலை ஏற்றமோ, இறக்கமோ நடக்கவில்லை. சர்வதேச விலையில் பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும் இந்தியாவில் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு குறைந்து வருவதால் இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்து வர்த்தகமானது. அமெரிக்காவின் சில பொருளாதார புள்ளிவிவரங்கள் சாதகமாக வந்ததால், டாலரின் மதிப்பு அதிகரித்து தங்கத்தில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் குறைத்துக்கொண்டனர். வரும் வாரத்தில் சில பெரிய நிறுவனங்களுக்கு டாலரில் வரவேண்டிய வரவு அதிகமாக இருப்பதால் ரூபாயின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், ரூபாயின் மதிப்பு அதிகரித்தால் இந்தியாவில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புகள் உள்ளது. வரும் வாரத்தில் எம்.சி.எக்ஸ். பத்து கிராம் தங்கம் 26,500 - 28,000 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் இருக்கும்'' என்றார்.

வெள்ளி!

கடந்த வெள்ளிக்கிழமையன்று சர்வதேச சந்தையில் வெள்ளி ஒரு அவுன்ஸ் 22.13 டாலருக்கு வர்த்தகமானது. யூரோ பகுதியின் நுகர்வோர் விலை குறித்த குறியீடு (Consumer prices index) எதிர்பார்த்ததை விட குறையும் என்பதால் டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு குறைந்தது. இதனால், வெள்ளியின் விலையில் பிரதிபலிப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் உற்பத்தி விலை குறியீடு (producer price index)எதிர்பார்த்ததை விட அதிகரிக்கலாம் என்பதாலும், வேலையில்லாத நபர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை எண்ணிக்கை குறைந்ததும் டாலரின் மதிப்பை அதிகரித்து முதலீட்டாளர்கள் டாலரில் முதலீடு செய்ய துவங்கினர். மொத்தத்தில் பார்க்கும்போது வெள்ளி விலை வரும் வாரத்திலும் விலை குறைந்து வர்த்தகமாகும்.

கச்சா எண்ணெய்!

கடந்த வெள்ளிக்கிழமையன்று டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 96 டாலருக்கு வர்த்தகமானது. அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்த புள்ளி விவரங்கள் சாதகமாக வந்ததால் ஆசியாவின் பங்குச் சந்தைகள் புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமானது. மேலும், ஃபெடரல் வங்கி தனது பாண்ட் பையிங் திட்டத்தைத் தொடரலாம். இந்த இரண்டு காரணங்களும் கச்சா எண்ணெய் அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்பாக அமைந்தது. அமெரிக்காவில் இறக்குமதி அதிகரித்து, ஏற்றுமதி குறைந்துள்ளது நடப்பு நிதிக் கணக்கை (current account balance) குறைத்துள்ளது. மேலும், உலகப் பொருளாதாரம் இந்தாண்டு குறைவாகவே இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. தெற்கு சூடான் நாட்டில் கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் பைப்லைன் தீப்பிடித்து சப்ளை குறைந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ரூபாயின் மதிப்பு அதிகரித்தால் கச்சா எண்ணெய்யின் விலை குறையும். மற்றபடி வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தே வர்த்தகமாகும்.

இயற்கை எரிவாயு!

கடந்த முன்று மாதங்களில் இல்லாதளவுக்கு இயற்கை எரிவாயுவின் விலை குறைந்து சென்ற வாரத்தில் வர்த்தகமானது. ஜூன் 7-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் அமெரிக்கா வின் இயற்கை எரிவாயு இன்வென்டரி 95 பில்லியன் கியூபிக் ஃபீட் அதிகரித்து 2.347 டிரில்லியன் கியூபிக் ஃபீட்டாக உள்ளது. இது, சென்ற வருடத்தைவிட 587 பில்லியன் கியூபிக் ஃபீட் குறைவாக உள்ளது. ஐந்து வருட சராசரி விகிதத்தில் பார்க்கும்போது 58 பில்லியன் கியூபிக் ஃபீட் குறைவாக உள்ளதாக அமெரிக்காவின் எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது. மேலும், சீதோஷ்ண நிலை சற்று இயற்கை எரிவாயு தேவையை அதிகரித்துள்ளது. இதனால் வரும் வாரத்தில் இயற்கை எரிவாயு விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

அடிப்படை உலோகங்கள்!

காப்பர் கிடைக்கும் இரு சுரங்கங் களில் உற்பத்தி பாதிப்படைந் ததால் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதன் விலை குறைந்தது. நிக்கலை பொறுத்தவரை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் துறையில் தேவை வெகுவாக குறைந்ததும், அதிகமான சப்ளையும் கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்கு அதன் விலையைக் குறைத்தது. சீனாவிலிருந்து வெளியான பொருளாதார புள்ளிவிவரங்கள் இரண்டாம் காலாண்டில் குறைந்திருக்க, மே மாத வர்த்தகமும் குறைவாகவே இருந்தது. சர்வதேச பொருளாதாரம் இந்த ஆண்டில் குறைவாக இருக்குமென உலக வங்கி தெரிவித்துள்ளதால், அடிப்படை உலோகங்களுக்கான தேவை குறையும். வரும் வாரத்தில் அடிப்படை உலோகங்களின் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

- பானுமதி அருணாசலம்.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும 04466802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!