Published:Updated:

வீட்டு மனை : என்னென்ன வரி கட்டவேண்டும் ?

படம். பா.கார்த்திக்

##~##

ஒரு வீட்டு மனைக்கு சட்டப்படி என்னென்ன வரி கட்டவேண்டும்?

 - ஆர்.எஸ்.மணியன், மதுரை. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜீவா, வழக்கறிஞர்.

''காலியாக இருக்கும் வீட்டு மனை எனில், மனை வரி கட்டினால் போதும். நீங்கள் எந்த ஊரில் மனை வைத்திருக்கிறீர்களோ, அந்தப் பகுதியின் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் இந்த வரி வருடத்திற்கு ஒருமுறை கட்டவேண்டும். இது தவிர வேறு எந்த வரியும் கட்டத் தேவையில்லை.''

 எனக்கு பாகமாக வந்த வீட்டை என் பிள்ளைகள் மூன்று பேருக்கு பிரித்துத் தந்துவிட்டேன். என் பிள்ளைகள் இதற்கு வரி கட்டவேண்டுமா?

                     - மகேஷ், கோவை.

சுப்ரமணியன், ஆடிட்டர்.

வீட்டு மனை : என்னென்ன வரி கட்டவேண்டும் ?

''உங்களுக்கு பாகமாக வந்த வீட்டை உங்கள் பிள்ளைகளுக்கு தரும்போது அந்தச் சொத்தை  பாகப் பிரிவினை செய்து, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். அப்போதுதான் அந்த பாகப்பிரிவினை செல்லுபடியாகும். இதற்கு தனியாக எந்த வரியும் கட்ட வேண்டாம்.''

 தனியார் வங்கி ஒன்றில் வீட்டுக் கடனுக்கு அனுமதி கிடைத்தவுடன் செயல்பாட்டு கட்டணத்தைச் செலுத்துமாறு கூறினார்கள். என்னால் குறித்த நேரத்தில் வீடு வாங்க முடியவில்லை. இரண்டு மாதம் கழித்து  அதே வங்கியில் வீட்டுக் கடன் கேட்கும்போது மீண்டும் செயல்பாட்டு கட்டணம் செலுத்துமாறு சொல்கிறார்கள். இது சரியா?

              - ஸ்ரீகாந்த் பாலா, சென்னை.

சுப்புராமன், தலைமை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.

''பெரும்பாலான தனியார் வங்கிகள் செயல்பாட்டு கட்டணத்தை முன்கூட்டியே வசூல் செய்துவிடுகின்றன. இதற்கு காரணம், கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் கடைசி நேரத்தில் கடன்  வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். இதனால், வங்கியின் நேரம் வீண் ஆகிறது. குறித்த நேரத்தில் வீடு வாங்க முடியவில்லை எனில், அடுத்த ஆறு மாதம் வரை அதே செயல்பாட்டு கட்டணத்தில் நீங்கள் கடன் வாங்கிக்கொள்ளலாம். இதற்கு ஏற்கெனவே கொடுத்த அதே புராக்ஜெட்டாக இருக்கவேண்டும். அதன் மதிப்புகூட மாறக்கூடாது. கடன் கேட்டு விண்ணப்பிக்கும்போது 20 லட்சம் ரூபாயாக இருந்த வீட்டின் மதிப்பு, கடன் வாங்கும்போது

25 லட்சம் ரூபாயாக இருந்தால் நீங்கள் மீண்டும் செயல்பாட்டு கட்டணம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு முறையும் கடனுக்காகச் செய்யப்படும் வேலைக்கான கட்டணம்தான் அது.'

 மொபைல் மணி டிரான்ஸ்ஃபர் மூலமாக என் நண்பருக்கு பணப் பரிமாற்றம் செய்தேன். அந்தப் பரிமாற்றத்தின் விளைவாக என் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், என்  நண்பரின் கணக்கில் பணம் எதுவும் வரவு வைக்கப்படவில்லை. என்னிடமிருந்து எடுக்கப்பட்ட பணத்தை மீண்டும் எப்படி பெறுவது?

        - கண்ணன், நாமக்கல்.

தங்கப்பன், எஸ்.பி.ஐ. (மாற்று வழி).

''நீங்கள் பணப் பரிமாற்றம் செய்யும்போது தவறு ஏதும் நிகழ்ந்திருந்தால், எந்த தேதியில் பணப் பரிமாற்றம் செய்தீர்களோ, அன்றிலிருந்து, மூன்று வேலை நாட்களில் தானாகவே பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒருவேளை பணம் வரவு வைக்கப்படவில்லை எனில், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளைக்குச் சென்று, கணக்கு எண், பரிமாற்றம் செய்த தொகை, தேதி, பணப் பரிமாற்றம் செய்ததற்கான ஐ.டி. ஆகிய விவரங்களுடன் புகார் தந்தால் அடுத்த ஏழு வேலை நாட்களுக்குள் உங்கள் பணம் வரவு வைக்கப்படும்.'

வீட்டு மனை : என்னென்ன வரி கட்டவேண்டும் ?

 என் பெற்றோர் தனியார் வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கு மற்றும் லாக்கர் வைத்திருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் வேலை காரணமாக வேறு ஊருக்கு மாற்றலாகி சென்றுவிட்டோம். இப்போது என் பெற்றோர்கள் இறந்துவிட்டனர். நான் அந்த லாக்கரையும், சேமிப்புக் கணக்கையும் என் பெயருக்கு மாற்ற என்ன செய்யவேண்டும்?

       - வெங்கடேஷ், கோவை.

எம்.மனோகரன், மண்டல மேலாளர், பெடரல் வங்கி.

வீட்டு மனை : என்னென்ன வரி கட்டவேண்டும் ?

''முதலில் லாக்கருக்கு நாமினியாக யாருடைய பெயர் தரப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கவேண்டும். உங்கள் பெயர் நாமினியாக இருந்தால், உங்கள் பெற்றோர் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வங்கி கேட்கும் கே.ஒய்.சி. ஆவணங்கள், மேலும், இதனுடன் வங்கி கேட்கும் ஆவணங்கள் ஆகியவற்றை தரவேண்டும். மேலும், இதனுடன் லாக்கரில் உள்ள பொருட்களை நான் பெற்றுக்கொண்டபிறகு, வேறு யாராவது உரிமை கோரி, அதனால் வங்கிக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அந்த வகையில் ஏற்படும் இழப்புக்கு தானே முழுப்பொறுப்பு என்று கடிதம் தரவேண்டும். தவிர, உள்ளூரில் இருக்கும் இரண்டு நபர்களிடம் சாட்சி கையெழுத்து வாங்கித் தரவேண்டும். இந்த ஆவணங்களை எல்லாம் வங்கி அதிகாரிகள் சரிபார்த்த பின்னர் லாக்கரில் உள்ள பொருட்கள் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.'

 நான் வேலை காரணமாக வெளிநாட்டில் செட்டில் ஆக உள்ளேன். என் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வேறு நாட்டுக்கு நான் மாற்றிக்கொள்ள முடியுமா?

             - ஹரிஸ், மேடவாக்கம்.

சுந்தர்ராஜன். ஐ.என்.ஜி. வைஸ்யா, ஏரியா மேலாளர்.

''பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் மட்டும்தான் கவரேஜ் தருகின்றன. வெளிநாடுகளில் மருத்துவ கட்டணம் மிக அதிகம் என்பதால் இங்கு எடுக்கப்படும் பாலிசி அங்கு செல்லாது. இன்ஷூரன்ஸ் பாலிசியை வெளிநாட்டிற்கு மாற்றிக்கொள்ள முடியாது. எந்த நாட்டிற்கு போக இருக்கிறீர்களோ, அந்த நாட்டிற்கு சென்றுதான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க முடியும்.'

நானும் என் மனைவியும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறோம். எங்கள் இருவருக்கும் தனித்தனியாக குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி உள்ளது. ஒரே சமயத்தில் இந்த இரண்டு பாலிசியிலும் க்ளைம் பெற முடியுமா?

    - ஸ்ரீனிவாசன், நெடுங்குடி.

கிருஷ்ணதாசன், உதவி துணைத் தலைவர் மற்றும் காப்பீட்டு ஆலோசகர், இந்தியா நிவேஷ்.

''இரண்டு பாலிசிகளிலும் க்ளைம் பெற முடியும். இது சூழ்நிலையைப் பொறுத்து அமையும். கணவன், மனைவி இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் என இரண்டு லட்சம் ரூபாய்க்கு கவரேஜ் உள்ளது. இதில் உங்களின் க்ளைம் 70 ஆயிரம் எனில், ஒரே பாலிசியில் மட்டும்தான் க்ளைம் வாங்க முடியும். அதே க்ளைம் தொகை 1.50 லட்சத்திற்கு மேல் இருக்கும்போது இரண்டு பாலிசிகளிலும் க்ளைம் பெறலாம்.'

வீட்டு மனை : என்னென்ன வரி கட்டவேண்டும் ?

 என் குழந்தையின் பெயரில் பி.பி.எஃப். கணக்கு ஆரம்பிக்க முடியுமா?

                        - ரவி, சூளைமேடு.

தபால்துறை அதிகாரிகள்.

'குழந்தையின் பெயரிலும் பி.பி.எஃப். கணக்கு ஆரம்பிக்க முடியும். இதற்கு குழந்தையின் பெற்றோர் யாராவது ஒருவர் காப்பாளராக கையெழுத்து போட வேண்டியிருக்கும். இதில் கவனிக்கவேண்டியது, குழந்தையின் காப்பாளர் மற்றும் குழந்தை இருவருக்கும் சேர்த்து ஒரு வருடத்தில் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்தான் முதலீடு செய்ய முடியும்.'

நானும், என் மனைவியும் சேர்ந்து வீடு வாங்கியுள்ளோம். வீட்டின் உரிமையாளர் கவரேஜ் எப்படி அமையவேண்டும்?

         - மணி, அயனாவரம்.

சிவக்குமார், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ்.

''வீட்டின் மதிப்பிற்கு ஏற்ப நீங்கள் பாலிசியின் கவரேஜ் தொகையை முடிவு செய்துகொள்ளலாம். இதில் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பாலிசி எடுத்தாலும், கவரேஜை பிரித்துக்கொள்ள முடியாது. அல்லது ஒருவரின் பெயரில் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். வீட்டிற்கு ஏதாவது சேதாரம் ஏற்பட்டால் மட்டும்தான் க்ளைம் கிடைக்கும். எனவே, இதில் கவரேஜ் யார் பெயரில் இருந்தாலும் பிரச்னை வராது.'

வீட்டு மனை : என்னென்ன வரி கட்டவேண்டும் ?