Published:Updated:

ஷேர்லக் : டிவிடெண்டில் லாபம் பார்த்த கம்பெனிகள்!

ஷேர்லக் : டிவிடெண்டில் லாபம் பார்த்த கம்பெனிகள்!

##~##

''வெள்ளிக்கிழமை அன்று ஒருநாள் பயணமாக பெங்களூருச் செல்கிறேன். அங்கிருந்து மெயிலில் மேட்டர் அனுப்பிவிடவா?'' - வியாழனன்றே ஷேர்லக்கிடமிருந்து இப்படி ஒரு கோரிக்கை வந்தது. ''கட்டாயம் அனுப்பிவிடுவீர்கள்தானே?'' என்றோம் சந்தேகத்தோடு. ''ஷேர்லக்கை நம்பினோர் கைவிடப்படார்!'' என்று உறுதி தந்ததால், நாமும் ஓகே சொன்னோம். கடமை தவறாமல் அவர் அனுப்பிய மெயில் இனி:

நீக்கப்பட்ட பங்குகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்.எஸ்.இ. மற்றும் பி.எஸ்.இ. பங்குச் சந்தைகள் சுமார் 30 நிறுவனப் பங்குகளை நிபந்தனை வர்த்தகப் பிரிவிலிருந்து (க்ஷீமீstக்ஷீவீநீtமீபீ tக்ஷீணீபீவீஸீரீ sமீரீனீமீஸீt) டிரேட் டு டிரேட் பிரிவுக்கு மாற்றி இருக்கிறது. பாராமவுன்ட் கம்யூனிகேஷன்ஸ், பெஸ்ட் அண்ட் கிராம்ப்டன் இன்ஜினீயரிங், சென்டம் எலெக்ட்ரானிக், பயோனீர் டிஸ்டிலெரிஸ் இதில் முக்கியமானவை!

குவிந்த புகார்கள்!

செபியிடம் 28 நிறுவனங்கள் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் இரண்டு மாதங்களுக்கு மேல் தீர்க்கப்படாமல் கிடக்கிறது. இதில் ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, ஐ.டி.சி., ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ், சைலாக் சிஸ்டம்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் அடங்கும். வாட்சா கார்ப்பரேஷன்ஸ் என்கிற நிறுவனம் மீது மட்டுமே 193 புகார்கள் தீர்க்கப்படாமல் இருக்கிறதாம். இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது  எச்சரிக்கை தேவை!  

டிவிடெண்ட் தந்த லாபம்!

பட்டியலிடப்பட்ட நிறுவனங் களில் பொதுமக்களின் பங்களிப்பு குறைந்தது 25 சதவிகிதமாவது  இருக்கவேண்டும் என்று போராடி வருகிறது செபி. இந்நிலையில், பங்கு மூலதனத்தை அதிகமாக வைத்திருக்கும் சில நிறுவனங்கள் கணிசமான டிவிடெண்ட் வழங்கி கொள்ளை லாபம் கண்டிருக்கின்றன. ஹீரோ மோட்டோகார்ப், டி.எல்.எஃப்., சன் பார்மா போன்ற நிறுவனங்கள் இதில் அடங்கும்.  

உதாரணமாக,  ஹீரோ மோட்டோகார்ப் டிவிடெண்ட் தந்ததன் மூலம் மட்டும் 2012-13-ல் 645 கோடி ரூபாயைச் சம்பாதித்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதி ஆண்டில் 491 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில் சன் பார்மா நிறுவனம் டிவிடெண்ட் மூலம் சம்பாதித்தது 280 கோடி ரூபாயிலிருந்து 330 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

வங்கிகளின் வாராக்கடன்!

பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் 3 முதல் 5 சதவிகிதம் வரை உள்ளது. இதை ஒரு சதவிகிதம் அளவுக்கு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதிச் சேவைகள் துறையின் செயலாளர் ராஜீவ் தாக்ரு, பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் அவர் கொஞ்சம் கடினமாகவே வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பதால் கூடிய விரைவில் வங்கிகள், வாராக் கடனை வேகமாகக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷேர்லக் : டிவிடெண்டில் லாபம் பார்த்த கம்பெனிகள்!

கேள்விக்கு மேல் கேள்வி!

அண்மையில் யெஸ் பேங்கின் பங்கு முதலீட்டாளர் கூட்டம் நடந்தது. அப்போது வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்திருக்கிறார்கள். தவிர, இந்நிறுவனம் குறித்த வேறு சில சர்ச்சைகளும் மீடியாவின் வெளிச்சத்துக்கு வர, இந்தப் பங்கின் விலை கொஞ்சம் குறைந்திருக்கிறது.    

செபியின் புதிய நிபந்தனை!

நிறுவனங்கள் பங்குகளைத் திரும்ப வாங்க (பை பேக்) ஆஃபர் அறிவிக்கும்போது குறைந்தபட்சம் 50 சதவிகிதப் பங்குகளையாவது வாங்கினால்தான் அந்த ஆஃபர் வெற்றி பெற்றதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என செபி புது நிபந்தனையைக் கொண்டுவர இருக்கிறது. இதற்கான கூட்டம் ஜூன் 25-ல் நடக்கிறது.

தள்ளுபடியில் பங்குகள்!

பொதுத் துறை நிறுவனங்கள், ஓப்பன் ஆஃபர் சேல்ஸ்க்குப் பிறகு அதன் பணியாளர்களுக்கு 5 சதவிகித தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய செபி அனுமதி வழங்க ஆலோசனை செய்து வருகிறது. இதன் மூலம் பொதுத் துறை பணியாளர்களைப் பங்கு முதலீட்டில் ஈடபட வைக்கலாம் என்று நினைக்கிறது.  பொதுத் துறை நிறுவனங்களின் பங்கை எப்படி எல்லாம் விற்க வேண்டியிருக்கிறது!  

இனி முப்பது நாள்!

வரிச் சலுகை அளிக்கும் ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம் என்.எஃப்.ஓக்கு தற்போது 15 நாட்கள் அளிக்கப்படுகிறது. இதை 30 நாட்களாக நீடிக்க செபி ஆணை பிறப்பித்துள்ளது. இனியாவது இதில் அதிக முதலீடு வரட்டும்.

சந்தை உயரும்!

ரூபாய் மதிப்பு சரிவதால், சந்தை சரிகிறதே என பலரும் வருத்தப்படலாம். உங்களை சந்தோஷப்படுத்த ஒரு சின்ன டேட்டா இனி.  கடந்த ஒரு வருடத்தில் ஒரு எஃப் அண்ட் ஓ செட்டில்மென்டுக்கும் இன்னொரு எஃப் அண்ட் ஓ செட்டில்மென்டுக்கும் இடையே அதிகபட்ச மாற்றம் 350 புள்ளிகள்தான். இதில் இரண்டுமுறை மட்டுமே 300 புள்ளிகளுக்கு மேல் மாற்றம் நடந்திருக்கிறது. அப்படி பார்த்தால் குறைந்தபட்சம் 5775 புள்ளிகள் வரை சந்தை செல்ல வாய்ப்பிருக்கிறது என்கிறார் என் அனலிஸ்ட் நண்பர். கொஞ்சம் ஃபாலோ பண்ணிப் பாருங்களேன்!

டாலரும் தங்கமும்!

தொடர்ந்து ஏழாவது வாரமாக ரூபாய் சரிந்துகொண்டே வருகிறது. இருந்தாலும் 60 ரூபாய் என்ற நிலையை உடைக்க முடியவில்லை. சில விஷயங்கள் அதைத் தடுத்துவிட்டது. உதாரணத்துக்கு, எஸ்ஸார் நிறுவனம் 1 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாடுகளில் கடன் வாங்கி இருக்கிறது. அதேபோல, சுமார் 40,000 கோடி அளவுக்கு ஹெச்.யூ.எல். பங்கினை அதன் தாய் நிறுவனமான யூனிலீவர் வாங்க இருக்கிறது. இந்தக் காரணங்களில் டாலர் சப்ளை அதிகமானது.

மேலும், 60 ரூபாய் என்பது முக்கியமான விலையாகப் பார்க்கப்பட்டதால் ஏற்றுமதியாளர்களும் தங்களிடம் இருக்கும் டாலர்களை விற்க ஆரம்பித்தார்கள். இதனால் ரூபாய் மேலும் சரியாமல் தடுக்கப்பட்டது. இருந்தாலும் ரூபாய் 60-யைத் தாண்டி, 62 ரூபாய்க்குகூட செல்ல வாய்ப்பு இருக்கிறது.

டாலர் பலமடைவதால், ரூபாய் சரிவதோடு, தங்கத்தின் விலையும் குறைகிறது. தற்போது 1,290 டாலர் (அவுன்ஸ்) என்ற அளவில் வர்த்தகமாகிறது. டாலர் இன்னும் பலமடைந்தால், 1,200 டாலர் வரை தங்கம் சரிய வாய்ப்புண்டு.

தவிர, முன்பு தங்கம் விலை சரிந்தபோது இருந்த பிஸிக்கல் டிமாண்ட் இப்போது இல்லை. ரிலையன்ஸ் நிறுவனம் தங்க நாணயங்கள் விற்பதை நிறுத்திவைத்திருக்கிறது. அதேபோல, கோல்டு ஃபண்டுகளில் புதிய முதலீட்டையும் நிறுத்திவைத்திருக்கிறது. இதனால், இந்தியாவில் தங்கம் விலை இன்னும்கூட குறைய வாய்ப்பு இருக்கிறது.