Published:Updated:

அக்ரி கமாடிட்டி !

பானுமதி அருணாசலம்.

ஜீரகம்!(Jeera)

##~##

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவை அதிகரித்ததன் காரணமாக ஜீரகத்தின் விலை சென்ற வாரத்தில் அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம், ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்ததே. சிரியா மற்றும் துருக்கியில் சப்ளை குறைந்ததால் இந்தியாவை நோக்கி ஆர்டர்கள் வந்தவண்ணம் உள்ளன. என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஜூலை கான்ட்ராக்ட் 13,490 ரூபாயாக (வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி) வர்த்தகமாகிறது.  தினவரத்தாக 9,000-10,000 பைகள் வரத்து வந்தாலும்,  13,000 முதல் 14,000 பைககள் (ஒரு பை என்பது 55 கிலோ) வரை வர்த்தகமாகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகள் அதிகமாக இருப்பதன் காரணமாக விலை குறையாமல் இருக்கிறது. வரும் வாரத்தில் ஜீரகத்தின் விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மஞ்சள்! (Turmeric)

வரத்து குறைந்ததன் காரணமாக ஈரோடு மஞ்சள் சந்தைக்கு ஜூன் 17-ம் தேதி முதல் ஐந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டது. ஏற்றுமதிக்கு அதிக தேவை இருப்பதால் இதன் ஃப்யூச்சர் மார்க்கெட் ஸ்திரமாக இருக்கிறது. மஞ்சள் விவசாயிகள் அதிக வருமானத்துக்காக கரும்பு உள்ளிட்ட மற்ற பயிர்களுக்குச் சென்றுவிட்டதாக தெரிகிறது. கடந்த நிதி ஆண்டை ஒப்பிடும்போது மஞ்சள் பயிரிடுவது 20% குறைந்திருக்கிறது. குவிண்டால் 5,000 - 5,800 என்ற நிலையிலே வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி !

கடுகு எண்ணெய்! (Mustard Oil)

சப்ளை குறைவாக இருந்ததும், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு தேவை அதிகரித்ததன் காரணமாகவும் கடுகு எண்ணெய்யின் விலை அதிகரித்து வர்த்தகமானது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மண்டிகளில் விலை சற்று அதிகரித்து வர்த்தகமானது.  குஜராத்தில் சீராக வர்த்தகமானது.  வரும் பருவ மழை சீஸன் நாட்களில் தேவை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், மூன்று மாநிலங்களிலும் தேவை அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கிறது. தேவை அதிகமாக இருப்பதால் கடுகு எண்ணெய்யின் விலை வரும் நாட்களில் அதிகரித்து வர்த்தகமாகும்.

ஏலக்காய்! (Cardamom)

ரம்ஜான் பண்டிகை வரவிருப்பதால் வரும் நாட்களில் நல்ல ஏற்றுமதி டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலக்காய் விளையும் பகுதிகளில் நல்ல மழை பொழிந்திருப்பதால் இந்த வருடம் உற்பத்தி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை முதல் வாரத்தில் இருந்து புதிய ஏலக்காய் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சின்ன ஏலக்காய் 2012-2013-ல் ஏப்ரல் முதல் மார்ச் மாதத்தில் 2,250 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய வருடம் 4,650 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தேவை குறைவாக இருப்பதால் வரும் நாட்களிலும் ஏலக்காய் விலை குறைந்தே வர்த்தகமாகும். அதன் பிறகு ஒரு சப்போர்ட்-யை அடையும்.

மிளகு! (Pepper)

அக்ரி கமாடிட்டி !

சீரான வரத்து மற்றும் தேவை அதிகமாக இருந்ததால் சென்ற வாரத்தில் மிளகு விலை அதிகரித்து வர்த்தகமானது. நூறு கிலோ மிளகு 35,900 ரூபாய்க்கு வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் இந்திய மிளகின் விலை ஒரு டன் 6,400 டாலருக்கு விலை போனது. 2012-13-ல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மிளகு 16,000 டன்களாக இருந்தன. இது, சென்ற வருடத்தில் 26,700 டன்னாக இருந்தது. வரத்து குறைந்துள்ளதாலும், நல்ல ஏற்றுமதி டிமாண்ட் இருப்பதன் காரணமாகவும் வரும் நாட்களில் மிளகு விலை அதிகரித்தே வர்த்தகமாகும்.

மிளகாய்! (Chilli)

சப்ளை அதிகமாக இருந்தது மற்றும் தேவை குறைவாக இருந்ததன் காரணமாக மிளகாய் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. பழைய சரக்கு அதிகளவுக்கு விற்பனைக்கு வந்ததாலும் விலை சரிந்தது. குண்டூர் சந்தையில் வரத்து 83,000 பைகளாக இருந்தது (ஒரு பை 45 கிலோ). நூறு கிலோ 6,200 ரூபாய்க்கு வர்த்தகமானது.

அக்ரி கமாடிட்டி !

மேலும், வரத்து அதிகமாக இருந்ததால் விலை குறைந்தது. 2012-13-ல் ஏப்ரல் - மார்ச் மாதத்தில் 2,81,000 டன் மிளகாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே, சென்ற வருடத்தில்(2011-12) 2,41,000 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களிலும் மிளகாய் விலை குறைந்து வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !