சச்சின்போல ஆகவேண்டும் என்பது சித்தார்த்தின் கனவு; யாரையும் அண்டி நிற்காமல் சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பது மூன்றாம் ஆண்டு இன்ஜினீயரிங் படிக்கும் சஹானாவின் கனவு;

35 வயதுக்குள் சொந்தமாக பிசினஸ் தொடங்கிவிடவேண்டும் என்பது பிரதாப்பின் கனவு. இதுபோல ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கனவு நிச்சயம் இருக்கிறது.

நாம் அனைவரும் ஒரு பேட்டரி மாதிரி. நமக்குள் இருக்கும் கனவு அர்த்தமுள்ளவையாக இருக்கும்போது, நமக்கு ஓர் உத்வேகம் கிடைக்கிறது. அது நமக்குள் இருக்கும் பேட்டரியை சார்ஜ் ஏற்றுகிறது. அடுத்தக்கட்டத்தை நோக்கி நடக்கவைத்து, நம் கனவுகளை நிஜமாக்குகிறது. ஆனால், நம் கனவுகள் அர்த்தமற்றவையாக இருக்கும்போது, நம் பேட்டரியில் சார்ஜ் ஏறுவதில்லை. இதனால் மனஅழுத்தம்தான் அதிகமாகிறது.

இன்னும் சிலர் அர்த்தமுள்ள கனவுகளை கண்டாலும், அவர்களால் அதை நிஜமாக்க முடிவதில்லை. அதற்குத் தேவையான பணம் அவர்களிடம் இல்லை. தேவைப்படும் பணத்தை அவர்கள் பிறரிடம் கேட்பதுமில்லை. காரணம், கணக்கு, பட்ஜெட் போன்ற யதார்த்தத்தை அவர்கள் வெறுக்கிறார்கள். கனவு காண்பவர்கள் கணக்குப்போட தயங்கினால், கனவு மட்டுமல்ல, அவர்களின் எதிர்காலமே சிதைந்துவிடும்.

பட்ஜெட் போடுவது எப்படி என்பதைத் தெரிந்துகொண்டால் மட்டுமே இலக்குகளை அடையும் வித்தை புரியும். சரி, பட்ஜெட் போடுவது எப்படி?

பட்ஜெட் என்றாலே வரவு, செலவு கணக்குதானே! எது வருமானம், எது செலவு என்பதை அறிய பத்து விஷயங்களைச் சொல்கி றேன். இதன்படி கணக்குப் போட்டால், அடுத்து நீங்கள் செய்யவேண்டியது என்ன என்பது உங்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரியும்.

வருமானம் எவ்வளவு: மோசமான சூழ்நிலையிலும் உங்கள் வருமானம் எவ்வளவாக இருக்கும்? அது எவ்வளவு காலத்துக்கு கிடைக்கும்?

முதலீடு: ஒரு பிசினஸை வாங்கும்போது உங்கள் பணம் எவ்வளவு அதில் முடங்கும், எவ்வளவு காலத்துக்கு முடங்கும்?

திரும்ப விற்கும்போது என்ன கிடைக்கும்: உங்கள் பிசினஸை விற்கும்போது உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?

மார்ஜின் தொகை: இதற்கு எவ்வளவு கடன் தேவைப்படும்?

பராமரிப்பு செலவு: நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு எவ்வளவு செலவாகும்?

உருவாக்கும் செலவு: கடன் வாங்கி செலவு செய்து ஒரு விஷயத்தை உருவாக்குகிறீர்கள் என்பதால் தவறு நடக்க வாய்ப்பு அதிகம்.

மீண்டும் உருவாக்க ஆகும் செலவு: ஒரு விஷயத்தில் தவறு நடந்தாலோ அல்லது காலத்துக்கு தகுந்ததுபோலவோ மீண்டும் உருவாக்க ஆகும் செலவு.

இன்ஷூரன்ஸ் செலவு: உங்களது பிசினஸை பாதுகாக்க இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு ஆகும் செலவு.

கடன் வாங்க ஆகும் செலவு: வாங்கும் கடனுக்கு முதல் நாளில் இருந்து வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.

அவசரகால தொகை: எதிர்பாராத செலவுகளுக்கு, அரசாங்கம் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் செலவுகளுக்கு.

மேற்சொன்ன விஷயங்களில், முதல் மூன்று வருமானத்தைக் குறிக்கக்கூடியது. கடைசி ஏழும் செலவுகளைக் குறிக்கக்கூடியது. வருமானம் முழுவதையும் கூட்டுங்கள். அதேபோல, செலவுகளையும் கூட்டுங்கள். எது அதிகமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து முடிவு எடுங்கள். வருமானம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் உங்களது கனவுகளை நோக்கி மேலே செல்லுங்கள். ஒருவேளை செலவுகள் அதிகமாக இருந்தால்கூட உங்களது கனவுகளை விட்டுவிட வேண்டாம். எந்தெந்த வழிகளில் செலவுகளை குறைக்க முடியும் என்று ஆராயுங்கள்.

இந்தக் கணக்கையும் பட்ஜெட்டையும் போடுவதற்கு நீங்கள் இன்ஜினீயரிங்கோ, எம்.பி.ஏ.வோ படித்திருக்கவேண்டும் என்பதில்லை. ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்தாலே போதும்.

ஒவ்வொரு கனவும் நனவாக நிச்சயம் ஒரு பட்ஜெட் தேவை. இதை தவிர்க்க முடியாது. 'பட்ஜெட் போடவேண்டும் என்பதற்காகவே நான் கனவு காணாமல் இருக்கிறேன்’ என்று நீங்கள் பிடிவாதமாக இருந்தால், இழப்பு வேறு யாருக்குமல்ல, உங்களுக்குத்தான்! நிறைவேறாத ஆசை, பட்ஜெட்டுடன் கூடிய கனவு! - உங்கள் சாய்ஸ் எது?

(சொல்கிறேன்)