Published:Updated:

கமாடிட்டி - மெட்டல் & ஆயில்

- பானுமதி அருணாசலம்.

கச்சா எண்ணெய்!

##~##

இந்த வாரம் கச்சா எண்ணெய் குறித்து விவரமாக கூறுகிறார் ஐ.எஃப். ஐ.என். கமாடிட்டி நிறுவனத்தின் ரிசர்ச் அனலிஸ்ட் ரங்கராஜன். '' கச்சா எண்ணெய் இந்த வாரம் ஒரு பேரல் 99.21  டாலரிலிருந்து 94.64 டாலராக குறைந்தது. இந்த விலை குறைவிற்கு காரணம் அமெரிக்க ஃபெடரல் வங்கி பாண்ட் பையிங் திட்டங்களை திரும்ப பெற்றுக்கொள்ள போவதாக பென் பெர்னான்கி தெரிவித்ததே! காரணமாகும். அமெரிக்கப் பொருளாதாரம் முன்னேறி வருவதால் இந்த வருட இறுதியிலிருந்து பாண்ட் பையிங் திட்டத்தைக் குறைத்துக்கொண்டு, அடுத்த வருடம் முற்றிலுமாக பாண்ட் பையிங் திட்டத்தை நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது ஃபெடரல் வங்கி. இதனால் டாலருக்கு நிகரான அனைத்து கரன்சிகளின் மதிப்பும் குறைந்து டாலர் வலுப்பெற்றது. கச்சா எண்ணெய் அதிகம் பயன்படுத்தும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான சீனாவின் பி.எம்.ஐ. புள்ளிவிவரங்கள் கடந்த செப்டம்பர்  மாதத்திற்கு பிறகு குறைந்து 48.3 புள்ளிகளாக வந்துள்ளது. கச்சா எண்ணெய் அதிகமாக உற்பத்தி செய்யும் சிரியாவில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து வரும் சப்ளை குறைந்துள்ளது. சிரியாவில் ஏற்பட்டிருக்கும் கலவரம் பக்கத்து நாடுகளுக்கும் பரவிவிடும் என்ற பயம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது. சிரியா நாட்டிலிருந்து வரும் சப்ளை குறைந்தால் விலை சற்று முன்னேற வாய்ப்புகள் உள்ளது. இல்லையெனில், வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வர்த்தகமாகவே வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தங்கம்!

இந்த வாரம் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து கோட்டக் கமாடிட்டி சர்வீசஸ் நிறுவனத்தின் ரிசர்ச் துணை தலைவர் தர்மேஷ் பாட்டியா கூறுகிறார்.

கமாடிட்டி - மெட்டல் & ஆயில்

''கடந்த மூன்று வருடங்களில் இல்லாதளவுக்கு தங்கத்தின் விலை சென்ற வியாழக்கிழமையன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,300 டாலருக்கு குறைந்தது. இந்த வருட இறுதியிலிருந்து பாண்ட் பையிங் திட்டத்தை நிறுத்திக்கொள்ளப் போவதாக ஃபெடரல் வங்கி அறிவித்ததால் டாலரின் மதிப்பு அதிகரித்தது. இதன்காரணமாக தங்கம் மற்றும் மற்ற கமாடிட்டி, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் டாலரில் தங்களது முதலீட்டை மாற்றினர். காமெக்ஸ் சந்தையில் தங்கத்திற்கான ஃப்யூச்சர்ஸ் மார்ஜின் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக காமெக்ஸ் சந்தையில் 6 சதவிகிதம் வரை தங்கத்தின் விலை இறங்கியது. டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து

கமாடிட்டி - மெட்டல் & ஆயில்

வந்தால் தங்கத்தின் விலை வரும் நாட்களில் குறைந்து வர்த்தகமாகும். எனினும், இந்திய ரூபாயின் மதிப்பைப் பொறுத்து விலை இருக்கும்.''

அடிப்படை உலோகங்கள்!

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி அறிவித்துள்ள பாண்ட் பையிங் திட்டத்தை நிறுத்திக்கொள்வது மற்றும் சீனாவின் பி.எம்.ஐ. புள்ளிவிவரம் குறைந்து வந்தது உள்ளிட்ட காரணங்களால் காப்பர் கடந்த 20 மாதங்களில் இல்லாதளவிற்கு விலை குறைந்து வர்த்தகமானது. ரியோ டின்டொ நிறுவனம் தனது ஓயூ டோல்கோய் (ஷீஹ்u tஷீறீரீஷீவீ) சுரங்கத்திலிருந்து வரும் வெள்ளிக்கிழமை முதல் காப்பரை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்காரணமாக சப்ளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எல்.எம்.இ. காப்பர் இன்வென்டரி கடந்த பத்து வருடங்களில் இல்லாதளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை சுமார் 14 சதவிகிதம் வரை காப்பரின் விலை குறைந்துள்ளது மொத்தத்தில் பார்க்கும்போது டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதால் வரும் நாட்களிலும் அடிப்படை உலோகத்தின் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

வெள்ளி!

அமெரிக்காவில் பொருளாதாரம் முன்னேறி வருவதால் பாண்ட் பையிங் திட்டம் இந்த ஆண்டின் இறுதியில் குறைத்துக்கொள்ளப்படும் என ஃபெடரல் வங்கி தலைவர் பென் பெர்னான்கி அறிவித்துள்ளார். இதன் காரணமாக வெள்ளியின் விலையும் கடந்த 2010-ம் வருடத்திற்கு பிறகு நேற்று விலை அதிகமாக குறைந்தது. இந்த வருடத்தில் மட்டும் வெள்ளி சுமார் 33 சதவிகிதம் வரை குறைந்து இந்த வருடத்தின் மோசமான கமாடிட்டியாகச் செயல்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிலோ 41,305 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஐரோப்பிய யூனியன் நிதி அமைச்சர்களின் கருத்தரங்கு காரணமாக நடப்பு கணக்கு நிலுவை முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதன்காரணமாக யூரோவின் மதிப்பு அதிகரித்து, வெள்ளியின் விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது. டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் வாரத்திலும் வெள்ளி விலை குறைந்தே வர்த்தகமாகும்.

கமாடிட்டி - மெட்டல் & ஆயில்

இயற்கை எரிவாயு!

கமாடிட்டி - மெட்டல் & ஆயில்

சென்ற வாரத்தில் இயற்கை எரிவாயு விலை இரண்டு சதவிகிதம் வரை நிமெக்ஸ் (ழிசீவிணிஙீ,) சந்தையில் குறைந்து வர்த்தக மானது. அமெரிக்காவின் இயற்கை எரிவாயு இன்வென்டரி எதிர்பார்த்ததைவிட அதிகரித்தது மற்றும் கிழக்கு அமெரிக்காவில் கோடைகாலம் துவங்கியிருப்பதாலும் சப்ளை அதிகரித்து, தேவை குறைந்து நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது. ஜூன் 14-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் அமெரிக்காவின் இயற்கை எரிவாயு இன்வென்டரி 91 பில்லியன் கியூபிக் ஃபீட் அதிகரித்து 2.438 டிரில்லியன் கியூபிக் ஃபீட்டாக இருப்பதாக எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது. சப்ளை அதிகமாகவும், தேவை குறைவாகவும் இருப்பதால் இயற்கை எரிவாயு விலை வரும் வாரத்திலும் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

கரன்சி பார்வை!

ரூ. 58 நிலையில் இருக்கும்!

இந்த வாரம் கரன்சி குறித்து ஐ.எஃப்.சி.ஐ. ஃபைனான்ஷியல் நிறுவனத்தின் கரன்சி ரிசர்ச் அனலிஸ்ட் உமா கூறுகிறார்.

''கடந்த வாரம் ஜூன் 19-ம் தேதி இந்திய கரன்சியின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு 59.98 ரூபாயாக குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் கடன் மற்றும் ஈக்விட்டியில் இருந்த முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரே நாளில் எடுத்ததே! இந்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை அதிகரித்ததால் தங்கத்தின் இறக்குமதி குறையும் என நினைத்தது. ஆனால், ஏப்ரல் மாதத்தைவிட மே மாதத்தில் தங்க இறக்குமதி அதிகரித்து நடப்பு கணக்குப் பற்றாக்குறையை அதிகப்படுத்தியுள்ளது. இதனால், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது. 2013 மே மாதம் வரையில் இதுவரை இந்திய கரன்சியின் மதிப்பு 10 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. ஜூன் 20-ம் தேதி வரலாறு காணாத அளவில் மதிப்பு குறைந்து பிறகு 21-ம் தேதி சற்று முன்னேற துவங்கியது. வரும் வாரத்தில் 58.50 மற்றும் 58.00 ரூபாய் என்ற நிலையில் கரன்சி இருக்கும்'' என்றார். கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்

04466802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே! கமாடிட்டியில் சந்தேகமா?