Published:Updated:

ஷேர்லக் : ஐ.பி.ஓ. வருது தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் !

ஷேர்லக் : ஐ.பி.ஓ. வருது தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் !

ஷேர்லக் : ஐ.பி.ஓ. வருது தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் !

ஷேர்லக் : ஐ.பி.ஓ. வருது தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் !

Published:Updated:
##~##

வெள்ளிக்கிழமை மாலை மப்பும் மந்தாரமுமாக இருக்க, ''மழை வரும்போல இருக்கிறது. என்றாலும், நான் உம் அலுவலகத்துக்கு வருகிறேன்'' என்று போன் செய்து சொன்னார் ஷேர்லக். சிறிது நேரத்தில் இடியும் மின்னலும் சேர்ந்து தடதடக்க, படபடவென தன்னுடைய பைக்கில் வந்து இறங்கினார். மழைக்கோட்டை கழற்றி வைத்துவிட்டு நம் கேபினுக்குள் வந்து உட்கார்ந்தார்.

''தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் கூடிய சீக்கிரத்துல ஐ.பி.ஓ. வருதாமே?'' - வந்து உட்கார்ந்தவுடன் அவரை வம்புக்கு இழுத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தனியார் துறையைச் சேர்ந்த இந்த வங்கியின் ஐ.பி.ஓ. இன்னும் 6 முதல் 8 மாதங்களில் வரலாம் என்கிறார்கள். பங்கு வெளியீட்டுக்கான ஆலோசகராக எஸ்.பி.ஐ. கேப்பிட்டல்ஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டிருக்கிறது. ரூ.10  முக மதிப்பு கொண்ட இந்நிறுவனப் பங்கின் புத்தக மதிப்பு சுமார் 71 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாம். தற்போது இந்தப் பங்கு ஒன்று 65,000 ரூபாய் என்கிற நிலையில் கைமாறி வருவதாக தகவல். அதுவும் ஒன்று, இரண்டு என குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கிறதாம். ஐந்து, பத்து என கிடைத்தால் மொத்தமாக கொத்திக்கொண்டு செல்லவே பலர் தயாராக இருக்கிறார்களாம். ஐ.பி.ஓ. வரும்முன் தாராளமாக போனஸ் பங்குகளை முதலீட்டாளர்களுக்குத் தரப்போவதாகவும் தகவல். என்றாலும், வங்கி தொடர்பான வழக்கு இருப்பதால் ஐ.பி.ஓ. முடிவு கொஞ்சம் தள்ளிப் போனாலும் ஆச்சரியமில்லை'' என்றார்.

''கோல் இந்தியா பங்கின் விலை தரை தட்டிவிட்டதே?'' என்றோம் இஞ்சி டீ தந்தபடி.

''நிலக்கரி உற்பத்தியில் பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா உள்ளிட்ட ஓரிரு நிறுவனங்கள் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதைக் கட்டுப்படுத்தும்விதமாக மத்திய அரசு, ஒழுங்குமுறை ஆணையத்தை (ரெகுலேட்டர்) அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவல் வெளியானதையடுத்து இப்பங்கின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தரை தட்டியது. சர்வதேச அளவில் நிலக்கரி விலை குறைந்து வருவதும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் லாபத்தைப் பாதிக்கும் என அனலிஸ்ட்கள் கருதுகின்றனர். அந்த வகையில் இப்பங்கின் விலை இன்னும் இறங்க வாய்ப்புள்ளது'' என்றார், டீயைக் குடித்தபடி.  

ஷேர்லக் : ஐ.பி.ஓ. வருது  தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் !

''புதிய வங்கிக்கான லைசென்ஸ் பெற விண்ணப்பம் செய்யப்போவதில்லை என மஹிந்திரா சொல்லிவிட்டதே?'' என்று வினவினோம்.

''வருகிற திங்கட்கிழமையோடு புதிய லைசென்ஸ் பெற விண்ணப்பிப்பதற்கான காலம் முடிவடைகிறது. மஹிந்திரா நிறுவனம் போட்டியிலிருந்து விலகிவிட்டாலும், ஆதித்யா பிர்லா, ஸ்ரீராம் உள்பட பல நிறுவனங்கள் போட்டியில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. என்.பி.எஃப்.சி.யான முத்தூட்கூட புதிய வங்கிக்கு விண்ணப்பிக்கப் போகிறதாம்!  யாருக்கு அனுமதி கிடைக்குமோ'' என்றார்.

''இத்தனைநாளும் விலை குறைந்துவந்த கிராம்டன் கிரீவ்ஸ் நிறுவனம் பைபேக் அறிவித்திருக்கிறதே?'' என்று கேட்டோம்.

''கடந்த இரு ஆண்டுகளாகவே இப்பங்கின் விலை குறைந்து வந்தது. 267 ரூபாயில் இருந்து கிட்டத்தட்ட 71 வரை இந்தப் பங்கு இறங்கியது. மிகக் குறைந்த இந்த விலையில் இப்பங்கை பைபேக் செய்து, தன்னுடைய இருப்பை அதிகமாக்கிக்கொள்ள அதன் புரமோட்டர்கள் நினைத்து, 10 சதவிகித பங்குகளை சந்தையில் வாங்கத் திட்டமிட்டிருக்கின்றனர். இதன்மூலம் அந்நிறுவனத்தின் புரமோட்டரின் வசமிருக்கும் பங்கு 57 சதவிகிதமாக உயரும். பங்கு ஒன்றுக்கு 125 ரூபாய் என்கிற அளவில் பைபேக் செய்ய நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இந்தப் பங்கு இப்போது கொஞ்சம் விலை உயர்ந்து, 87 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இன்னும்கூட விலை உயர வாய்ப்புண்டு'' என்று விளக்கம் தந்தார்.

ஷேர்லக் : ஐ.பி.ஓ. வருது  தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் !

''எல்.ஐ.சி. நிறுவனம் எக்கச்சக்கமாக பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்கிறதே, அது செய்யும் முதலீட்டுக்கு என்ன உத்தரவாதம்?'' - பலர் மனதில் இருக்கும் சந்தேகத்தைக் கேள்வியாக கேட்டோம்.

''இன்றைய தேதியில் இந்திய பங்குச் சந்தையின் வளர்ச்சியில் பொதுத் துறை ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.க்கு பெரும் பங்கு உள்ளது. இது, கடந்த 2012-13-ல் மட்டும் இந்திய பங்குச் சந்தையில் சுமார் 17,630 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. அது செய்துள்ள பங்கு முதலீட்டின் மொத்த மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகம். இவ்வளவு அதிக தொகையை எல்.ஐ.சி. நிர்வகிக்கவேண்டி இருப்பதால், அதன் இயக்குநர் குழுவில் இயக்குநர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பாலிசிதாரர்களின் பணத்துக்கு இன்னும் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என நினைக்கிறது'' என்றார்.  

''ரூபாய் மதிப்பு குறைந்தாலும் வெளிநாட்டு முதலீடு அதிகரித்திருக்கிறதே?'' என்றோம்.

''இந்திய பங்குச் சந்தையில் வெளிநாடுகளை சேர்ந்த ஹெட்ஜ் ஃபண்டுகள் அதிக முதலீட்டை மேற்கொண்டு வருகின்றன. பங்கேற்பு ஆவணங்கள் என்கிற பி.நோட்ஸ் மூலம் முதலீடு செய்கின்றன. இத்தொகை கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் ரூ.1.68 லட்சம் கோடியாக (சுமார் 2,800 கோடி டாலர்) அதிகரித்துள்ளது. அந்நிய நிதி நிறுவனங்களின் (எஃப்.ஐ.ஐ.கள்) முதலீட்டில் சுமார் 20 சதவிகிதம்  இந்த பி.நோட்ஸ் முதலீடாகவே இருக்கிறது'' என்றார்.  

''ரூபாய் மதிப்பு சரிந்த வேகத்தில் மீண்டும் உயர ஆரம்பித் திருக்கிறதே?'' என்றோம்.

''எல்லாம் ஆர்.பி.ஐ.யின் கைங்கர்யம்தான். கடந்த வெள்ளிக்கிழமை வரக்கூடிய நடப்புக் கணக்கு பற்றாக்குறை தகவலை வியாழக்கிழமையே வெளியிட்டது. அந்த தகவல் நன்றாக இருக்க, கூடுதலாக கேஸ் விலையை உயர்த்தியது. தவிர, டெலிகாம் துறையை இன்ஃப்ரா பட்டியலில் சேர்த்தது என பல காரணங்களால் ரூபாய் சரிவு தடுக்கப்பட்டது'' என்று புறப்படத் தயாரானவர், தன் செல்போனில் லேட்டஸ்ட்-ஆக வந்த செய்தியைப் படித்தார்.

''அமெரிக்க அரசின் இமிக்ரேஷன் பில்லுக்கு செனட்டில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதில் ஹெச்.ஒன்.பி. விசாவைக் குறைப்பது, விசா கட்டணத்தை அதிகரிப்பது போன்றவை அடக்கம். இதனால், இந்தியாவின் முக்கியமான ஐ.டி. நிறுவனங்களின் வருமானம் 15 சதவிகிதம் வரை பாதிக்கக்கூடும்.

இந்த சட்டத்துக்கு இறுதி வடிவம் கிடைக்க ஆறு மாதங்கள் ஆக வாய்ப்பு இருக்கிறது என்றாலும் முன்னணி ஐ.டி. பங்குகளின் விலை உடனடியாக குறைய வாய்ப்புண்டு. எனவே, ஜாக்கிரதை'' என்று சொல்லிவிட்டு, வழக்கம்போல ஷேர்டிப்ஸ் எதுவும் தராமலே புல்லட்டில் பறந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism