Published:Updated:

அக்ரி கமாடிட்டி !

பானுமதி அருணாசலம்.

அக்ரி கமாடிட்டி !

பானுமதி அருணாசலம்.

Published:Updated:
அக்ரி கமாடிட்டி !

மிளகு! (Pepper)

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரத்து குறைவு மற்றும் உள்நாட்டு தேவை அதிகரித்ததன் காரணமாக மிளகு விலை சென்ற வாரத்தில் அதிகரித்து வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் இந்திய மிளகின் விலை ஒரு டன் 7,000 டாலருக்கு விற்பனையானது. வியட்நாம் நாட்டில் மிளகு அறுவடை நிறைவடைந்துள்ளதால் இன்னும் சில நாட்களில் விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியாவில் அறுவடை காலம் இன்னும்  சில நாட்களில் துவங்க உள்ளது. இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஜெர்மனி சுமார் 2,086 டன் மிளகை இறக்குமதி செய்துள்ளது. இது, சென்ற வருடத்தில் இதே மாதத்தில் 1,718 டன்னாக இருந்தது.  இந்திய மிளகிற்கு நல்ல ஏற்றுமதி டிமாண்ட் இருப்பதாலும் வரத்து குறைந்துள்ளதாலும் வரும் வாரத்தில் மிளகு விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !

ஜீரகம்! (Jeera)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவை குறைந்ததன் காரணமாக ஜீரகத்தின் விலை குறைந்து வர்த்தகமானது. வடமேற்கு இந்தியாவில் மழை பெய்ததன் காரணமாக ஜீரகத்தில் ஈரப்பதம் படிந்துள்ளது. உஞ்ஹா சந்தைக்கு சென்ற வியாழன் சுமார் 13,000 பைகள் (ஒரு பை என்பது 55 கிலோ) தின வரத்தாக வந்தது. ஸ்பாட் விலை நூறு கிலோ 13,900 ரூபாய்க்கு வர்த்தகமானது. தற்போது விலை குறைந்திருந்தாலும், நீண்டகாலத்தில் பார்க்கும்போது துருக்கி மற்றும் சிரியாவில் உள்நாட்டு பிரச்னைகள் நடப்பதால் இந்திய ஜீரகத்திற்கு சந்தை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இந்தாண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மட்டும் சுமார் 21,000 டன் ஜீரகம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி ஆர்டர்கள் வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், குவிண்டால் 14,000 ரூபாய்க்கு விரைவில் வர வாய்ப்புள்ளது.

அக்ரி கமாடிட்டி !

 மஞ்சள்! (Turmeric)

தேவை குறைந்ததன் காரணமாக சென்ற வாரத்தில் மஞ்சளின் விலை குறைந்து வர்த்தகமானது. நல்ல விலையை எதிர்பார்த்து விவசாயிகள் மஞ்சளை இருப்பு வைத்துள்ளதாக தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஈரோடு மஞ்சள் சந்தை ஒரு வாரகால விடுமுறைக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டாலும் வரத்து அதிகரிக்கவில்லை. சென்ற வாரத்தில் நிஜாமாபாத் மற்றும் ஈரோடு சந்தைக்கு 3,000 மற்றும் 3,500 பைகள் (ஒரு பை என்பது 70 கிலோ) முறையே வரத்து வந்தன. சென்ற வாரத்தில் விரலி மஞ்சள் நூறு கிலோ 5,900 - 6,500 ரூபாய் என்ற ரீதியில் வர்த்தகமானது.

அக்ரி கமாடிட்டி !

ஆந்திர மாநிலத்தில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ள பரப்பளவு, சென்ற வருடத்தைவிட 6,046 ஹெக்டேர் பரப்பளவாக குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் பார்க்கும்போது மஞ்சளின் விலை வரும் வாரத்தில் குறைந்தே வர்த்தகமாக சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.

ஏலக்காய்! (Cardamom)

அக்ரி கமாடிட்டி !

நல்ல தேவை இருந்ததன் காரணமாக சென்ற வாரத்தில் ஏலக்காய் விலை அதிகரித்து வர்த்தகமானது. ரம்ஜான் மாதம் வருவதால் மேற்கு ஆசியாவிலிருந்து நல்ல ஆர்டர்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏலக்காய் ஏலம்விடும் சந்தைகளில் சென்ற வாரத்தில் தினவரத்தாக 47 டன் வந்தது. ஸ்பாட் விலை ஒரு கிலோ சராசரி 551 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஏலக்காய் விளையும் பகுதிகளில் நல்ல மழை பெய்திருப்பதால் இந்த வருடத்தில் அதிகமாக உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற வாரத்தில் எம்.சி.எக்ஸ். குடோனில் 60.30 டன் ஏலக்காய் இருப்பு ஜூன் 26-ம் தேதி  நிலவரப்படி இருந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேவை அதிகமாக இருப்பதால் ஏலக்காய் விலை வரும் வாரத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிளகாய்! (Chilli)

அக்ரி கமாடிட்டி !

ஸ்பாட் சந்தைகளில் வரத்து அதிகமானதால் சென்ற வாரத்தில் மிளகாய் விலை குறைந்து வர்த்தகமானது. பங்களாதேஷ் நாட்டிலிருந்து  இந்திய மிளகாய்க்கு தேவை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. சென்ற வாரத்தில் குண்டூர் சந்தைக்கு 70,000 பைகள் வரத்து வந்தன. நூறு கிலோ 6,500 ரூபாய்க்கு வர்த்தகமானது. ரம்ஜான் மாதம் வரவிருப்பதால், அப்போது நல்ல டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தற்போது விலை குறைந்து வர்த்தகமாகவே வாய்ப்புகள் அதிகமாக தென்படுகின்றன. என்.சி.டி.இ.எக்ஸ். சந்தை குடோனில் 26 ஜூன் நிலவரப்படி 11,877 டன் இருப்பு இருந்தது. இதுவே அதற்கு முந்தைய வாரத்தில் 13,205 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

அக்ரி கமாடிட்டி !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism