காஸ்ட் மேனேஜ்மென்ட்

##~##

பணம் புழங்கும் இடத்தில் உங்களைப் பற்றிய மதிப்பீடுகள் உங்களுக்குத் தெரியவில்லை என்றாலோ, அல்லது தவறான மதிப்பீடு வைத்திருந்தாலோ பிசினஸில் நிலைப்பது கஷ்டம். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்களைப் பற்றிய மதிப்பீடுகள் சந்தையில் உலாவிக்கொண்டுதான் இருக்கும். அதற்கு பதில் நீங்களே உங்களைப் பற்றிய மதிப்பீடுகளை தெரிந்து வைத்திருக்கவேண்டும். அல்லது மதிப்பீடுகளை உருவாக்கவேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், மதிப்பீடுகளை உருவாக்குவது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு மிகப் பெரிய துணிச்சல்வேண்டும். உங்களைப் பற்றிய மதிப்பீடுகளை எந்தெந்த வகையில் உருவாக்க முடியும், எவற்றை எல்லாம் எப்படி மதிப்பீடு செய்யவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் சொல்கிறேன்.

கல்லூரி படிப்பை முடித்திருக்கும் கிருஷ்ணா, தன்னிடமும் தன் நண்பர்களிடமும் இருக்கும் பணத்தைக்கொண்டு ஒரு புதிய பொருளை உருவாக்கிவிட்டார். அந்தப் பொருளை சந்தைக்கு கொண்டு சென்றால் நிச்சயம் 'ஹிட்தான்’. ஆனால், அதை மொத்தமாக உற்பத்தி செய்து வியாபாரப்படுத்த குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் தேவை. இதற்காக ஒரு 'ஏஞ்சல் இன்வெஸ்டரை’ பார்க்கச் செல்கிறார் கிருஷ்ணா. இப்போது கிருஷ்ணா என்ன செய்தால் அவருக்குத் தேவையான முதலீடு கிடைக்கும்? அவரைப் பற்றிய மதிப்பீட்டை எப்படி உருவாக்க முடியும்? ''இதுதான் பிசினஸ். இந்த பிசினஸில் செய்யும் முதலீட்டுக்கு இவ்வளவு நாளைக்கு, இவ்வளவு வருமானம் கிடைக்கும். இதனால் சந்தையில் என்னென்ன மாற்றங்கள் உருவாகும்'' என்று சொன்னாலே போதும் கிருஷ்ணாவுக்கு பணம் கிடைத்துவிடும்.

மதிப்பீடுகளை உருவாக்குவது எப்படி?

* சென்னையில் டெக்ஸ்டைல் பிசினஸ் நடத்திவரும் சரவணகுமாருடன் இணைந்து, பிசினஸ் செய்ய விரும்புகிறது ஒரு ஹாங்காங் நிறுவனம்.  ஹாங்காங் நிறுவனம், சரவணகுமாரது நிறுவனத்தின் பேலன்ஸ்ஷீட்டை  பார்ப்பதன் மூலம் எளிதாக மதிப்பீடு செய்துவிடலாம். ஆனால், அவரது நிறுவனத்துக்கு இருக்கும் பிராண்ட் மதிப்பு, குட்வில், கையில் இருக்கும் ஆர்டர்கள், அவருக்கு இருக்கும் தொடர்புகள், அறிவு உள்ளிட்ட பல அளக்க முடியாத விஷயங்கள் இருக்கும். இவற்றின் மதிப்பு சரவணகுமாருக்கு சரியாகத் தெரிந்தால் மட்டுமே ஹாங்காங் நிறுவனத்துடன் ஒழுங்காக டீல் பேசி, ஜெயிக்க முடியும்.

* கிரெடிட் கார்டு வாங்கவேண்டி வங்கிக்கு விண்ணப்பிக்கிறார் ராதா. ஆனால், அவர் இதற்கு முன்பு கிரெடிட் கார்டு வாங்கியதில்லை என்பதால் அவர் பணத்தை எப்படி திருப்பிச் செலுத்துவார் என்று தயங்கினர்  வங்கி அதிகாரிகள். ஆனால், அவர் கடந்த இரண்டு வருடங்களாக அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். அவர் வாங்கி இருந்த கடனை சரியாக திருப்பிச் செலுத்தி, அடமானமாக வைத்த பொருளையும் மீட்டிருக்கிறார். இதை எல்லாம் சரியாக எடுத்துச் சொன்னாலே, வங்கி கிரெடிட் கார்டு தந்துவிடுமே!

மதிப்பீடுகளை உருவாக்குவது எப்படி?

வாடிக்கையாளரிடம் இருந்து டெபாசிட் பெறுவது, கடன் தருவது என இரு வழிகளில் வங்கி பயனடைகிறது. வங்கி பற்றி வாடிக்கையாளர்களிடம் நல்ல மதிப்பீடு இருந்தால்தான், நீண்ட காலத்தில் நிறைய டெபாசிட் பெற முடியும். அதேபோல தன்னைப் பற்றி நல்ல அபிப்ராயம் இருந்தால்தான் வாடிக்கையாளர்கள் வங்கி அதிகாரிகளுடன் பேரம் பேச முடியும்.

நீங்கள் இன்டர்வியூக்கு செல்கிறீர்கள். நீங்கள் 2 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்கிறீர்கள். ஆனால், உங்களை இன்டர்வியூ செய்யும் நிறுவனம்

1 லட்சம் ரூபாய்தான் தரமுடியும் என்கிறது. உங்களைப் பற்றிய மதிப்பீடுகள் உங்களுக்கே தெரிந்தால்தான் நீங்கள் பேரம் பேச முடியும். 'எனக்கு இதெல்லாம் தெரியும், இந்த வேலையை என்னால் பார்க்க முடியும், என்னால் இவ்வளவு வருமானம் தரமுடியும்’ என்று உங்களைப் பற்றிய சரியான மதிப்பீடுகளை உருவாக்கும்பட்சத்தில், நீங்கள் கேட்கும் இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும். ஒருவேளை, உங்களால் இவ்வளவுதான் செய்யமுடியும்; அதனால் உங்களுக்கு 1.5 லட்சம்தான் தரமுடியும் என்றால்,  உங்களைப் பற்றிய மதிப்பீடு உங்களுக்குத் தெரிந்திருக்கும்பட்சத்தில், சரி என்று ஒப்புக்கொண்டு, அந்த வேலைக்கு ஓ.கே. சொல்வீர்கள். உங்களைப் பற்றிய மதிப்பீடு உங்களுக்கே தெரியவில்லை எனில், 2 லட்சத்திலேயே இருந்து இன்டர்வியூவில் தோல்வி அடைவீர்கள்.

பொருட்களுக்கு மட்டுமல்ல, உங்களைப் பற்றிய மதிப்பீடுகளுக்கும் ஒரு விலை இருக்கிறது. மதிப்பீடுகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

 (சொல்கிறேன்)