விக்கியின் வினாக்கள்!

##~##

எப்போதும்போல, சிரித்த முகத்துடன் 'வாங்க’ என்றபடி கதவைத் திறந்தார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பி.எஸ்.ஆர்.

''நீங்கதான் ராகவனா..?'' விக்கி கேட்ட கேள்வியில் நான் உண்மையில் அதிர்ந்து போனேன்.

புன்னகைத்தபடி தலையாட்டினார்.

''நீங்கதான் நேருகிட்ட செகரட்டரியா இருந்ததா..?''

''ஆமாம்னு சொன்னாதான் உள்ளே வருவீங்களா..?'' விக்கியின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துக்கொண்டு போனார்.  

''விக்கி.. வாட் இஸ் திஸ்..?'' என்றேன்.

எதிர்கொள்- 5

தான் செய்த தவறைப் புரிந்துகொண்ட விக்கி, ''ஸாரி சார், ஸாரி... ஸாரி...'' என்றான்.

''எதுக்கு ஸாரி..? ஏன், என்னைப் பார்த்து நீதான் ராகவனான்னு கேட்கக்கூடாதா..? நான் உன் பேரைக் கேட்கிற மாதிரிதான் நீ என் பேரைக் கேட்டே! இதுல என்ன தப்பு..? தவிர, என் பேரைச் சொன்னாலே கரைஞ்சு போற அளவுக்கு என் 'ரெபுடேஷன்’ ஒண்ணும் அவ்வளவு 'வீக்’கா இல்லை..''

சுமார் ஒரு மணி நேரம். விக்கியுடன்தான் பி.எஸ்.ஆர். பேசினார். நான் வெறுமனே பார்வையாளனாக மட்டுமே இருந்தேன். புதியவர்களுடன் பேசுவதில் பி.எஸ்.ஆருக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அதிலும் சிறுவர்கள், இளைஞர்கள் என்றால் கேட்கவேவேண்டாம். பேச்சு சுவாரஸ்யம் கடைசியில் சோஷியல் மீடியா பக்கம் திரும்பியது.

''நீங்க ஃபேஸ்புக்ல இருக்கீங்களா சார்..?'' என்று கேட்டான் விக்கி.

''நோ..''

''இல்லையா..?'' விக்கியால நம்பவே முடியலை. 'நிஜமாவா சார் சொல்றீங்க..?’  

''பொதுவா நான் பொய் சொல்றது இல்லப்பா..''

சங்கோஜத்தில் நெளிந்த விக்கி, ஸாரி சொல்லிட்டு, ''ஏன் நீங்க ஃபேஸ்புக்ல இல்லை..?'' என்று கேட்டான்.

''ஏன் நான் ஃபேஸ்புக்ல இருக்கணும்..?''

என்ன பதில் சொல்வது என்று ஒருகணம் யோசித்தான் விக்கி. அவன் ஒரு ஃபேஸ்புக் விரும்பி என்பதை சட்டென புரிந்து கொண்டார் பி.எஸ்.ஆர்.

''நான் ஒண்ணு சொல்றேன், கேப்பியா..?''

''சொல்லுங்க சார்..'' என்றான் ஆர்வமாய்.

''இன்னையில இருந்து ஒன் வீக், ஃபேஸ்புக் பக்கமே போகாதே. தென் டெல் மீ இஃப் யூ ஃபீல் லைக் லாஸ்ட் சம்திங்.. ஓகே-வா..?''

''ஓகே''.

''பதிலுக்கு என்ன பண்றே.. நீ டெய்லி ஃபேஸ்புக்ல எவ்வளவு டைம் இருப்பியோ, அவ்வளவு நேரம் எனக்காக ஒண்ணு பண்ணனும்... பெருசா ஒண்ணுமில்லை... கூகுள்ல போயி, ஒரு நாளைக்கு ஒரு 'கன்ட்ரி’யைப் பத்தி இன்ஃபர்மேஷன் 'கேதர்’ பண்ணி, தனியா ஒரு ஃபைல்ல போட்டுக்கிட்டு வா. ஒரு வாரத்துல ஏழு நாடுகள் பத்தி ஃபைல் ரெடியாயிடும் இல்ல..?''

''ஆமாம்...''

எதிர்கொள்- 5

''அதை எனக்கு மெயில் பண்ணு. அப்புறம் மேற்கொண்டு சொல்றேன்...''  

வண்டியில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தோம்.

விக்கிதான் ஆரம்பித்தான்.

''நல்லா சூப்பராச் சொன்னாரு இல்ல..? 'இளைஞர்களுக்கு, 'இ-புக்’ ஒரு வரம்; 'ஃபேஸ்புக்’ ஒரு சாபம்.'

''ஆமாம். இதையேதான் நானும் சொன்னேன்.''

''இந்த 'ஏஜ்’லகூட எவ்வளவு 'பிசி’யா இருக்காரு..!''

என் பேச்சைக் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. அதில் எனக்கு வருத்தமும் இல்லை. ஏன்னா, எனக்குத் தெரியும்; நானே அதை அனுபவிச்சிருக்கேனே..!

பி.எஸ்.ஆர். பேசி யார் கேட்டாலும் இப்படித்தான். தன்னையே மறந்துவிடுவார்கள். அவரைப்போல எத்தனையோ பெரியவர்கள், அனுபவஸ்தர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்களிடம் சிறுவர்கள், இளைஞர் களை அழைத்துக்கொண்டு செல்லாதது யாருடைய தவறு?

உண்மையிலேயே பெரியவர் களாக இருக்கக்கூடியவர்களின் இருப்பும்; பார்வையும், அவர்களது பேச்சும்; வழிகாட்டுதலும் இன்றைய இளைஞர்களுக்குக் கிடைக்கச் செய்வது பெற்றோர்களின் கடமை. பள்ளிகள், கல்லூரிகள், ஆசிரியர்கள், பாடப் புத்தகங்கள் சொல்லித் தராததையெல்லாம் பெரியவர்களின் அனுபவம் வெகுஎளிதில் நமக்குப் புரியுமாறு சொல்லித்தரும். நல்லவர்கள், நேர்மையானவர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், வெற்றியாளர்களைச் சந்திப்பது மிகப் பெரிய பலனைத் தரும். காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் இந்தப் பண்பாட்டு மரபை நாம் இன்றைக்கு பின்பற்றாமல், என் பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறானே என இளைஞர்களைக் குற்றம் சொல்வதில் நியாயமே இல்லை.

எதிர்கொள்- 5

''அங்கிள்.. எனக்கு ஒரு டவுட்... நாம இப்ப பார்த்தோமே, அவரு யாருக்கு செகரட்டரியா இருந்தாரு..? நேருகிட்டேயா, இல்லை காந்திகிட்டேயா?''

''நேருகிட்டதான். உனக்கு ஏன் இந்த டவுட்..?''

''இல்ல... இவ்வளவு சிம்பிளா இருக்காரு.. அவர் துணியைக் கூட அவரே துவைச்சுப் போட்டுக் கிறாரு..?''

''ஆமாம்.. நேரு மட்டும் சிம்பிளா இல்லையா..?''

''காந்தியோட செகரட்டரியா இருந்திருந்தா அவரை மாதிரி இருக்கலாம்... நேருன்னா ஜம்முன்னு இருக்கணும் இல்ல..?''  

''போடற ட்ரெஸ்ஸை மட்டும் வைச்சு ஒருத்தர் சிம்பிள் அல்லது ஆடம்பரம்னு முடிவு பண்ணிடக் கூடாது. நேருவும் காந்தியைப்போல எளிமையானவர்தான்; அவரும் ஒரு காந்தியன்தான். ஒரு காந்தியன் என்கிறவர், வெறும் வேஷ்டி, ஜிப்பா மட்டும் போட்டுகிட்டாப் போதாது, 'இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும்’ தன்னலமில்லாத மனிதனா இருக்கணும். நல்லா ஞாபகம் வச்சுக்கோ விக்கி... லைஃப்’ல பெருசா 'அச்சீவ்’ பண்ணவங்க எல்லோருமே எளிமையைத்தான் 'ப்ரிஃபர்’ பண்றாங்க..''

''ஏன் அங்கிள்..?''

''ஏன்னா, தீமீவீஸீரீ sவீனீஜீறீமீ வீs னீஷீக்ஷீமீ நீஷீனீயீஷீக்ஷீtணீதீறீமீ. ஆடம்பரமா இருக்கணும்னா அதுக்கு நாம பணத்தை மட்டுமில்ல, நம்முடைய நேரம், உழைப்பையும்கூட செலவு  பண்ணனும்''.

''கரெக்ட், ஆனா, துணி துவைக்கிறது, வீட்டு வேலை செய்யறது... இந்த மாதிரி வேலையை வேற யாராவது செஞ்சா, அந்த டயத்துல வேற வேலை செய்யலாம் இல்ல..?''

எதிர்கொள்- 5

''இங்கதான் நாம தப்பு பண்றோம் விக்கி. 24 மணி நேரமும் உடல் உழைப்போ, மூளை உழைப்போ யாராலயுமே பண்ண முடியாது. அதனாலதான் 'பெரியவர்கள்’ எத்தனை வேலைகள் இருந்தாலும், உடல் உழைப்பையும் விடாமல் செய்துகொண்டு இருந்தார்கள்''.

விக்கியிடம் இருந்து எந்த பதிலையும் காணோம். ஆனால், அவனது மனநிலையை ஒருவாறு என்னால் யூகிக்க முடிந்தது.

'இந்தக் காலத்துப் பசங்க உடம்பு வளைஞ்சு எந்த வேலையும் பண்றது இல்லை...’ என்கிற பொதுவான புகார் விக்கிக்கும் பொருந்தும். மிகப் பெரிய, மிகப் பொறுப்பான பதவியில் இருந்த, 85 வயது பெரியவர் தன் வேலையைத்தானே செய்துகொள்கிறார் என்பது, நேரில் கண்டு உணர்ந்த விக்கியின் மனதில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.

பி.எஸ்.ஆர். வீட்டுக்கு அவனை அழைத்துக் கொண்டு சென்றதன் நோக்கமே அதுதானே..?

''அங்கிள்... நான் நாளையில இருந்து ஐ வான்ட் டு வாஷ் மை க்ளோத்ஸ் மைசெல்ஃப்... நீங்கதான் எங்கப்பாகிட்ட சொல்லி பெர்மிஷன் வாங்கித் தரணும்..''

''இதுக்கு எதுக்கு பெர்மிஷன்..? ஜஸ்ட் கோ அஹட்..''

''இல்ல அங்கிள்.. எங்க அம்மா, அப்பா விடமாட்டாங்க... கேட்டா, உனக்குத் துவைக்கத் தெரியாது.. நீ துவைச்சா அழுக்குப் போகாதுன்னு சொல்லுவாங்க...''

எதிர்கொள்- 5

விக்கி சொன்னது உண்மையோ, இல்லையோ, பெரும்பாலான பெற்றோர் அப்படித்தான் இருக்காங்க. 'உன் வேலையை நீதான் செய்யணும்னு பெற்றோர் தங்களோட பிள்ளைங்களை வற்புறுத்தறதே இல்லை; அதைவிடவும் ஒருபடி மேலேபோய், உனக்குத் தெரியாது, உனக்கு வராது, உன்னால் முடியாதுன்னு சொல்லிச் சொல்லித் தடுத்துடறாங்க. 'தன் கையே தனக்கு உதவி’ங்கறதை அவங்களுக்குப் புரிய வைக்கணும். அதுக்கு முன்னால, பெற்றோர் அதுக்கு முன்மாதிரியா இருந்து காண்பிக்கணும்.

சுமார் பத்து நாட்கள் கழித்து வைகுந்திடம் இருந்து போன்.

''வர்ற ஞாயிற்றுக்கிழமை வேலை எதுவும் வச்சிக்காதீங்க.. விக்கி, பி.எஸ்.ஆரைப் பார்க்கப் போகணும்ங்கறான்..''

''பி.எஸ்.ஆர். அன்னைக்கி ஃப்ரீயா இருக்காரா, இல்லையான்னு தெரியலையே!'' என்றேன் நான்.  

''அந்தக் கவலை உங்களுக்கு வேணாம். சார்தான் அவனை வரச் சொல்லியிருக்காரு..''

ஒரு நிமிஷம் எனக்கு ஒண்ணும் புரியல. ''என்னது... சார் வரச் சொன்னாரா..?''

''ஆமா... அவங்க ரெண்டு பேரும் அடிக்கடி பேசிக்கறாங்க.. வீட்டுக்கு வந்து பாருங்க எப்பப் பார்த்தாலும் பி.எஸ்.ஆர். புராணம்தான்; ஃபேஸ்புக்கே கதின்னு கிடந்தவன்... இன்னைக்கு என்னடான்னா என்னென்னவோ பேசறான்... வாட் அன் அன்பிலீவபிள் டிரான்ஸ்ஃபர்மேஷன்..!''

நான் நினைச்சுக்கிட்டேன்.. ''இதை.. இதை.. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்..''

சுவாமி விவேகானந்தருக்கு ஒரு பரமஹம்சர், பாரதிக்கு ஒரு நிவேதிதா, நேருவுக்கு ஒரு காந்தி போன்று, ஞான குருவாக இருந்து வழிகாட்டுவதற்கு பெரியவர்கள், சிந்தனையாளர் கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர் கள் என்று எத்தனையோ பேர் நம்மைச் சுற்றி, நம் மத்தியிலே, ஏன்... நம் குடும்பத்திலேயேகூட இருக்கவே செய்கிறார்கள். அடையாளம் காணுங்கள்; அழைத்துச் செல்லுங்கள்; அறிமுகப் படுத்துங்கள். பிறகு, நல்லது தானே நடக்கும்!

ஞாயிற்றுக்கிழமை காலை, 11 மணி.

பி.எஸ்.ஆர். கதவைத் திறந்தார். இம்முறை, எங்களைப் பார்த்ததும் அவர் கேட்ட கேள்வி என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது.  

(தெளிவோம்)

எத்தனை புதிய வங்கிகளோ!

புதிய வங்கி தொடங்குவதற்கான அனுமதி கேட்டு கிட்டத்தட்ட 26 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருக்கின்றன. ரிலையன்ஸ் கேப்பிட்டல், டாடா சன்ஸ், எல்.ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி ஃபைனான்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் ஒருபக்கம் இருக்க, அஞ்சல் துறையும் வங்கி தொடங்குவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறது. ஜனலட்சுமி ஃபைனான்ஷியல், மேக்மா ஃபின்கார்ப் போன்ற நிறுவனங்களோடு, யூ.ஏ.இ. எக்ஸ்சேஞ்ச் இந்தியா என்கிற நிறுவனமும் வங்கி அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறது. இதில் எத்தனை நிறுவனங்களுக்கு அனுமதி கிடைக்குமோ!?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism