Published:Updated:

ஷேர்லக் - திங்கட்கிழமை உஷார் !

ஷேர்லக் - திங்கட்கிழமை உஷார் !

ஷேர்லக் - திங்கட்கிழமை உஷார் !

ஷேர்லக் - திங்கட்கிழமை உஷார் !

Published:Updated:
##~##

''மழையில் நனைந்ததில் லேஸான காய்ச்சல் வந்துவிட்டது. மதியத்திலிருந்து ஆன்ட்டிபயாட்டிக் சாப்பிட்டு வருகிறேன். எனவே, இந்தமுறை போனிலேயே மேட்டரைச் சொல்லிவிடுகிறேன்'' என்று ஷேர்லக் நமக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தார். ஓகே சொல்லிவிட்டு, இரவு சுமார் எட்டு மணிக்கு அவருக்கு போன் செய்தோம். காய்ச்சலிலும் சுறுசுறுப்பாக செய்திகளைச் சொன்னார்.

''வியாழக்கிழமை அன்று மட்டும் சென்செக்ஸ் 382 புள்ளிகள் அதிகரித்ததே, என்ன காரணம்?'' என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பொருளாதார வளர்ச்சிக்கு அளிக்கப்படும் சலுகைகள் தொடரும் என அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் சேர்மன் பென் பெர்னான்கி தெரிவித்ததே இதற்கு காரணம். சந்தை ஏறியிருக்கும் நிலையில் எஃப்.ஐ.ஐ.-க்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. ஆனால், நம் ஊர் நிறுவனங்கள் மற்றும் சிறு

ஷேர்லக் - திங்கட்கிழமை உஷார் !

நிறுவனங்கள் பங்குகளை விற்று வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது''என்றார்.

''அண்மையில் ஐ.பி.ஓ. வந்து கலக்கிய ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பெயர் மீண்டும் அடிபட ஆரம்பித்திருக்கிறதே?'' என்று இழுத்தோம்.

''இந்த பங்கு பி.எஸ்.இ. 500 இண்டெக்ஸ்-ல் இடம் பெறப்போகிறது. இது ஜூலை 17-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு பதிலாக ஜிண்டால் பாலி ஃபிலிம்ஸ் இந்தப் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட இருக்கிறது'' என்று நம் சந்தேகத்தைப் போக்கினார்.

''பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு 650 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதே? அப்படி என்ன தவறு செய்துவிட்டது?'' என்று விசாரித்தோம்.

''2002 மற்றும் 2005 ஆண்டுக்கு இடையில் சப்ஸ்கிரைபர் லோக்கல் டயலிங் என்கிற சேவை அளித்தது தொடர்பான பிரச்னையில் ஏர்டெல் நிறுவனத்துக்கு டெலிகாம் துறை அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஏர்டெல் நிறுவனம், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி அதிக தொகை அபராதமாக விதித்திருப்பது நியாயமில்லாத விஷயம். மேலும், எங்கள் தரப்பு நியாயத்தைக் காதுகொடுத்துக்கூட சரியாக கேட்கவில்லை என கூறியுள்ளது. இத்தனை கோடி அபராதம் விதித்ததால் இந்த பங்கின் விலை பெரிய அளவில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏர்டெல் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்று முதலீட்டாளர்கள் நினைத்தார்களோ என்னவோ!'' என்றவர், தொண்டையை செருமிக் கொண்டார்.

''மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனமும் உற்பத்தியைக் குறைத்துவிட்டதே?'' என்றோம்.

''இந்திய வாகனத் துறைக்கு இது போதாதகாலம். கடந்த சில மாதங்களில் வர்த்தக, பயணிகள், இருசக்கர வாகனங்கள் விற்பனை கணிசமாக வீழ்ச்சிகண்டுள்ளன. இந்த மந்தநிலை காரணமாக, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், அதன் உற்பத்தியை 8 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. இது மற்ற நிறுவனங்களுக்கும் பரவும் அபாயம் இருக்கிறது. அந்த வகையில், ஆட்டோ துறை பங்குகளை வைத்திருப்பவர்கள், இனி முதலீடு செய்ய நினைப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' என்றார்.    

''அண்மையில் சர்க்கரை நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதே? ஏதாவது இனிப்பான தகவல் உண்டா?'' என்று வினவினோம்.

''மத்திய அரசு, சர்க்கரை இறக்குமதிக்கான வரியை 15 சத விகிதமாக அதிகரித்துள்ளது. மேலும், கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதாக தகவல். இதனையடுத்து சர்க்கரை விலை உயரும். சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் சர்க்கரை நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்துள்ளது. பல்ராம்பூர் சினி, தாம்பூர் சுகர், பஜாஜ் ஹிந்துஸ்தான் போன்ற நிறுவனப் பங்குகளின் விலை சுமார் 2.5 - 5 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளன. கடந்த 18 மாதங்களாக சர்க்கரைப் பங்குகள் இறக்கத்தில் இருந்தன. பல பங்குகளின் விலை 50 சதவிகிதம்கூட இறங்கின. அந்த வகையில் இப்போதைய ஏற்றம் முதலீட்டாளர்களுக்கு லாபம் தந்திருக்கும் என்று சொல்ல முடியாது'' என்றார்.

''இந்திய பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் இருக்கும் ஒரே நிறுவனம்...'' என்று சொல்லிவிட்டு, ஒரு நிமிஷம் நிறுத்தினார் ஷேர்லக்.

''எந்த கம்பெனி, சொல்லுங்கள்?'' என வேகவேகமாக கேட்டோம்.

''அவசரப்படாதீர்கள். அது எல்.ஐ.சி.தான். நடப்பு 2013-14-ல் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் பங்குச் சந்தை முதலீடு 40,000 கோடியாகும். இது முந்தைய ஆண்டைவிட 10 சதவிகிதம் அதிகம்'' என்றார்.

''வேறு என்ன சுவாரஸ்யமான தகவல்?'' என்று கேட்டோம்.

''பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொது மக்களின் பங்களிப்பு குறைந்தது 25 % இருக்கவேண்டும் என்பது செபியின் விதிமுறை. சென்னையைச் சேர்ந்த சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தில், பங்கு மூலதனத்தில் 24.999999% பொதுமக்கள் வசம் இருக்கிறது. ஆனால், செபியின் விதிமுறையை நிறைவேற்ற வெறும் நான்கே நான்கு பங்குகளை விற்கவேண்டிய நிலை இந்த நிறுவனத்துக்கு. இதற்காக இந்நிறுவனம், ஆக்ஸிஸ் கேப்பிட்டலை லீட் மேனேஜராக நியமித்தது. ஓப்பன் ஆஃபர் மூலம் இந்த 4 பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. இதை வாங்க 15 பேர் ஏலம் கேட்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் ஆகி இருக்கிறது. 4 பங்கை விற்க (பங்கு ஒன்றின் விலை சுமார் 305 ரூபாய்) இந்த நிறுவனம் லட்சக்கணக்கான ரூபாயை செலவு செய்திருக்கும் என்கிறார்கள். அனலிஸ்ட்கள்'' என்று ஆச்சர்யம் காட்டினார் ஷேர்லக்.

''பார்மா பங்குகள் நல்லபடியாகச் செயல்பட்டு வருகிறது போலிருக்கிறதே?'' என்றோம்.

''சமீபகாலமாக பார்மா பங்குகள் நல்ல வருமானத்தைத் தந்து வருகிறது. இதில் நாட்கோ பங்கு இந்த மாதத்தில் மட்டும் 10% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்த பங்கில் ஒரு 'ஆபரேட்டர்’ புகுந்திருப்பதாகத் தெரிகிறது. இதற்கு முன்பு அவர் கைவைத்த பல பங்குகளில் இரட்டிப்பு லாபம் பார்க்காமல் வெளியே சென்றதில்லை. இம்முறை அதேபோல நடக்கலாம். 52 வார அதிகபட்ச விலையான 524 ரூபாய்க்கு மேலே செல்லும்பட்சத்தில் 150 ரூபாய் உயர்வு என்பதெல்லாம் மிகச் சில நாட்களில் நடக்க வாய்ப்பு இருக்கிறது. நடுத்தரகாலத்துக்கு இந்த பங்கு ஏற்றது போல தெரிகிறது. டிரேடர்கள் இந்த பங்கை உடனடியாக ஃபாலோ பண்ண ஆரம்பிக்கலாம்'' என்றவர், கடைசியாக ஒரு மழை செய்தியையும் சொன்னார்.

''மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் நல்ல மழை பெய்திருப்பதால் பேயர்கிராப் மற்றும் ராலிஸ் பங்குகள் ஏற்கெனவே உயர்ந்திருக்கிறது. இந்த இரண்டு பங்குகளும் இன்னும் சில சதவிகிதங்கள் உயரலாம்'' என்றவர், ''மே மாதத்துக்கான ஐ.ஐ.பி. குறைந்திருக்கிறது, இன்ஃப்ளேஷன் அதிகரித் திருக்கிறது. இரண்டுமே சந்தைக்கு பாதகம் என்பதால் திங்கட்கிழமை அன்று சந்தை இறங்க வாய்ப்புள்ளது, உஷார்!'' என்று சொல்லிவிட்டு, போனை கட் செய்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism