Published:Updated:

அக்ரி கமாடிட்டி !

- பானுமதி அருணாசலம்.

அக்ரி கமாடிட்டி !

- பானுமதி அருணாசலம்.

Published:Updated:

மிளகு! (PEPPER)

##~##

தேவை மற்றும் வரத்து குறைந்த காரணத்தால் சென்ற வாரத்தில் மிளகு விலை அதிக ஏற்ற,  இறக்கம் இல்லாமல் வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் ஒரு டன் மிளகு 7,250 டாலருக்கு வர்த்தகமானது. மிளகு அதிகமாக விளையும் லாம்பங்கில் மிளகு அறுவடை தொடங்கியுள்ளது. அறுவடை முடிந்து ஜூலை மாத இறுதியில் புதிய வரத்து சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீதோஷ்ண நிலை சரியில்லாத காரணத்தால் லாம்பங்கில் அறுவடை தாமத மாகவே தொடங்கியுள்ளது. அதனால், ஆகஸ்ட் மாதத்தில் முழுவீச்சில் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2013 ஜனவரி முதல் மே மாதம் வரை, ஜப்பான் 3,893 டன் மிளகை இறக்குமதி செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் செய்த இறக்குமதியைவிட  20% அதிகம். வரும் வாரத்திலும் மிளகு விலை நிலையில்லாமலே வர்த்தகமாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்ரி கமாடிட்டி !

ஜீரகம்! (JEERA)

பங்களாதேஷிலிருந்து நிறைய ஆர்டர் வந்ததால் ஜீரகத்தின் விலை சென்ற வாரத்தில் அதிகரித்து வர்த்தகமானது. மேலும், வரும் வாரத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவை அதிகரிக்கும் என வர்த்தகர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ந்து நடந்துவரும் கலவரத்தால் இந்தியாவின் ஜீரகத்திற்கு சர்வதேச சந்தையில் நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. சிரியாவில் பத்து சதவிகித உற்பத்தியும், துருக்கியில் 8,000 முதல் 10,000 டன் ஜீரக உற்பத்தியும் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஈரான் நாட்டில் விதைக்கப்படிருந்த ஜீரகப் பயிர்கள் சேதமடைந்துள்ளதாலும் இந்திய ஜீரகத்திற்கு நல்ல தேவை ஏற்பட்டுள்ளது.  

அக்ரி கமாடிட்டி !

2013 ஏப்ரல் - மே மாதத்தில் 20,000 டன் ஜீரகம் இந்தியா விலிருந்து ஏற்றுமதியாகி உள்ளது. எனினும், எக்ஸ்சேஞ்ச் குடோனில் இருக்கும் ஜீரகம் ஈரப்பதமாக இருப்பதாலும், ஜூலை கான்ட்ராக்ட் முடிவடைய உள்ளதாலும் விலை மேலும் அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது. சென்ற வியாழன் அன்று உஞ்ஹா சந்தைக்கு சுமார் 9,000 பைகள் (ஒரு பை என்பது 55 கிலோ) வந்தது. இது வார ஆரம்பத்தில் 10,000 பைகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

என்.சி.டி.இ.எக்ஸ். எக்ஸ்சேஞ்சில் ஆகஸ்ட் கான்ட்ராக்ட் 97.50 ரூபாய் விலை அதிகரித்து 13,650 ரூபாய்க்கு ஒரு டன் வர்த்தகமானது. ஏற்றுமதி தேவை அதிகமாக இருப்பதால் வரும் வாரத்திலும் ஜீரகத்தின் விலை அதிகரித்தே வர்த்தகமாகும்.

மஞ்சள்! (TURMERIC)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டிமாண்ட் வெகுவாக குறைந்ததை அடுத்து சென்ற வாரத்தில் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமானது. வாரம் முழுக்க 30 சதவிகிதம் மட்டுமே விற்பனையானது.

ஆந்திராவில் இந்த ஆண்டு மஞ்சள் விதைக்கப்பட்டுள்ள பரப்பளவு 25,937 ஹெக்டேராக  இருப்பதாக அம்மாநில விவசாயத் துறை தெரிவித்துள்ளது. இது சென்ற வருடத்தில் 22,688 ஹெக்டேராக இருந்தது.

அக்ரி கமாடிட்டி !

மஞ்சள் அதிகமாக விளையும் தமிழ்நாட்டில் போதுமான நீர்ப்பாசனம் இல்லாததால் உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை சற்று அதிகரித்தது. சென்ற வியாழன் ஈரோடு மற்றும் நிஜாமாபாத் சந்தைக்கு 4,000 மற்றும் 4,500 பைகள் (ஒரு பை என்பது 70 கிலோ) வந்தது. நிஜாமாபாத் சந்தையில் குவிண்டாலுக்கு 100 ரூபாய் விலை குறைந்தது. இதனால் ஆகஸ்ட் மாத ஃப்யூச்சர் கான்ட்ராக்ட்டும் விலை குறைந்தே வர்த்தகமானது. தேவை குறைவாக இருப்பதால் வரும் வாரத்திலும் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

ஏலக்காய்! (CARDAMOM)

வரத்து அதிகமாக இருந்ததால் ஏலக்காய் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. நல்ல சீதோஷ்ணம் நிலவிய காரணத்தால் இந்த வருடம் ஏலக்காய் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கவுதமாலாவில் இந்த வருடம் 35,000 டன் ஏலக்காய் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற வாரத்தில் சுமார் 30 டன் ஏலக்காய் சந்தைக்கு வந்தது. ஒரு கிலோ ஏலக்காய் 542 ரூபாய்க்கு சென்ற வாரத்தில் வர்த்தகமானது. அதிகபட்ச விலையாக 795 ரூபாய்க்கு கேட்கப் பட்டது. சென்ற வாரத்தில் எம்.சி.எக்ஸ். கிடங்கில் ஸ்டாக் அதிகரித்து 49 டன்னாக இருந்தது. வரும் வாரத்திலும் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !

மிளகாய்! (CARDAMOM)

தேவை குறைந்ததன் காரணமாகவும், வரத்து அதிகமாக இருந்ததாலும் மிளகாய் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. குண்டூர் சந்தையில் நூறு கிலோ 6,200 ரூபாய்க்கு வர்த்தகமானது. கையிருப்பு அதிகமாக இருந்ததாலும், ஏற்றுமதி ஆர்டர்கள் குறைவாக இருந்ததாலும் விலையில் பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேசத்தில் நடப்பு காரீஃப் சீஸனில் உற்பத்தி அதிகமாக இருக்கும் என்ற தகவலும் விலையில் பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. எனினும், ஆந்திராவில் 2,401 ஹெக்டேர் பரப்பளவிற்கு மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. இது, சென்ற வருடத்தில் 3,359 ஹெக்டேராக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஜூலை 10-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 10,364 டன் இருப்பு இருக்கிறது. இது, அதற்கு முந்தைய வாரத்தில் 10,954 டன்னாக இருந்தது. உற்பத்தி அதிகமாக இருக்கிறது என்ற தகவலால் வரும் வாரத்திலும் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !
அக்ரி கமாடிட்டி !