##~##

ஹெச்.ஆர். துறையில் ஜொலிக்கவேண்டும் என்கிற ஆசை உமாவுக்கு. இத்தனைக்கும் 'டேலன்ட் மேனேஜ்மென்ட்’ படித்தவர் அவர். அதில் 'டிஸ்டிங்ஷனும்’ வாங்கியவர். ஆனால், வேடிக்கையான உண்மை என்னவென்றால், அவராலேயே அவருக்கான வேலையை சரியாகத் தேடிக்கொள்ள முடியவில்லை. கஷ்டப்பட்டு அங்கு, இங்கு தேடியபிறகுதான் அவருக்கு வேலை கிடைத்தது. ஐந்து வருடம் சரியாக வேலை பார்த்தபோதும், உமா செய்யும் வேலை அவருடைய பாஸுக்குப் பிடிக்கவில்லை. சரியான நபர்களை, சரியான சம்பளத்தில் குறிப்பிட்ட நேரத்தில் உமாவினால் தேர்வு செய்ய முடியவில்லை.

ஒருவழியாக திறமையை எப்படி கணக்கிடுவது என்பதைக் கண்டுபிடித்தார் உமா. திறமை என்பது மிகவும் அரிதான விஷயமாகவும் இருக்கவேண்டும். அதாவது, பெரும்பாலானவர்களிடம் இல்லாத ஒரு விஷயமாக அது இருக்கவேண்டும். அதேசமயம், அந்தத் திறமை பயன்படுத்துகிற மாதிரியும் இருக்கவேண்டும். மேலும், குறைவான நேரத்தில், குறைவான எனர்ஜியில், எளிமையாகப் பயன்படுத்துகிற மாதிரியும்; குறைந்த செலவில் கிடைக்கிற மாதிரியும் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தார் உமா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கீழே இருக்கும் ஐந்து விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் 20 மதிப்பெண் தந்து, வேலை தேடுபவர்களையே சுயமதிப்பீடு செய்யச் சொல்லி, அதன்மூலம் அவர்களின் திறமையைக் கணக்கிட்டார் உமா! இதோ அந்த ஐந்து விஷயங்கள்.  

காஸ்ட் மேனேஜ்மென்ட்

1. நீங்கள் யார்?

உங்கள் கம்பெனியை ஒரு முதலீட்டாளர் என்று நினைத்துக்கொள்ளுங்கள். இந்த ஆண்டு உங்களிடம் 100 ரூபாய் முதலீடு செய்கிறது ஒரு கம்பெனி. அடுத்த ஆண்டில் உங்கள் மதிப்பு உயர்ந்திருந்தால் நீங்கள் ஒரு 'அப்ரிசியேட்டிங் அசெட்’. அதாவது, மதிப்பு உயரும் சொத்து. வீடு, கல்வி போன்றவை மதிப்பு உயரும் சொத்துக்கள். ஆனால், உங்களிடம் தரப்பட்ட பணத்தின் மதிப்பு குறைந்தால், அது மதிப்பு குறையும் சொத்து. உதாரணத்துக்கு கார், மொபைல், கம்ப்யூட்டர் போன்றவை. உங்கள் மதிப்பு உயர்ந்துகொண்டே போனால் முதலீட்டாளர்களின் டார்லிங்காக நீங்கள் மாறுவீர்கள்!

2. எந்த பணத்துக்கு உங்கள் திறமை?

உலகமயமாக்கப்பட்ட பிறகு எந்த கரன்சிக்கு மதிப்பு இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. டாலரில் சம்பளம் தரும் நிறுவனத்துக்கு உங்கள் திறமை தேவைப் படுகிறது என்றால், உங்களுடைய திறமைக்கு அலாதி மதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். ஒருவேளை உங்கள் திறமை ஏலத்துக்கு வருகிறது எனில், மொத்த உலகமும் உங்களுடைய திறமைக்காகப் போட்டிபோடும். அப்போது நீங்கள் சொல்வதுதான் விலை. மாறாக, உங்கள் முதலாளி உங்கள் வேலையை ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்துகொண்டே இருந்தால், உங்களால் எவ்வளவு

காஸ்ட் மேனேஜ்மென்ட்

காலத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியும்?

3. தகுதியை உயர்த்திக்கொள்ளுங்கள்!

சில பொருட்களும் சேவைகளும் கொஞ்ச காலத்துக்குப் பிறகு மவுசு குறைந்து, தேவைப் படாமலே போய்விடும். அதிகமாக செலவு செய்து வேறு ஒரு பொருளை/சேவையைக் கொண்டுவர வேண்டியிருக்கும். அதுபோலதான் திறமையும். சில காலத்துக்குப் பிறகு உங்கள் திறமை தேவைப்படாது. உங்களுக்குப் பதிலாக இன்னொரு ஆள் எடுப்பது நிறுவனத்துக்கு அதிக செலவு பிடிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால், நீங்களே உங்கள் திறமையை உயர்த்திக்கொண்டால், உங்களுக்கு மாற்றே தேவைப்படாது. நீங்கள் அப்படிப்பட்டவரா?

4. நீங்கள் பயன்படுத்த எளிதானவரா?

எந்த ஒரு பொருளையும், சேவையையும் எளிதாகப் பயன்படுத்துகிற மாதிரி இருக்கும் போதுதான் அதற்கு மதிப்பு கூடும். அது போன்றவற்றுக்குதான் சந்தையில் மதிப்பு அதிகம். உங்களது திறமையும் எளிதில் பயன்படுத்துகிற மாதிரி இருந்தால், உங்களுக்கு வேலை தேவை என்பதைவிடவும், அந்த வேலைக்கு நீங்கள் தேவைப்படுவீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

5. ஐம்பதுக்கு ஐம்பது!

இது எல்லாவற்றையும்விட உங்களுக்கு தரப்படும் சம்பளத்தில் 50 சதவிகிதம் நீங்கள் இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள் என்பதற்காகவும், மீதமுள்ள 50 சதவிகிதம் உங்களை எப்படி பயன்படுத்தமுடியும் என்பதற்காகவும் தரப்படுகிறது. ஆனால், உங்களை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள், இல்லை எப்படி பார்க்கவேண்டும் என்பது மிகப் பெரிய சவால். உங்களுடைய ப்ளஸ், மைனஸ் எல்லாவற்றையும் அறிந்து உங்களுக்கான மதிப்பை நீங்கள் உருவாக்குங்கள்.

மேலே சொன்ன விஷயங்களில் உங்களுக்கு தெளிவு இருக்கும்போது உங்களை வேலைக்கு எடுப்பவர்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும். நீங்கள் யாரையாவது வேலைக்கு எடுக்கவேண்டும் என்றாலும்கூட நிச்சயம் உதவும்!

(சொல்கிறேன்)