Published:Updated:

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

Published:Updated:
##~##

இந்த வாரம் தங்கத்தின் வர்த்தகம் எப்படி இருக்கும் என கோட்டக் கமாடிட்டீஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் ரிசர்ச் துணைத் தலைவர் தர்மேஷ் பாட்டியா கூறுகிறார்.

தங்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தங்கத்தின் மீது செயற்கையான விலையேற்றம் நடைபெற்றதன் காரணமாக தங்கத்தின் மீதான 'லீஸ் ரேட்’ (Lease Rate) சில மாற்றங்களைக் கண்டுள்ளது. கடந்த மாதம் வரை இந்த 'லீஸ் ரேட்’ நெகட்டிவ்வாக இருந்தது. ஆனால், இந்த வார ஆரம்பத்தில் இந்த 'லீஸ் ரேட்’ விகிதம் பாசிட்டிவ்-ஆக மாறியிருக்கிறது. இது டிசம்பர் 2008-க்குப் பிறகு வந்துள்ள பாசிட்டிவ்-ஆன விகிதமாகும். 'லீஸ் ரேட்’ என்பது முன்னணி வங்கிகள் தங்கத்தை மொத்த விற்பனையாளர்கள், இன்ஸ்டிடியூஷனல் முதலீட்டாளர்கள், ஃபண்ட் மேனேஜர்கள், ஹெட்ஜ் ஃபண்ட் உள்ளிட்டவர்களுக்கு லீஸில் கொடுத்து அதற்கு காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கணக்கில் வட்டி கணக்கிட்டு வாங்குவதாகும்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு குறைந்து 1,300 டாலருக்குச் சென்றது. இந்த விலை குறைவால் பெரும்பாலான டீலர்கள் அமெரிக்காவின் காமெக்ஸ் கிடங்கிலிருந்து தங்கத்தை டெலிவரி எடுத்து ஆசிய சந்தைகளில் விற்பனை செய்தனர். அதன்பிறகு தங்கத்தின் விலை சற்று உயரத் தொடங்கி, 1,490 டாலருக்குச் சென்றது. இதனை பயன்படுத்தி ஸ்பெகுலேட்டர்கள் பிஸிக்கல் தங்கத்தை வாங்கி அதனை எக்ஸ்சேஞ்சில் ஃப்யூச்சர்ஸில் குறைந்த விலையில் விற்பனை செய்வார்கள். இதனால் தங்கத்தின் ஃப்யூச்சர் விலை குறையும். குறைந்த வட்டி விகிதத்தில் தங்கத்தை வாங்கி அதனை பிஸிக்கல் சந்தையில் விற்று, அந்தப் பணத்தைக் கொண்டு அதிக வருமானம் தரும் பாண்டுகள் அல்லது கரன்சியில் முதலீடும் செய்வார்கள் ஸ்பெகுலேட்டர்கள்.  இது தங்கத்தின் விலையில் மிகுந்த பிரதிபலிப்பை ஏற்படுத்தும்.

அமெரிக்காவில் ஃபெடரல் வங்கி ஸ்டுமுலஸ் பேக்கேஜ் குறித்து தெரிவித்தக் கருத்தை

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

அடுத்து  டாலரின் மதிப்பு குறைந்து தங்கத்தில் முதலீடு செய்வது சற்று அதிகரித்தது. இதனை அடுத்து சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்து வர்த்தகமானது. இந்த வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை 25 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. டாலரின் மதிப்பு குறையும்பட்சத்தில் வரும் வாரத்திலும் தங்கத்தின் விலை குறையும்'' என்றார்.

கச்சா எண்ணெய்!

கடந்த மூன்று வாரங்களாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வந்த நிலையில் வர்த்தகர்கள் ப்ராஃபிட் புக்கிங் செய்ததால் சென்ற வாரத்தில் கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்து வர்த்தகமானது. டாலரின் மதிப்பு குறைந்ததும் விலை குறைவிற்கு காரணமாகும். இந்தியா, ஈரான் நாட்டிற்கு செலுத்தவேண்டிய கச்சா எண்ணெய்க்கான தொகையை ரூபாய் கரன்சியாகவே செலுத்தும்படி ஈரான், இந்தியா விடம் தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அல்லாத நாடான வட அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது என எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக  கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்த நிலையில் தற்போது விலை அதிகரிப்பதற்கான காரணம் எதுவும் தென்படவில்லை என்பதால், வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வர்த்தகமாகும்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

இயற்கை எரிவாயு!

இன்வென்டரி அதிகரித்த காரணத்தால் சென்ற வாரத்தில் இயற்கை எரிவாயுவின் விலை குறைந்து வர்த்தகமானது. ஜப்பானின் முன்னணி மின் உற்பத்தி நிலையங்கள் கடந்த ஜூன் மாதத்தில் 26 சதவிகிதம் வரை நிலக்கரி பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது. அதிக விலையுள்ள எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் எடுப்பதற்கு பதில், உற்பத்தி செலவைக் குறைக்க நிலக்கரி பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வெப்பம் நிலவுவதால் வரும் வாரத்திலும் இயற்கை எரிவாயு விலை குறைந்தே வர்த்தகமாகும்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

அடிப்படை உலோகங்கள்!

காப்பரின் விலை இந்த மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் விலை அதிகரித்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி தலைவர் பென் பெர்னான்கி, பொருளாதாரம் முன்னேறி வருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டால் மட்டுமே ஸ்டுமுலஸ் திட்டம் நிறுத்தப்படும் என தெரிவித்தார். இதனை அடுத்து டாலரில் முதலீடு செய்வது ரிஸ்க் என்பதால் மற்ற கமாடிட்டிகளில் முதலீடு செய்யத் தொடங்கினர். எனினும், அடிப்படை உலோகங்களை அதிகமாகப் பயன்படுத்தும் சீனாவில் வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதாக அந்நாட்டு நிதியமைச்சர் தெரிவித்ததை அடுத்து அடிப்படை உலோகங்களின் விலை கடந்த வார இறுதியில் குறையத் தொடங்கியது. இந்தியாவில்   மே மாதத்தில் தொழில் துறை உற்பத்தி குறைந்துள்ளதால் அடிப்படை உலோகங்களின் தேவை குறையும் என்ற எதிர்பார்ப்பு வர்த்தகர்களிடையே நிலவுகிறது. இதனால், வரும் வாரத்திலும் அடிப்படை உலோகங்களின் விலை குறைந்தே வர்த்தகமாகும் என எதிர்பார்க்கலாம்.

- பானுமதி அருணாசலம்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கரன்சி பார்வை!

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

சென்ற வாரம் கரன்சி எப்படி செயல்பட்டது, வரும் வாரத்தில் எப்படி செயல்படும் என விளக்கமாக கூறுகிறார் ஜியோஜித் காம்ட்ரேட் நிறுவனத்தின் தலைமை கரன்சி அனலிஸ்ட், ஹேமல் தோஷி.

''கடந்த வாரம் ஜூலை 8-ம் தேதி இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்து 61.21 ரூபாயைத் தொட்டது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக கரன்சியில் ஓப்பன் பொசிஷன் அளவுகளைக் குறைக்கவும், 100 சதவிகித மார்ஜின் தொகையைச் செலுத்தவேண்டு மென ஆர்.பி.ஐ. மற்றும் செபி உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் டாலரை வாங்கும்போது ஒரே வங்கியிடமிருந்து வாங்கும்படியும், வெவ்வேறு வங்கிகளில் வாங்கு வதை தவிர்க்கவேண்டுமெனவும் ஆர்.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது. தவிர, ஜூன் மாதத்திற்கான இந்திய வர்த்தக பற்றாக்குறை குறைந்தது ரூபாய்க்கு சாதகமாக வந்துள்ளது. இத்துடன் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் தலைவர், ஸ்டுமுலஸ் பேக்கேஜை நீட்டிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறியது ஆசிய பங்குச் சந்தைகள் மற்றும் மற்ற நாட்டு கரன்சிகளுக்கு சாதகமாக அமைந்தது.

இவை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது இந்திய ரூபாயின் மதிப்பு வரும் வாரத்தில் அதிகரித்து வர்த்தகமாகும். வரும் வாரத்திற்கான இலக்கு விலையாக 59.15 மற்றும் 58.90 ரூபாயாக கொள்ளலாம். குறுகிய காலத்தில் 60.50 ரூபாயைத் தாண்ட வாய்ப்பில்லை'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism