நமது பலம்!

##~##

'டெமோக்ராபிக் டிவிடெண்ட் (demographic dividend)பற்றி பல அவைகளிலே பல அறிஞர்கள் பேசிக்கொண்டு வருகிறார்கள். இது நம் நாட்டுக்குக் கிடைத்த கொடை என்றும், நம் முன் உள்ள சவால் என்றும் இருவேறு விதமான கருத்துகளும் பரவலாகச் சொல்லப்படுகின்றன. பல சிந்தனையாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை நல்ல வாய்ப்பாக மாற்றுவதில் முனைந்து செயல்படுகிறார்கள். அது என்ன 'டெமோக்ராபிக் டிவிடெண்ட்’?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பஸ்ஸா..? வேண்டாமே... அன்ரிசர்வ்டு-ஆக இருந்தாலும் பரவாயில்லை, டிரெய்ன்லயே போயிடலாமே...’

நண்பரின் பேச்சைத் தட்ட முடியாமல், அன்னைக்கு நைட்டு 'மன்னை எக்ஸ்பிரஸ்’ல வீரபாகுவும் நானும் 'அன்ரிசர்வ்டு’ல

தஞ்சாவூர் போனோம். சீட்டு கிடைக்கலை. நின்னுகிட்டேதான் பிரயாணம்.

'இப்ப திருப்திதானே..?’ என்று சலித்துக்கொண்டேன் நான்.

'இப்ப என்ன கெட்டுப்போச்சு..?’ என்று எதிர்கேள்வி கேட்டார் வீரபாகு.

'தூக்கம்தான். போய்ச் சேர்ந்தும் சேராம க்ளாஸ் வேற எடுக்கணும்’ என்று அலுத்துக்கொண்டேன். 'எல்லாம் நல்லதுக்குத்தான்னு எடுத்துக்க வேண்டியதுதான்..’ வீரா எப்போதும் சொல்வதுதான். ஆனால், அன்று அவர் சொன்னது மிகச் சரியாக இருந்தது. முதன்முறையாக அன்று இரவுதான் 'டெமோக்ராபிக் டிவிடெண்ட்’ பற்றிக் கேள்விப்பட்டதும், விவாதித்ததும்!

செங்கல்பட்டுல இருந்து ரயில் கிளம்பறதுக்கு கொஞ்ச நேரம் ஆச்சு. எதுக்கும் சீட்டுக்கு முயற்சி  பண்ணிப் பார்க்கலாமேன்னு, டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டோம்.

'இல்லை... எதுக்கும் இந்த கம்பார்ட்மென்ட்லயே இருங்க.. விழுப்புரம் தாண்டிச் சொல்றேன்..’  என்றார்.

விழுப்புரம் வரை தூங்காமல் இருக்க வேண்டுமே! என்ன செய்வது என்று நான் யோசித்துக்கொண்டிருக்க, 'அங்க பாரு, நாலைஞ்சு பேரு சுடச்சுட பாலிடிக்ஸ் பேசிக்கிட்டு இருக்காங்க. அவங்க பேசுறதைக் கவனிச்சாலே போதுமே! பசி, தூக்கம் எல்லாம் மறந்து போயிடுமே’ என்றான்.  

எதிர்கொள் !

ஆனால், வீரா சொன்னமாதிரி அவங்க ஒண்ணும் அரசியல் பேசவில்லை. பொருளாதாரம் பத்திதான் பேசிக் கொண்டிருந்தார்கள். வீராவைச் சொல்லி தப்பில்லை. அவருக்கு மேக்ஸும் சயின்ஸும் தவிர 'உலகமே’ தெரியாது!

ஒரு பெண்மணி உள்பட நான்கு பேர்; வயதில் பெரியவர்களாக இருந்தார்கள். 'புரொபசர்ஸ்’ என்று பிறகு தெரிந்தது. ஏதோ ஒரு கருத்தரங்குக்காக சென்றுகொண்டிருந்தார்கள். உலகப் பொருளாதாரம் குறித்தெல்லாம் பேசினார்கள். பேசினார்கள் என்பதைவிட, விவாதித்தார்கள் என்பதே சரி. படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள் ஆளாளுக்கு புள்ளிவிவரங்களை அள்ளி வீசினார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்க சிறிது சிறிதாக கூட்டம் கூடிவிட்டது. அவர்கள்  பேசிய விஷயம் 'டெமோக்ராபிக் டிவிடெண்ட்’.  

மக்கள்தொகைக் கணக்கெடுப்புல ஒருவகைதான் 'டெமோக்ராபி’. மக்கள் தொகையில் வயது வாரியாக, அதாவது எத்தனை குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியோர் உள்ளனர் என்கிற விவரம் சேகரிக்கப்பட்டது. இங்குதான் சுவாரஸ்யமான ஒரு தகவல் தெரிய வந்தது. அதாவது, இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து, தற்போது இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 50 சதவிகிதம், அதாவது சரிபாதி, இளைஞர்கள்தாம்!  

ஐம்பது கோடிக்கும் மேலான இளைஞர்களைக்கொண்ட நாடாக நாம் இருக்கிறோம். அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு வாய்க்காத வாய்ப்பு இது. இதைத்தான் நமக்குக் கிடைத்த கொடை ‘demographic dividend’ என்று குறிப்பிடுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

இது எப்படி கொடை ஆகும்..? பதில் வெகு எளிது. பிரமாதமான 'வொர்க் ஃபோர்ஸ்’ கைவசம் இருக்கிறது. அதை அப்படியே ஆக்கப்பூர்வ பணிகளுக்குச் செலவிட்டால், நமது உற்பத்தித் திறன் விகிதம் மற்றும் மொத்த உற்பத்தி (rate of productivity and overall production) பெருகும்; அபரிமிதமான பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். ஆனால், அதற்கு நாம் அதிகம் திட்டமிட வேண்டியிருக்கிறது; உழைக்கவேண்டியிருக்கிறது.

எதிர்கொள் !

இத்தனை கோடி இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கியாகவேண்டும். 20-ம் நூற்றாண்டின் நிறைவில் நமக்குக் கிடைத்த கணினி மென்பொருள் துறை (software industry) போன்ற ஏதேனும் ஒன்று புதிதாக 'முளைத்தால்’ ஒழிய, இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியே. விவசாயம், நெசவு போன்ற மண் சார்ந்த மரபு சார்ந்த தொழில்களை, 'ஈர்ப்பு’ கொண்டதாக்கவேண்டும். சுயவேலை வாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்க இளைஞர்களின் மனங்களைப் பக்குவப்படுத்தவேண்டும்.

இதற்கிடையே வேறொரு செய்தி, நம்மை கவலைகொள்ளச் செய்கிறது. இன்றைய இளைஞர்களிடம், பணித் தகுதி மற்றும் பணித் திறன் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்தியாவில் உள்ள தொழில் பட்டதாரிகளிடையே (professional graduates) 30 சதவிகிதமும் பிற பட்டதாரிகளில்

(non-professional graduates) வெறும் 10 சதவிகிதமும் மட்டுமே வேலைக்குத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள். அதாவது, 70 சதவிகித தொழில் பட்டதாரிகளும் 90 சதவிகித பிற பட்டதாரிகளும் வேலைக்குத் திறன் அற்றவர்களாக உள்ளனர் என்பது அதிர்ச்சியான தகவல்தான்.

இது, நாம் உடனடியாகத் தீர்வு காணவேண்டிய ஒரு பிரச்னை. இங்குதான் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது. பெரும்பாலோருக்கு ஒரு பிரமை இருக்கிறது. அதாவது, கிராமப்புற மாணவர்கள்தாம் வேலை திறன் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் அது. இது முற்றிலும் தவறான கருத்து. கிராமத்துப் பள்ளியில் படித்தாலும், நகரங்களில் படித்து வளர்ந்தாலும் திறமை என்பது தனிப்பட்ட ஒருவனின் அறிவு, உழைப்பின்பாற்பட்டதுதான். இன்னும் சொல்லப்போனால், ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் முடிவுகளைப் பார்க்கும்போது, கிராமத்து இளைஞர்கள்தாம் பெரிய அளவில் சாதித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, சின்னஞ்சிறு ஊர்களில் இருந்து இளம் பெண்கள் சென்னைக்கு வந்து படிப்பிலும் பணியிலும் சிறந்து விளங்குவதை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

கடந்த அத்தியாயங்களில் விக்கியைப் பற்றிப் பார்த்தோம். பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான்; வழிகாட்டுதல்களும் வழிநடத்துனர்களும் நிறைந்திருக்கிற பகுதி. ஆனால், ஊர் பேர் தெரியாத இடத்தில் பிறந்து, ஏதோ ஒரு மரத்தடி பள்ளியில் படித்த இளைஞர்களுக்கு, அவர்களின் பெற்றோரிடம் இருந்து அறிவுரை மட்டுமே கிடைக்கும்; வழிகாட்டுதலுக்கு வழி இல்லை. இவர்கள் 'தனியானவர்கள்’. நெறிமுறைகள் ஏராளமாக கற்றுக்கொண்டு, வழிமுறைகள் ஏதும் அறியாதவர்களாக பணிச் சந்தையில் (job market) போராடுபவர்கள். இந்தப் பிரிவினர் தாம் நம் சிறப்பு கவனத்துக்கு உரியவர்கள்.

எதிர்கொள் !

இவர்கள் ஒரே மாதிரியானவர்கள் அல்லர். 'எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என்கிற நிலையில் சிலர்; எப்படியும் தாம் நினைத்ததை சாதித்துக்காட்டியே தீர வேண்டும் என்கிற உத்வேகத்துடன் சிலர்; ஏதேனும் 'கொழு கொம்பு’ கிடைத்தால், அதைப் பற்றிக்கொண்டு மேலே வந்துவிடலாமே என்கிற ஆவலுடன் சிலர்; 'இதை விட்டால் வேறு வழியில்லை’ என்கிற மனப்பான்மையுடன் சிறிய நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் வாழ்க்கையை 'சமாளிக்க’ தயாராகிவிட்ட, தகுதி குறைவான பணிகளில் தங்கிவிட்ட ‘underemployed’ ஆகச் சிலர்.

இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த ஒட்டுமொத்த வளர்ச்சிதான், திட்டம் இடுபவர்களின் முன் இன்று உள்ள மிகப் பெரிய சவால். இதை அரசாங்கம் மட்டுமே தனித்து நின்று சாதிக்க முடியாது. ஒவ்வொரு இளைஞனுக்கும் இளைஞிக்கும், ஒவ்வொரு பெற்றோருக்கும் இதில் பெரும் பங்கு உள்ளது.

ஆழமான அறிவு, சரியான புரிதல் (proper understanding), , தெளிவாக முடிவெடுக்கும் திறன், அனைத்துக்கும் மேலாக, கடின உழைப்பு இன்றைய இளைஞர்களுக்கு மிக மிக அவசியமாக, அதுவும் அவசரமாகத் தேவைப்படுகிறது. இத்தகையோரை உருவாக்குவதில்தான் அறிஞர்களும் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறார்கள்.  இதுதான் நமது முன்னுரிமை. அறிவில் சிறந்தவர்களாக வேண்டுமென்றால், நல்ல நல்ல நூல்களாகத் தேடி எடுத்துப் படிக்கவேண்டும். இந்தத் தேடல்தான் ஓர் இளைஞனின் அடையாளமாக இருக்கவேண்டும். காரணம்..?

உழைக்காமல் வாழ்க்கையில் உயர முடியாது என்பதையும் உணரச் செய்யவேண்டும். எந்த மனிதனையும் இந்த உலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதில்லை; நாம்தான் உழைத்து உழைத்து உழைத்து, எதிர்த்து எதிர்த்து எதிர்த்து, தடைகளை உடைத்து உடைத்து உடைத்து முன்னேறவேண்டும் என்பதை ஆழமாகப் பதிய வைக்கவேண்டும்.      

இந்தப் பணியில் பெரும் தடையாக இருப்பது எது..? சந்தேகத்துக்கு இடமில்லாமல், அவர்களிடம் பரவலாக உள்ள ஒழுங்கீனம்தான். இதற்கு யார் பொறுப்பு? இதை சரி செய்ய முடியுமா..?, யார் செய்வது..?, எப்படிச் செய்வது..?

(தெளிவோம்)
படம்: ப.சரவணக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism