கடந்த வாரம் வெளியான நாணயம் விகடனில் 'எஸ்.ஐ.பி.: பெஸ்ட் ஃபண்டுகள்’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையில், முதல்கட்டமாக 30 ஃபண்டுகளைத் தேர்வு செய்து, அதிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ள ஏழு ஃபண்டுகளைத் தேர்வு செய்து நம் வாசகர்களுக்குத் தந்திருந்தேன்.

இந்தக் கட்டுரையைப் படித்த சில வாசகர்கள், 'மூன்று வருடத்திற்கு முன் இதேபோல் ஒரு கட்டுரை வந்தது; அதை வைத்து நாங்கள் எங்கள் முதலீட்டைத் தொடங்கினோம். முதலீடு செய்த ரூபாய் அதே நிலையில்தான் உள்ளது; ஏதும் ஏறவில்லை. இந்நிலையில் மீண்டும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யச் சொல்கிறீர்களே, எப்படி?’ என்று கேட்டிருந்தனர். இன்னும் சில வாசகர்களுக்குகூட இப்படி ஒரு கேள்வி இருக்கலாம். அவர்களின் கேள்விக்கான பதிலை இப்போது சொல்கிறேன்.

பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் தொடர்ந்து நிலையான வருமானத்தைத் தரும் என்று நாம் சொல்லவில்லை. அதற்கு ஒருபடி மேலே போய், நஷ்டம் அடையவும் வாய்ப்புள்ளது; ஆகவே, ஆழம் பார்த்து காலை விடுங்கள் என்றுதான் கூறியிருந்தேன். நஷ்டத்தைத் தாங்க முடியாதவர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் மட்டுமல்ல - வேறு எந்த முதலீடுமே செய்யவே கூடாது. நஷ்டமே ஏற்படாத மாதாந்திர சேமிப்பு முறைகளான பி.பி.எஃப்., அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் போன்றவற்றில்தான் சேமிக்கவேண்டும்.

மேலும், மூன்று ஆண்டுகளில் தேவைப்படும் தொகைக்கான முதலீட்டிற்கு நாம் ஒருபோதும் பங்கு சார்ந்த எஸ்.ஐ.பி. முதலீடுகளைப் பரிந்துரை செய்ததில்லை. குறைந்தது ஐந்து ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தில் உள்ள உங்களது தேவைகளுக்காகவே எஸ்.ஐ.பி. முறையில் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யுங்கள் என்கிறோம்.

உங்கள் எதிர்காலத் தேவைகளான ஓய்வுக்காலம், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்ற நீண்டகால இலக்குகளுக்காக எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யுங்கள் என்றுதான் நான் அந்தக் கட்டுரையில் சொல்லி இருந்தேனே தவிர, குறுகியகாலத்தில் கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைத்து, பிற்பாடு தவிக்கவேண்டாம் என்பதே நான் சொல்ல விரும்பும் ஆலோசனை.

நீண்டநாள் முதலீட்டாளர்களுக்கு இந்திய மியூச்சுவல் ஃபண்டுகள் இதுவரை வாரி வழங்கியது ஏராளம்; இன்னும் வழங்கவேண்டியதும் ஏராளம். உங்கள் தேவைகள் இன்னும் 5/ 10/ 15/ 20 ஆண்டுகளுக்கு பிறகு எனில், நீங்கள் முதலீடு செய்யவேண்டியது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில்தான் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சென்றமுறை இதழில் நாம் செய்த ஆய்வில், முதல்கட்டமாக தேர்ந்தெடுத்த 30 ஃபண்டுகளில், ஏதாவது ஒன்றில் கடந்த ஐந்து ஆண்டு காலமாக ஒருவர் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்திருந்தால், அவருக்கு குறைந்தபட்சமாக கிடைத்திருக்கக்கூடிய வருவாய் (வருமான வரி இல்லாமல்) ஆண்டிற்கு 7.7 சதவிகிதம் ஆகும். உச்சபட்ச வருமானம் ஆண்டிற்கு 20.6 சதவிகிதம் ஆகும்.

இந்தியப் பொருளாதாரம் மோசமாக இருந்த இந்நிலைமையிலும், மியூச்சுவல் ஃபண்டுகள் இந்த அளவு வருமானத்தைத் தந்துள்ளது. பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும்போதே இந்தளவு வருமானம் கிடைத்துள்ளதெனில், இனிவரும் காலத்தில் நம் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்து திரும்பும்போது எந்த அளவு வருமானம் கிடைக்கும் என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒன்று மட்டும் நிச்சயம். அடுத்த 5/ 10/ 15/ 20 ஆண்டுகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு வலுவான காலகட்டமாக இருக்கும். ஒரு புத்திசாலி முதலீட்டாளர் சொத்துகள் குறைந்த விலையில் கிடைக்கும்போதே வாங்குவார். சந்தை மலிவாக இருக்கும்போது நீங்கள் தரும் பணத்திற்கு அதிக யூனிட்டுகள் கிடைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்!