அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதைக் கட்டுப்படுத்தி, பணப்புழக்கத்தை அதிகரிக்க ஆர்.பி.ஐ. மூன்று முக்கியமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

முதலாவதாக, வங்கிகள் தங்களுக்குத் தேவையான குறுகிய கால நிதிக்காக ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்கும் கடனுக்கு ரூ.75,000 கோடி உச்சவரம்பாக நிர்ணயித்துள்ளது. இரண்டாவதாக, வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தை 2% உயர்த்தி 10.25% என்ற நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. மூன்றாவதாக, ரூ.12,000 கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்களை விற்கப்போவதாக அறிவித்துள்ளது.

ஆர்.பி.ஐ.-ன் முதல் இரு நடவடிக்கையால் வங்கிகள் ஆர்.பி.ஐ.-யிடமிருந்து வாங்கும் கடன் குறையும். அதனால் வங்கிகளின் பணப்புழக்கம் குறையும். மூன்றாவது நடவடிக்கையின் மூலம் சந்தையிலிருந்து ரூ.12,000 கோடியை ஆர்.பி.ஐ. வசூலிக்கும். அதனால் பணச் சந்தையிலும் பணப் புழக்கம் குறையும். பணப் புழக்கம் குறையும்போது, அதன் மதிப்பு சரிவதி லிருந்து கட்டுப்படுத்தப்படும்.

ஆர்.பி.ஐ. எடுத்திருக்கும் இந்நடவடிக்கை களின் காரணமாக இன்கம் மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானம் கணிசமாக குறைந்துள்ளது. ஏன் தெரியுமா?

வட்டி விகிதமும் இன்கம் ஃபண்டுகளின் வருமானமும் எதிர்மறையான தொடர்பைக் கொண்டுள்ளன. அதாவது, வட்டி விகிதம் உயரும்போது இன்கம் ஃபண்டுகளின் என்.ஏ.வி. மதிப்பு சரியும். வட்டி விகிதம் சரியும்போது இன்கம் ஃபண்டுகளின் என்.ஏ.வி. மதிப்பு உயரும்.

இந்த சமயத்தில் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் என்ன செய்யவேண்டும்? என்பது முக்கியமான கேள்வி.

எதற்காக இன்கம் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறோம்? வங்கி டெபாசிட்டைவிட சிறிது கூடுதல் வருமானம்; வருமான வரி குறைவாக இருக்கும் என்பது போன்ற காரணங் களுக்காகத்தான். அதனால் முதலீட்டாளர்கள் நீண்ட கால இன்கம் ஃபண்டுகள், அரசு கடன் பத்திர ஃபண்டுகள் போன்ற குறிப்பிட்ட கால ஃபண்டுகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இந்தக் குறிப்பிட்ட கால அளவுள்ள ஃபண்டுகள்தான் வட்டி விகித உயர்வால் அதிக பாதிப்படையும்.

மாறாக, குறுகிய கால இன்கம் ஃபண்டுகள், டிவிடெண்ட் வருமானம் அதிலேயே சேரும் (குரோத்)

அக்ருயல் (accrual) ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும். இத்தகைய ஃபண்டுகளில் பாதிப்பு குறைவாக இருக்கும். அதுவும் தற்காலிகமாகவே இருக்கும். குறிப்பிட்ட கால முடிவில் பார்க்கும்போது, வங்கி டெபாசிட்களுக்கு ஈடான வருமானத்தைத் தந்திருக்கும். இதனால் முதலீட்டாளர்கள்,

1) முதலீட்டுக் காலத்தை (டுயூரேஷன்) அடிக்கடி மாற்றிக்கொள்ளாத ஃபண்டுகளைத் தேர்வு செய்யவேண்டும்.

2) தங்கள் முதலீட்டுக் காலமும், இன்கம் ஃபண்டின் முதலீட்டுக் காலமும் ஒத்துப் போகவேண்டும். இத்தகைய ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு ஒருநாளும் ஏமாற்றம் தராது.