Published:Updated:

ஷேர்லக் - பாதாளத்தில் ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ்!

ஷேர்லக் - பாதாளத்தில் ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ்!

ஷேர்லக் - பாதாளத்தில் ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ்!

ஷேர்லக் - பாதாளத்தில் ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ்!

Published:Updated:
##~##

ஷேர்லக் நம் அறைக்குள் நுழைந்தவுடன் பங்குச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிற ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் பற்றிதான் பேச ஆரம்பித்தார்.

''ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் பங்கின் விலை இரண்டே நாட்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு  குறைந்திருக்கிறது. கடந்த புதன்கிழமை அன்று 540 ரூபாய் என்கிற அளவில் முடிந்த அந்தப் பங்கின் விலை வியாழக்கிழமை அன்று டிரேடிங் முடிகிற சமயத்தில் 192 ரூபாயாக குறைந்தது. என்.எஸ்.இ.எல். எக்ஸ்சேஞ்சில் திடீரென எல்லா கான்ட்ராக்ட்களையும் நிறுத்தியதே இதற்கு காரணம் என்பது உமக்கே தெரியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்த நாளான வெள்ளிக்கிழமையாவது அந்தப் பங்கின் விலை உயருமா என்று பார்த்தால், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கிட்டத்தட்ட 11.91 லட்சம் பங்குகளை விற்ற செய்தி வெளியான தால், 20 சதவிகிதத்திற்கு மேல் விலை குறைந்தது. ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் பங்கை 212 ரூபாய்க்கு விற்றிருக்கிறது. ஆனால், என்ன விலைக்கு வாங்கியது என்பது தெரியவில்லை. இன்னும்கூட சுமார் 7 லட்சம் பங்குகளை வைத்திருக்கிறது. அந்தப் பங்குகளை உடனடியாக விற்குமா அல்லது வைத்திருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இதேபோல, எம்.சி.எக்ஸ். பங்கின் விலையும் இரண்டே நாட்களில் 628 ரூபாயிலிருந்து 409 ரூபாயாக குறைந்திருக்கிறது.

ஷேர்லக் - பாதாளத்தில் ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ்!

இந்த இரண்டு பங்குகளின் விலை இந்த அளவுக்கு குறைந்திருக்கிறதே, இப்போது வாங்கலாமா என பலரும் எனக்கு போன் செய்து கேட்டார்கள். அவர்களுக்கு நான் என்ன சொன்னேன் தெரியுமா?

இப்போதுதான் சுனாமி வந்து போயிருக்கிறது. அதற்குள் கடலில் இறங்கி காலை நனைக்க ஆசைப்படலாமா? இன்னொரு சுனாமி வந்தால் ஆளையே அடித்துக்கொண்டு போய்விடுமே! எனவே, கொஞ்சம் பொறுத்திருந்து மீண்டும் சுனாமி வராது என்பதை உறுதி செய்து கொண்டபிறகு கடலில் இறங்கலாம் என்றேன்.

நான் இப்படி சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பல முன்னணி பங்கு தரகு நிறுவனங்கள், போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸுக்காகத் திரட்டிய நிதியை கமாடிட்டி சந்தையில் முதலீடு செய்திருப் பதாக செபிக்கு செய்தி புகார் போயிருக்கிறது. இதுகுறித்து விரிவான விசாரணை செபி கூடிய சீக்கிரம் செய்யப்போகிறதாம். எனவே, உஷார்'' என்றார்.

''அந்நிய நிதி நிறுவனங்கள் இந்தியாவில் நுழைய மேலும் பல சலுகைகளை செய்து தந்திருக்கிறாரே மத்திய நிதி அமைச்சர்?'' என்றோம்.

''முன்னணி தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்களைப்போல, பொதுத் துறை நிறுவனங்களும்  வெளிநாடுகளில் நிதித் திரட்ட வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொல்லி இருக்கிறார். அதற்கு ஏற்றாற்போல் விதிமுறைகள் தளர்த்தப்படும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார். அந்த வகையில், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (பி.எஃப்.சி.), இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.எஃப்.சி.) போன்றவை விரைவில் வெளிநாடுகளில் நிதித் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு நிறுவனங்கள் மற்றும் இதர பொதுத் துறை நிறுவனங்கள் நடப்பு நிதி ஆண்டில் 800 முதல் 1,000 கோடி டாலரை வெளிநாட்டிலிருந்து திரட்டக்கூடும் என்கிறார்கள் விஷயம் தெரிந்த வர்கள். பாண்டுகளை வெளியிடுவதன் மூலம் இந்த நிதியைத் திரட்ட உள்ளன. இப்படி திரட்டப்படும் நிதி, இன்ஃப்ரா

ஷேர்லக் - பாதாளத்தில் ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ்!

திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. முடங்கிக் கிடக்கும் உள்கட்டமைப்புத் துறை இதனால் கொஞ்சம் முன்னேற்றம் காணும்'' என்றார்.

''ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவின் பதவிக் காலம் கூடிய விரைவில் முடியப் போகிறது. அவரே அடுத்த கவர்னராக வருவாரா?'' என்று கேட்டோம்.

''ஆர்.பி.ஐ.-ன் கவர்னராக மீண்டும் வருவதற்கு தனக்கு விருப்பமில்லை. எனவே, தன் பெயரை மீண்டும் பரிசீலிக்கவேண்டாம் என சுப்பாராவே நிதி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டதாக சிதம்பரமே சொன்னார். ஆனால், சமீபத்தில் மாஸ்கோவுக்கு சுப்பாராவ் சென்றிருந்தபோது இதே கேள்வியை அவரிடம் கேட்டார் ஒரு டிவி நிருபர். ''அழைப்பு வந்தால்தானே நான் ஏற்றுக்கொள்ள முடியும். அழைப்பு ஏதும் வராததால் நான் அடுத்த வேலைக்குப் போக வேண்டியதுதான்'' என்று சொல்லி இருக்கிறார். அடுத்தமுறையாவது அரசாங்கம் சொல்வதைக் கேட்கிற மாதிரி ஒரு கவர்னர் ஆர்.பி.ஐ.க்கு கிடைக்கவேண்டும். ஆனால், அப்படி ஒருவர் கிடைப்பாரா என்பது சந்தேகமே!'' என்றவருக்கு பிளாக் டீ தந்தோம். அதை ரசித்துக் குடித்தவரிடம் அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

''ஹெச்.சி.எல். நிறுவனத்தின் காலாண்டு ரிசல்ட் எப்படி வந்திருக்கிறது?'' என்றோம்.

''இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய ஐ.டி. நிறுவனமான ஹெச்.சி.எல்-ன் முதல் காலாண்டு முடிவு எதிர்பார்ப்புகளைத் தாண்டி சிறப்பாக வந்துள்ளது. அதன் நிகர லாபம் 11% அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் அதன் 85,000 பணியாளர்களுக்கு சுமார் 8% சம்பள உயர்வு அளித்துள்ளது கூடுதல் தகவல்'' என்று சொன்னார்.

''வங்கித் துறையின் செயல்பாடு மோசமாக இருந்தாலும், இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ.-ன் நிகர லாபம் முடிந்த காலாண்டில் 25% அதிகரித்து ரூ.2,274 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறதே?'' என்று கேட்டோம்.

''எல்லாம் கருவூல வருமானம் அதிகரிப்பு மற்றும் சில்லறை கடன் உயர்ந்திருப்பதுதான்'' என்று சுருக்கமாகப் பதில் சொன்னார்.  

''கோல்டன் டொபாக்கோ கம்பெனிக்கு செபி அமைப்பு 1 கோடி ரூபாய் அபராதம் விதித்து உள்ளதே?'' என்று இழுத்தோம்.

''புரமோட்டர் மற்றும் புரமோட்டர் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் பங்கு முதலீடு தொடர்பான சரியான விவரங்களைத் தெரிவிக்கவில்லை என்பதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடிப்படைத் தகவல் களைக்கூட இந்த நிறுவனங்கள் சரியாகத் தரவில்லை என்றால் எப்படி? எனவேதான் இந்த அபராதம்'' என்றார்.

''கடன் கொடுக்க லஞ்சம் வாங்கிய வழக்கில் கடந்த 2012 நவம்பரில் எல்.ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட 24 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் அதிகாரிகளை கைது செய்தது சி.பி.ஐ. இந்த விஷயத்தில் இப்போது சி.பி.ஐ.யுடன் கூட்டு சேர்ந்திருக்கிறது ஆர்.பி.ஐ. இந்த விஷயத்தில் சி.பி.ஐ. மேலும் சில நிறுவனங்கள் பற்றி தகவல் கேட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

அந்த நிறுவனங்களின் பெயரை சொன்னால் நம் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காக சொல்கிறேன். டிபி ரியால்டி, அதானி குழுமம், ஈமார் எம்.ஜி.எஃப், ஓபராய் ரியால்டி, ஜேப்பி குழுமம், ஜே.எஸ்.டபிள்யூ. பவர், பான்டலூன் மற்றும் ரெலிகேர்'' என்று எல்லா செய்திகளையும் சொல்லி முடித்தார்.

''ஞாயிற்றுக்கிழமை அன்று நெல்லையில் நடக்கும் பங்குச் சந்தை விழிப்பு உணர்வு கூட்டத்திற்கு வாசகர்கள் கட்டாயம் வர வேண்டும்'' என்று சொல்லிவிட்டு, நடையைக் கட்டினார்.