Published:Updated:

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

Published:Updated:

ஜீரகம்!(JEERA)

##~##
சென்ற வாரத்தில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி டிமாண்ட் அதிகமாகவும், சப்ளை குறைவாகவும் இருந்ததால் ஜீரகத்தின் விலை அதிகரித்து  வர்த்தகமானது. எனினும், பெரும் மழை காரணமாக ஜீரகத்தின் ஈரத்தன்மை அதிகமாக இருக்கும் என்பதால்  விலை மேலும் உயராமல்  தடுக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து ஜீரகத்திற்கான டிமாண்ட் அதிகரித்து வருவதால் குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் நல்ல வருமானம்  தரும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குஜராத் மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருவதால் பயிர்கள் சேதமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய காலத்தில் விலை குறைந்தாலும் நீண்ட கால நோக்கில் துருக்கி மற்றும் சிரியாவிற்கு செல்லவேண்டிய ஆர்டர்கள் இந்தியாவிற்கு வருவதால் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

2013 ஏப்ரல் முதல் 2014 மார்ச் வரை இந்திய ஜீரகத்தின் ஏற்றுமதி 13 சதவிகிதம் அதிகரித்து, 90,000 டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே, சென்ற ஆண்டில் 79,900 டன்னாக இருந்தது. ஏற்றுமதி தேவை அதிகமாக இருப்பதால் ஜீரகத்தின் விலை வரும் வாரத்தில் சற்று உயரும் என்று எதிர்பார்க்கலாம்.

மிளகு! (PEPPER)

குறைவான வரத்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவை அதிகரித்ததால் மிளகு விலை சென்ற வாரத்தில் அதிகரித்து வர்த்தக மானது. கொச்சி சந்தையில் நூறு கிலோ மிளகு 39,000 - 41,000 ரூபாய்க்கு வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் இந்திய மிளகு டன் 7,350 டாலருக்கு விலை கேட்கப்பட்டது. இந்தோனேஷியாவில் மிளகு அறுவடை முடிந்து புதிய வரத்து இன்னும் சில நாட்களில் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வடக்கு லாம்பங்கில் மிளகு உற்பத்தி சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் குறைந்து காணப்படுகிறது. நல்ல தேவை மற்றும் ஏற்றுமதி ஆர்டர்கள் இருப்பதால் வரும் வாரத்திலும் மிளகு விலை அதிகரித்து வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி !

மஞ்சள்! (TURMERIC)

சென்ற வாரத்தில் மந்தநிலை காரணமாக மஞ்சளின் விலை குறைந்து வர்த்தகமானது. சப்ளை குறைந்தது, கேரிஓவர் ஸ்டாக்குகள் அதிகமானது, தேவை குறைவாக இருந்தது போன்ற காரணங்களினால் மஞ்சள் விலை குறைந்தது. நிஜாமாபாத் மற்றும் ஆந்திராவில் சென்ற புதன்கிழமை வரை மஞ்சள் சந்தைகள் விடுமுறையில் இருந்தன. ஆந்திராவில்

மஞ்சள் உற்பத்தி நன்றாக இருக்கும் என்ற காரணமும் விலையில் பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால், இந்த  ஆண்டு ஆந்திராவில் சுமார் 13.1% அதிகமான விளைநிலங்களில்

மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது என அம்மாநில விவசாயத் துறை தெரிவித்துள்ளது. 2013- 2014-ல் மஞ்சள் ஏற்றுமதி 75,000-80,000 டன்னாக இருக்குமெனவும், வருவாய் 30% வரை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. என்.சி.டி.இ.எக்ஸ். கிடங்குகளில் ஜூலை 31 அன்று 8,657 டன் இருப்பு உள்ளது. வரும் வாரத்திலும் டிமாண்ட் குறைவாக இருந்தால் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !

ஏலக்காய்! (CARDAMOM)

ஏலக்காய் தேவை குறைந்ததால் ஸ்பாட் சந்தைகளில் சென்ற வாரத்தில் விலை குறைந்து வர்த்தகமானது. ஏலக்காய் அதிகம் விளையும் கேரளாவில் கடும் மழை பெய்து வருவதால் விலை குறைவது தடுக்கப்பட்டது. கேரள மாநிலம் இடுக்கியில் ஏலக்காய் பயிர்களைத் தாக்கியுள்ள நோய் கடும் மழை காரணமாக மற்ற பயிர்களுக்கும் பரவி வருகிறது.

மேலும், அங்கு மழை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்ற வியாழன் ஏலக்காய் வரத்து 59 டன்னாக இருந்தது. ஒரு கிலோ சராசரியாக 565 ரூபாய்க்கு வர்த்தகமானது. வரும் வாரத்திலும் அதிக ஏற்ற, இறக்கம் இல்லாமல் வர்த்தகமாகும்.

- பானுமதி அருணாலம்.