Published:Updated:

பணவளக்கலை !

பணவளக்கலை !

பணவளக்கலை !

பணவளக்கலை !

Published:Updated:

 உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

##~##

ஒரு மனிதன் தன் திறமையைப் பயன்படுத்தி முழுமையாக சம்பாதிக்க நினைக்கும்போது பல்வேறுவிதமான அகச்சூழ்நிலைகள் மற்றும் புறச்சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்த இரண்டிலும் இளவயதிலேயே முன்அனுபவம் பெறுபவர்களுடைய சம்பாத்தியம் மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், பின்னர் அவர் எடுக்கும் ரிஸ்க்குகளுக்கு ஏற்றாற்போல் இழப்புகளும் நடக்கலாம் என்பதால்தான். ஏற்கெனவே நாம் பார்த்தபடி, நாம் வளரும்/படிக்கும் சூழலுக்கும் சம்பாதிக்கச் செல்லும்போது எதிர்கொள்ளும் சூழலுக்கும் உள்ள வித்தியாசம் குறைந் திருந்தால் அது நமக்கு பண ரீதியான முழுமையான வெற்றியைத் தரும் வாய்ப்பு மிக அதிகம்.  

தொழில் என்ற ஆடுகளத்தின் வித்தைகளைக் கற்றுக்கொள்ள ஆடுகளத்தினுள் அனுமதி தேவைப்படுகிறது. ஒரு ஹோட்டலில் பில்லிங் கிளார்க்காகவோ, ஒரு வங்கியின் டி.எஸ்.ஏ.வில் டாக்குமென்டை சரிபார்ப்பவராகவோ, ஒரு செல்போன் கம்பெனியில் கஸ்டமர் எக்ஸிக்யூட்டிவாகவோ ஒருவர் மிகக் குறைந்த வயதில் பகுதிநேர வேலைக்குச் செல்லும்போது அந்தந்த ஆடுகளத்தின் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்கிறார். முதலாளியின்/மேலதிகாரியின் மிடுக்கைப் பார்க்கிறார். முதலாளியாக/மேலதிகாரியாக இருப்பதன் சுதந்திரங்களை முழுமையாக உணர்ந்துகொள்கிறார். அவருடைய செயல்பாடு களை நேரடியாக உள்வாங்கிக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார். பயமறியாத வயதில் ஒருவருக்கு பணம் சம்பாதிப்பதற்கான ஆடுகளத்தின் நுணுக்கங்கள் முழுமையாய்ப் புலப்படும் போது புதிதுபுதிதாக சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை அவர் உருவாக்க முயல்கிறார். வயது குறைவானதால் பயமில்லை. பயமில்லாத் திறமை சக ஊழியர்களில் இருக்கும் திறமையுடன் கூட்டுச் சேருகிறது. அதிக முதலீடு தேவைப் படும்போது திறமையும் முதலீடும் கூட்டுச் சேருகிறது. இந்தக் கூட்டணிகள்தான் பணத்தைப் பெருக்கும் கூட்டணியாகிறது.

பணவளக்கலை !

வீடு, பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில் சொல்லித்தரப்படும் நடைமுறைகளுக்கும், சம்பாதிப்பதற்கான ஆடுகளத்தில் நிஜத்தில் தேவைப்படும் சாமர்த்தியத்திற்கும் இடையேயுள்ள இடைவெளி குறையக் குறைய சம்பாத்தியத்திற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. குறைந்த வயதில், சம்பாதிக்கும் களத்திற்கு வரும்முன்னரே இந்த தாத்பரியங்களைத் தெரிந்துகொண்டவர்கள் வெற்றி பெறுவதற்கும், சம்பாதிக்கும் களத்திற்கு வந்தபின்னர் அதற்கான நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு வெற்றி பெறுவதற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கிறது.

சம்பாதிக்கும் களத்திற்கு வந்து கற்றுக்கொள்ளும் வேளையில் கல்யாணம், காட்சி என்று பொறுப்புகளை சமுதாயம் தனிநபரிடத்தில் ஒட்டவைத்துவிடுகிறது. பயமறியா வயதில் குறைந்த பொறுப்புகளோடு ஆடுகளம் பற்றி தெரிந்துகொண்டு செயல்பட்டு வெற்றி பெறுவதற்கும், பயம்கலந்த பொறுப்புகளோடு செயல்பட்டு வெற்றி பெறுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கும் இன்றைய தினத்தில் மத்திய வயதுடையவர்களுக்கும்

பணவளக்கலை !

இடையே இந்த வித்தியாசம் பெரிதாகிக்கொண்டே போகிறது என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

சிறிய வயதிலேயே பணம் சம்பாதிக்கச் சென்றவர்கள் அனைவரும் பெரும் பணம் பார்த்ததாகத் தெரியவில்லையே! அப்படிச் சென்ற பலரில் வெகு சிலரே முன்னேற்றம் கண்டுள்ளதைப் பார்க்கிறோமே! இந்தக் கோட்பாட்டை நாம் எப்படி ஒப்புக்கொள்வது என்று சிலர் வாதிடுவீர்கள். அங்குதான் நாம் பணவளக்கலையின் அடுத்தகட்டத்திற்குச் செல்கின்றோம்.

சிறுவயதிலேயே தொழில் அனுபவம் பெற்றவர்கள் அனைவரும் பெரும் பணம் பார்த்ததில்லை என்பது உண்மைதான். அட, என்ன சார் இது! இரண்டு பாராக்களுக்கு முன்னால் நீங்கள் சொன்னதை இந்தப் பாராவில் மறுத்துச் சொல்கின்றீர்களே என்கின்றீர்களா?  

ஆடுகளத்தைப் பற்றித் தெரிந்துகொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஆடுகளத்தில் நாம் வெற்றி பெறுவோம் என்று நினைப்பது அதைவிட முக்கியம். கிரிக்கெட்டிலோ, கோல்ப் விளையாட்டிலோ விளையாட்டுக்கு உதவும் நபர்களுக்கு அந்த ஆடுகளத்தின் அத்தனை விஷயமும் அத்துப்படியாக இருக்கும். ஆனால், அவர்கள் எல்லோராலும் ஒரு பிரசித்தி பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரராகவோ/கோல்ப் விளையாட்டு வீரராகவோ மலர முடிவதில்லை. அங்குலம் அங்குலமாக களம் தெரிந்திருந்தாலும், பிரசித்தி பெற்ற வீரர்கள் பலருடன் பழகி வந்தாலும் ஒரு வீரராக மாற முடியாதது ஏன் என்று கேட்டால், அவர்கள் செய்யும் வேலையை அவர்கள் ஒரு தொழிலாக மட்டுமே பார்த்து வருவார்கள். விளையாட்டு வீரர்கள் விளையாடுவார்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து தருவது நமது கடமை என்றுதான் நினைப்பார்களே தவிர, நானும் ஒரு வெற்றிகரமான விளையாட்டு வீரனாக மாறவேண்டும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் இருக்காது. அந்த எண்ணம் இருப்பவர்களால் மட்டுமே முன்னேற்றத்தைச் சந்திக்க முடியும்.

பணவளக்கலை !

பணம் சம்பாதிப்பது என்கிற விஷயத்தில் மனதின் ரோல் இங்கேதான் ஆரம்பிக்கிறது. அதனால்தான் நம்முடைய எதிர்காலத்தை நாம் இன்று என்ன செய்கிறோம் என்று நிர்ணயிப்பதைவிட நாம் என்ன நினைக்கிறோம் என்பதுதான் நிர்ணயிக்கிறது என்று சொல்கி றார்கள். பணம் சம்பாதித்தவர்களில் பெரும்பாலானோர் பணம் சம்பாதிக்கவேண்டும், வசதி வாய்ப்பைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் உறுதியோடு வைத்திருப் பார்கள். இதுபோன்ற எண்ணம் இல்லாமல் சம்பாதித்தவர்கள் எல்லோரும் ஒரு விபத்தாகவே சம்பாதித்திருப்பார்கள். சரியான தொழிலில் சரியான நேரத்தில் இருந்ததன் மூலம் மட்டுமே அவர்கள் காசு பார்த்திருப்பார்கள். அவர்களுடைய தொழிலை அவர்கள் பெரியதாக விரிவாக்கம் செய்யவோ அல்லது புதுத் தொழில்களில் முதலீடு என்பதையோ செய்திருக்கமாட்டார்கள். எப்படியோ காசு வந்தது அதைக் காப்பாற்றிக்கொள்வோம் என்ற எண்ணம் மேலோங்கி நிற்குமே தவிர, நம்முடைய பேர் சொல்வதைப்போல் ஒரு நிறுவனம் செழித்து வளரவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்காது. இவர்களை 'ஆக்ஸிடென்டல் ஆன்ட்ரப்ரெனர்கள்’ என்றழைத்தால் தவறில்லை.

அதேசமயம், திட்டமிட்டு மனதில் ஊக்கத்துடன் தீராத வேட்கையுடன் சம்பாதித்தேயாகவேண்டும் என்ற முயற்சியில் இருப்பவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்யவும் புதுத் தொழில்களில் முதலீடு செய்யவும் தயங்கவே மாட்டார்கள். எண்ணங்களே வாழ்க்கையை நடத்திச் செல்கிறது என்பது ஒன்றும் மூடநம்பிக்கையில்லை என்று நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். நனவுலகத்தை வழிநடத்தும் மூளையின் பங்கும் (கான்ஷியஸ் மைண்ட்), உள்ளத்தின் அடியுணர்வை வழிநடத்தும் மூளையின் பங்கும் (சப்கான்ஷியஸ் மைண்ட்) பணம் சம்பாதிப்பதில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் விழித்திருக்கும்போது மட்டும் புறஉலகின் செயல்பாடுகளுக்கு பதில் சொல்லும் கான்ஷியஸ் மைண்டும், நீங்கள் தூங்கினாலும் விழித்திருந்தாலும் உடல்கூற்றின் செயல்பாடுகளை செவ்வனே செய்ய உதவும் சப்கான்ஷியஸ்

பணவளக்கலை !

மைண்டும் உங்களுடைய செயல்பாடுகளில் பெரும்பங்கு வகிக்கிறது.

இதில் ஆச்சரியமான உண்மை என்னவென்றால், இந்த இரண்டும் ஒன்று செய்யும் வேலையை மற்றொன்று செய்யாது. உங்களுடைய கான்ஷியஸ் மைண்ட் என்பது லாஜிக்கில் கில்லாடி. வருகிற தகவல்களை ப்ராசஸ் செய்து வேகவேகமாக பதில்களைத் தரும். நீங்கள் ஆபீஸ் போகும்போது எப்போதும் வரும் பஸ்கள், எதிரே வராமல் இருந்தால் வாட்ச் ஓடுகிறதா என்று சரிபார்த்துக்கொள்ளச் செய்யும். மேனேஜரின் மூட் எப்படி இருக்கிறது என்பதை முகத்தைப் பார்த்தே கண்டுபிடித்துவிடும். மேனேஜரின் மூடைப் புரிந்துகொள்ளும் இந்த மூளையால் உங்களை மேனேஜராக்கும் கனவை நனவாக்க முடியாது. ஆபீஸ் ரூல்படி உனக்கு இன்னும் ஐந்து வருட சர்வீஸ் முடிந்தால்தான் அசிஸ்டென்ட் மேனேஜராகவே ஆகமுடியும் என்று முட்டுக்கட்டை போடும்.

ஆனால், சப்கான்ஷியஸ் மைண்ட் அப்படி இல்லை. அதற்கு ரூல்ஸ் பற்றித் தெரியாது. மேனேஜரானால் கிடைக்கும் பவர் என்ன? என்ற கனவை நனவாக்கத் தேவையான தெம்பை உங்களுக்குத் தரும். எந்த அளவுக்கு மிகுந்த சக்தி கொண்டதாக இந்த சப்கான்ஷியஸ் மைண்ட் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நடைமுறை லாஜிக்குகள் இதற்குப் புரியவே புரியாது! ரூல்கள் தெரியாததாலேயே இது கனவுகளுக்கு பவர் கொடுத்து வளர்க்கின்றது என்று கூடச் சொல்லலாம்.

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism