Published:Updated:

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

Published:Updated:
##~##

இந்த வாரம் அடிப்படை உலோகங்கள் குறித்து விளக்கமாக கூறுகிறார் வெல்த் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமணன்.

அடிப்படை உலோகங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சென்ற வாரத்தில் அடிப்படை உலோகங்கள் அனைத்தும் இந்த மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு விலை ஏற்றத்தைச் சந்தித்தது. இதற்கு முக்கிய காரணம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிதான்.

அடிப்படை உலோகங்களை அதிகளவில் பயன்படுத்தும் சீனாவின் பொருளாதாரம் மந்தநிலையாக இருப்பதால் ஸ்டிமுலஸ் பாலிசிகள் அல்லது வட்டி விகிதங்களில் மாற்றங்கள் கொண்டுவர வாய்ப்புள்ளது. அப்படி ஏதாவது மாற்றம் வரும்போது விலையில் மாற்றம் வரும்.  

தற்போது விலை அதிகமாக இருந்தாலும் வரும் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு தினங்களில் சந்தை எப்படி செல்கிறது என்று பார்த்து செயல்படுவது நல்லது. காரணம், ரூபாயை சரி செய்ய ஆர்.பி.ஐ. எடுக்கும் நடவடிக்கையினால் அடிப்படை உலோகங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

காப்பரை வாங்க நினைப்பவர்கள் ஷார்ட் போவதைத் தவிர்க்கவும். லாங்க் போகிறவர்கள் மட்டுமே காப்பரை வாங்கலாம். தற்போது காப்பர் 431 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இந்நிலையிலிருந்து 442 ரூபாய்க்கு செல்ல வாய்ப்புள்ளது. இதற்கு சப்போர்ட் லெவல் 424, 421 மற்றும் 418 ரூபாயாகும்.

நிக்கல் தற்போது 854 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இதிலிருந்து 863 அல்லது 880 ரூபாய்க்குப் போக வாய்ப்புள்ளது. இதற்கு ஸ்டாப்லாஸ் 840 ரூபாய். ஜிங்க் மற்றும் லெட் வாங்குவதைத் தற்போது தவிர்க்கவும்'' என்றார்.

தங்கம்!

தங்கத்தின் விலை சென்ற வார ஆரம்பத்தில் அதிகரித்தாலும் வார இறுதியில் ஏற்ற, இறக்கத்துடன்  வர்த்தகமானது. அமெரிக்கப் பொருளாதார புள்ளிவிவரங்கள் நல்லபடியாக வந்துகொண்டிருப்பதால் ஃபெடரல் வங்கி பாண்ட் பையிங் திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்து டாலரில் முதலீடு செய்தனர். மேலும், ஐரோப்பிய மத்திய வங்கி தங்களது வட்டி விகிதத்தை வரலாறு காணாத அளவிற்கு 0.5 சதவிகிதமாக வைத்துள்ளது.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

இந்தியாவில் தங்க இறக்குமதி குறைந்துள்ள தால் பிரீமியத் தொகை ஒரு அவுன்ஸுக்கு 40 டாலராக உள்ளது. மேலும், அமெரிக்காவின் மிகப் பெரிய கோல்டு இ.டிஎஃப். நிறுவனமான எஸ்.பி.டி.ஆர். கோல்டு டிரஸ்ட் நிறுவனத்தின் தங்க இருப்பு கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. சென்ற வெள்ளிக்கிழமை 10 கிராம் எம்.சி.எக்ஸ். தங்கம் 28,500 ரூபாய் வரை வர்த்தகமானது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதால் வரும் வாரத்தில் ரூபாயின் மதிப்பைப் பொறுத்தே தங்கம் விலையில் மாற்றங்கள் இருக்கும்.

வெள்ளி!

டாலரின் மதிப்பு அதிகரிப்பு காரணத்தால் வெள்ளியின் விலை சென்ற வார இறுதியில் குறைந்து வர்த்தகமானது. அமெரிக்காவின் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் திருப்திகரமாக இருப்பதால் டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது.

மேலும், தொழில் துறை பயன்பாட்டிற்கு வெள்ளியை அதிகமாகப் பயன்படுத்தும் சீனாவில் சொல்லிக்கொள்ளும்படி பொருளாதார வளர்ச்சி இல்லாததால் வெள்ளியின் தேவை கணிசமாக குறைந்துள்ளது.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்கள் சாதகமாக வந்தால் வெள்ளியின் விலை மேலும் குறைய வாய்ப்புண்டு. கடந்த வார இறுதியில் எம்.சி.எக்ஸ். எக்ஸ்சேஞ்சில் வெள்ளி 42,040 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. வரும் வாரத்திலும் வெள்ளியின் விலை குறைய வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

கச்சா எண்ணெய்!

ஆப்பிரிக்கா மற்றும் ஈராக்கிலிருந்து சப்ளை குறைந்துள்ளதாலும், அமெரிக்காவில் பொருளாதார நிலைமைகள் நல்லவிதமாக இருப்பதாலும் கச்சா எண்ணெய்யின் விலை சென்ற வாரத்தில் அதிகரித்து வர்த்தகமானது.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதும், சீனா மற்றும் ஐரோப்பாவில் தயாரிப்பு விகிதங்கள் வளர்ச்சி கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித் துள்ளது.

மேலும், ஜூலை மாதத்தில் 'ஒபெக்’ நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. லிபியாவில் கடந்த ஜூன் மாதத்தைவிட சுமார் 150,000 பேரல் தின உற்பத்தி ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ஈராக்கிலும் உற்பத்தி குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாலரின் மதிப்பு அதிகரித்து வருவது, மத்திய கிழக்கு நாடுகளில் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது உள்ளிட்ட காரணங்களால் வரும் வாரத்திலும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

இயற்கை எரிவாயு!

டாலரின் மதிப்பு அதிகரித்ததால் இயற்கை எரிவாயுவின் விலை சென்ற வாரத்தில் தின வர்த்தகத்தில் 1.71 சதவிகிதம் விலை குறைந்தது. மேலும், இயற்கை எரிவாயுவை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் சீதோஷ்ண நிலை சாதகமாக இல்லாததால் குளிர்சாதனங்கள் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது விலையில் பிரதிபலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ரூபாயின் மதிப்பு குறைவாக இருப்பது இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. வரும் வாரத்தில் டாலரின் மதிப்பு அதிகரிப்பு, இன்வென்டரி அதிகரிப்பு உள்ளிட்ட காரணத்தால் இயற்கை எரிவாயு விலை குறைந்தே வர்த்தகமாகும்.

- பானுமதி அருணாசலம்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்