Election bannerElection banner
Published:Updated:

கவனிக்க வேண்டிய 5 ரகசியங்கள்!

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்..

##~##

பங்குச் சந்தையில் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய விருப்பம் இல்லாதவர்களும், தங்களது முதலீட்டிற்கு எந்தவிதமான பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்களும் தேர்ந்தெடுப்பது ஃபிக்ஸட் டெபாசிட்டைதான். இந்த வங்கி டெபாசிட்டைவிட சற்று அதிக வருமானம் தரக்கூடிய முதலீடு ஏதும் இருந்தால் நல்லது என பலரும் தேடுகிறார்கள். 

இந்த தேடலுக்கு  பதிலாக இருப்பதுதான் கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்கள். பல நிறுவனங்கள் தங்களுடைய நிறுவன விரிவாக்க வளர்ச்சிப் பணிகளுக்காக பொதுமக்களிடமிருந்து  டெபாசிட் வாங்க நினைக்கிறது. பொதுமக்கள் தேவை மற்றும் நிறுவனத்தின் தேவை, இந்த இரண்டையும் நிறைவேற்றுவது கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்கள்.  இந்த டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் சற்று அதிகமாக இருக்கும் என்றாலும், மிக நுட்பமாக கவனிக்கவேண்டிய பல விஷயங்கள் இதில் உள்ளன. அந்த விஷயங்கள் என்னென்ன என்பதை முதலீட்டு ஆலோசகர் வி.நாகப்பனிடம் கேட்டோம்.

''சமீப காலமாக பத்திரிகைகளில் 13 சதவிகிதம் வரை வட்டி தருகிறோம் என விளம்பரங்கள் செய்து

கவனிக்க வேண்டிய 5 ரகசியங்கள்!

வருகின்றன பல நிறுவனங்கள். இது எந்த அளவுக்கு உண்மை  என்பது யாருக்கும் தெரியாது. எனவே, நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்வதற்கு முன் ஐந்து விஷயங்களை அனைவரும் கட்டாயம் பார்ப்பது அவசியம்.

நிறுவனத்தின் பின்னணி!

முதலில் கவனிக்கவேண்டியது, டெபாசிட் கேட்கும் நிறுவனம் எப்படிப்பட்டது என்பதைத் தான். அந்நிறுவனம் எத்தனை வருடமாக உள்ளது, அதன் துணை நிறுவனங்கள் என்னென்ன, அதன் வளர்ச்சி எப்படி, நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள் யார் யார், அந்நிறுவனம் சார்ந்த துறையின் வளர்ச்சி எப்படி, நம்மிடம் திரட்டப்படும் தொகை எந்த துறையில் முதலீடு செய்யப்படவிருக்கிறது, அத்துறையின் வளர்ச்சி எப்படி, அதில் உள்ள ரிஸ்க் என்ன என்பதைக் கவனிப்பது அவசியம்.  

ரெகுலேட்டரி!

டெபாசிட் திரட்டும் நிறுவனம் அரசின் எந்த கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். செபி, ஐ.ஆர்.டி.ஏ., கம்பெனி விவகாரத் துறை என எந்த அமைப்பு கட்டுப்படுத்தும் என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

நம் நாட்டில் ஆர்.பி.ஐ.யிடம் அனுமதி பெற்ற, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மட்டும்தான் டெபாசிட் வசூலிக்க முடியும். இதற்கான சான்றிதழ் அந்நிறுவனத்தில் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். இதுவரை மொத்தம் 254 என்.பி.எஃப்.சி. நிறுவனங்களுக்கு மட்டும்தான் ஆர்.பி.ஐ. இந்த அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிதி நிறுவனங்களின் பட்டியல் ஆர்.பி.ஐ.

கவனிக்க வேண்டிய 5 ரகசியங்கள்!

இணையதளத்தில் உள்ளது என்பதால் யார் வேண்டுமானாலும் எளிதில் பார்த்துக்கொள்ளலாம்.

சிறப்பு பிரிவின் கீழ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் கம்பெனி டெபாசிட் வசூலிக்கின்றன. இவற்றை நேஷனல் ஹவுஸிங் பேங்க் நெறிமுறைப் படுத்துகிறது. இதேபோல, கோ-ஆபரேட்டிவ் சொஸைட்டிகளும் தங்கள் உறுப்பினர்களிடம் டெபாசிட் வசூலிக்கிறது. ஆனால், இதில் பொதுமக்கள் டெபாசிட் செய்ய முடியாது.

நிறுவனங்களின் நிதி நிலைமை!

முதலீடு செய்யும் நிறுவனத்தின் நிதி நிலைமை எப்படி உள்ளது என்பதைப் பார்ப்பது அவசியம். பொதுமக்களிடமிருந்து நிதித் திரட்டி, அதை வேறு இடத்தில் முதலீடு செய்து, அதன்மூலம் வருமானத்தைப் பெருக்கும் நிறுவனங்களிடம் பெரிதாக சொத்து இருக்காது. ஆனால், உற்பத்தி நிறுவனங்களில் அதிக சொத்து இருக்கும். அதன் மதிப்பு என்ன, அதேபோல நிறுவனத்தின் கடன் விவரங்கள், நிறுவனம் பரிவர்த்தனைகளை எப்படி செய்கிறது, நிறுவனத்தின் கையிருப்பு எவ்வளவு என்பதைப் பார்ப்பது நல்லது. அதுபோல, உங்களின் முதலீட்டு பரிவர்த்தனைகள் அனைத்தும் அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு காசோலையாகத் தருவதே நல்லது. அதற்கும் அந்நிறுவனத்திடம் இருந்து முறையாக ரசீது வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ரொக்க பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது.

ரேட்டிங்!

நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனம் ரேட்டிங் நிறுவனத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கவனிப்பது அவசியம். இதை கிரிஸில், இக்ரா போன்ற ரேட்டிங் நிறுவனங்கள் செய்கின்றன.

கவனிக்க வேண்டிய 5 ரகசியங்கள்!

இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் நிறுவனங்களைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம். இந்த ரேட்டிங்கை டெபாசிட் திரட்டும் நிறுவனங்கள் தங்களின் இணையதளத்தில் வெளியிட்டு இருக்கும். அல்லது ரேட்டிங் நிறுவனத்தின் இணையதளத்திலும் இதைப் பார்க்கலாம். (பார்க்க மேலே உள்ள பெட்டிச் செய்தி!)

பாதுகாப்பு!

ஆர்.பி.ஐ.-ன் கீழ் பதிவு பெற்ற நிறுவனங் களில் முதலீடு செய்தால் மட்டும் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என சொல்ல முடியாது. ஏனெனில், ஆர்.பி.ஐ. உங்களின் பணத்திற்கு முழுப் பாதுகாப்பு தருகிறோம் என்று சொல்லவில்லை. உங்களின் பணத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பது மட்டும்தான் ஆர்.பி.ஐ.-ன் வேலை. ஆனால், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீட்டிற்கு ஆர்.பி.ஐ. உத்தரவாதம் தந்துள்ளது.

எங்கு புகார் செய்வது?

முதலீட்டில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அருகில் உள்ள ஆர்.பி.ஐ.-ன் அலுவலக கிளைகளில் உங்களது புகார்களை பதிவு செய்ய லாம். கம்பெனி சட்ட வாரியம், சிவில் கோர்ட், நுகர்வோர் நீதிமன்றம் ஆகிய இடங்களிலும் புகார் தெரிவிக்கலாம். மேலும், நிதி மோசடி என அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கலாம்.

ஆசைப்பட்டால் மோசம்!

அதிகம் ஆசைப்பட்டால் மோசம்தான். எனவே, எப்போதும் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது, வங்கிகளில் கிடைக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியில் நான்கில் ஒரு பங்கு சதவிகிதம் அளவுக்கு அதிக வட்டி தரும் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.

கவனிக்க வேண்டிய 5 ரகசியங்கள்!

அதற்குமேல் அதிகமாக வட்டி விகிதம் இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அதாவது, அதிகபட்சம் வட்டி விகிதம் 12 சதவிகிதம் என வைத்துக்கொள்வது நல்லது.

அதேபோல, ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்த தொகை முதிர்வடைந்தவுடன் அதை வெளியே எடுத்துவிடுவது நல்லது. அதன்பிறகு அந்த தொகையை எங்கு முதலீடு செய்வது என்று முடிவு எடுங்கள். சுழற்சி முறையில் அந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இப்படி செய்யும்போது உங்களுடைய முதலீடு எவ்வளவு, அதன்மூலமாக கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்பது தெரியாது.

மேலும், டெபாசிட்டின் முதிர்வுத் தேதிக்கு முன் டெபாசிட்டை வெளியே எடுப்பதை சில நிறுவனங்கள் விரும்புவதில்லை. இதுபோன்ற சமயத்தில் உங்களிடம் நிறுவனங்கள் அதிகமான கேள்விகளை எழுப்பும். மேலும், வட்டி விகிதத்தையும் குறைத்துவிடுவார்கள். எனவே, கவனம் அவசியம்'' என்றார்.

அதிக வட்டிக்கு மட்டுமே ஆசைப்படாமல், நம் முதலீடும் பாதுகாப்பாக இருக்குமா என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு கம்பெனி டெபாசிட்களில் பணத்தைப் போடுவது நல்லது.

- இரா.ரூபாவதி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு