திக்கற்று அலையும் இளைஞர்கள்!  

##~##

நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தும் இன்றைக்கு சில இளைஞர்கள் தம் வாழ்க்கையில் வெற்றி பெறாமல் போவதற்கு என்ன காரணம்..?  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர்களுக்குக் கிடைத்த வசதிகளேதான் காரணம்! தனக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்கிற நினைப்பில் இருக்கிற யாருக்குமே ஒரு மெத்தன மனப்பான்மை ஏற்படவே செய்யும். எளிதில் வெற்றி பெற்றுவிடுவோம் என்கிற (தவறான) எண்ணமே வெற்றிக்குத் தடையாக இருந்துவிடுகிறது.  

'நாளைக்கு என்ன செய்வது..?’, 'இன்றைய பொழுதை எப்படி ஓட்டுவது..?’ என்கிற பதைபதைப்புடன் இருப்பவர்களுக்கு, 'திண்ணிய நெஞ்சும் தெளிந்த நல்லறிவும்’ இயற்கையாகவே அமைந்துவிடுகிறது. எங்கெல்லாம் நெருக்குதல் இருக்கிறதோ, அங்கெல்லாம்தான் சாதித்தாகவேண்டும் என்கிற உந்துதல் அதிகமாக இருக்கிறது. நெருக்கடியில் இருந்துதான் ஒரு பெரிய செயலுக்குத் தேவையான தீவிரம்

எதிர்கொள் !

முளைக்கிறது. ‘necessity is the mother of invention’ என்கிற வாசகம் இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.  

அதிசயமான ஓர் உண்மையை இங்கே நாம் கவனித்தே ஆகவேண்டும். உலகம் முழுவதும், சாதனையாளர்கள் பலரது வாழ்க்கையில் பொதுவான அம்சம் என்று பார்த்தால், அது வறுமையாகத்தான் இருந்திருக்கிறது. இல்லாமையில் இருந்து விடுபடவேண்டும்; பிறரைப்போலத் தானும் நல்லபடியாக வாழவேண்டும் என்கிற எண்ணம்தான் சாமானியர்களை சாதனையாளர்களாக ஆக்குகிறது.

ஏழ்மை ஏற்படுத்துகிற ஏக்கம், தவிப்பு, தாகம், தேடல்தான் மிக வலிமையான உந்துசக்தியாக இருந்திருக்கிறது.  வறுமையோ, வசதிக்குறைவோ ஒரு குறையே அல்ல. முயற்சியின்மைதான் மிகப் பெரிய குறை.  

அன்று எனக்கு ஒரு இ-மெயில் வந்தது.

'வணக்கம். நலம்தானே..? நினைவிருக்கிறதா..?’

அனுப்பியவர் ஒரு பிசினஸ்மேன். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மார்கழி மாத இசை விழாவின்போது அறிமுகம். எப்போதேனும் ஓரிரு நிமிடங்கள் போனில் பேசிக்கொள்வோம், அதோடு சரி.

'இசையை மறக்க முடியுமா..?’ என்று பதில் அனுப்பினேன். சிறிது நேரத்துக்கெல்லாம் பிறகு போன் வந்தது.

'ஃப்ரீயா இருந்தா இன்னைக்கு ஈவினிங் பார்க்கலாமா..?’

மாலை அலுவல் முடிந்து ஒரு ஹோட்டலில் சந்தித்தோம்.

'பிசினஸ் எல்லாம் நல்லாதான் போகுது; பையன் கேசவ்தான்...’ என்று இழுத்தார்.

'ஏன்... என்ன ஆச்சு..?’  

எதிர்கொள் !

'ஒரு வேலையும் செய்ய மாட்டேங் கறான். எப்பப் பார்த்தாலும் கோயில் மாடு மாதிரி சுத்திகிட்டே இருக்கான்...’  

'கொஞ்ச நாளைக்கு அப்படி இருப்பான்; பிறகு தானாவே சரி ஆயிடுவான்...’

'ஊஹூம்... டெய்லி காரை எடுத்துக்கிட்டுக் கிளம்பிடறான். எங்க போறான்... என்ன பண்றான்... ஒண்ணும் தெரியலை. போதாக்குறைக்கு, தான் கெடறது போதா துன்னு, கூட நலைஞ்சு பேரைக் கூட்டிக்கிட்டுப் போயிடறான்... அவங்களோட 'பேரன்ட்ஸ்’ என்கிட்ட 'கம்ப்ளெய்ன்ட்’ பண்றாங்க. என்ன சொன்னாலும் கேட்கமாட்டேங்கறான். எதிர்த்து எதிர்த்துப் பேசறான்.’

ஒருகணம் யோசித்துப் பார்த்தேன். இவர் எனக்கு அதிகம் நெருக்கமானவர் இல்லை. அவருக்கு வேண்டப்பட்ட நண்பர்கள், உறவினர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். அவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டிய விஷயத்தை என்னிடம் அல்லவா சொல்கிறார்?

'நான் ஒரு சின்ன பிசினஸ்மேன்தான். இத்தனை நாளும் வியாபாரம், வியாபாரம்னே இருந்துட்டேன். எப்பவாவது சமயம் வாய்க்குறப்ப, குடும்பத்தோட வெளிய எங்கேயாவது போயிட்டு வருவோம். மத்தபடி, ஒரு நாள்கூட, பையனைப் பக்கத்துல இருந்து கவனிச்சிக்கிட்டது இல்லை. இத்தனை வருஷம் கழிச்சு, நின்னு பார்க்குறப்போதான் தெரியுது... தோளுக்கு மேல வளர்ந்துட்டான்’.

'உங்க பையனுக்கு இப்போ என்ன வயசு..?’

'27 முடிஞ்சு 28. யார்கிட்ட என் பிரச்னையைச் சொன்னாலும் உடனே, கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு ரெடியா ஒரு பதில் சொல்லிடறாங்க.’

புரிந்துகொண்டேன். இவர் ஏற்கெனவே பலரிடம் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். யாரிடம் இருந்தும் தெளிவான தீர்வு கிடைக்கவில்லை.

'இல்லை.. நான் அப்படி சொல்ல மாட்டேன்...’

'சொல்லமாட்டீங்கன்னு நம்பித்தான் உங்ககிட்ட வந்தேன்...’

'தேங்க் யூ... டைம் குடுங்க... யோசிச்சு சொல்றேன்...’

சில பொது விஷயங்களைப் பேசிவிட்டுப் புறப்பட்டுவிட்டோம்.

'என்ன சொல்லலாம்...’ என்கிற சிந்தனை ஓடிக்கொண்டேயிருந்தது.

அம்மா, அப்பாவால பையனைப் பார்த்துக்க  முடியலைன்னா பரவாயில்லை. அதுமாதிரி சமயங்கள்ல, ஊர்ல இருக்கிற மத்த பெரியவங்க கூப்பிட்டு அறிவுரை சொல்வாங்க, கண்டிப்பாங்க.

'நீ..., அவனோட பையன்தானே..? இன்னாரோட பேரன்தானே..? இந்த நேரத்துக்கு இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே..?’ என்று கேட்பதற்கு கிராமமாக இருந்தாலும் சரி, நகரமாக இருந்தாலும் சரி, சிலர் இருந்தார்கள். பாரபட்சம் இன்றி இவர்கள் தங்கள் 'பணி’யை சரியாகச் செய்தார்கள். அதனாலேயேதான் 'நாலு பேருக்கு’ பயந்து நடக்கணும் என்கிற எண்ணம் அடிநாதமாக இயங்கிக்கொண்டு இருந்தது. 'வீட்டுக்கு அடங்காதது ஊருக்கு அடங்கும்’ என்பார்களே, அது நிஜம்.

இவ்வாறு ஒரு வெளிக்கட்டுப்பாடு, அதாவது 'கன்ட்ரோல் மெக்கானிஸம்’ நம்மிடம் இருந்தது. அதுதான் நம்முடைய பலமாகவும் இருந்தது. ஒவ்வொரு குடும்பமும் சமுதாயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்பட்ட செம்மையான காலம் அது!

'ஊர் என்ன சொல்லும்..?’, 'மத்தவங்க என்ன நினைப்பாங்க..?’, 'நாலு பேருக்கு முன்னால நாம தலை நிமிர்ந்து நிக்க வேணாமா..?’, 'அவங்களை மாதிரி நாமும் மேல வரவேணாமா..?’ இப்படியெல்லாம் பலபேர் பேசக்கேட்டிருக்கோம். எதுக்காகக் கேட்கறாங்க..?

இதனுடைய உண்மையான நோக்கம் என்னன்னு புரிஞ்சுக்காமலேயே, இதைப் பத்தி விமர்சனம் பண்ண ஆரம்பிச்சுட்டோம்.

'எதுக்காக மத்தவங்களோட 'கம்பேர்’ பண்ணணும்..?’

'நாம நமக்காகத்தான் வாழணும்; மத்தவங்களைப் பத்தி நாம ஏன் கவலைப் படணும்..?’

'அவங்க எப்படி இருந்தா என்ன..? அவங்க எனக்காக என்ன செஞ்சுட்டாங்க..?’

இப்படியெல்லாம் பேசி, 'தான் வாழ்வது தனக்காக மட்டுமே’ என்கிற மேற்கத்திய சிந்தனையை இங்கே விதைக்க அனுமதித்தோம்.

அதுதான் சரி, அதுதான் நல்லது, அதுதான் நாகரிகம் என்று பரவலாக நம்பத் தொடங்கிவிட்டோம். விளைவு..? யாரையும் தட்டிக்கேட்டுத் திருத்துகிற தார்மீக உண்மையை நமது சமுதாயம் முற்றிலுமாக இழந்து நிற்கிறது.

'யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன..?’ என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின் எண்ண ஓட்டமாக இருக்குமேயானால், ஒருசில இளைஞர்கள் அப்படி நடந்துகொள்வதை மட்டும் நாம் எப்படித் தடுக்கவோ அல்லது திருத்தவோ முடியும்..?

'அடங்காப் பிள்ளை’ - ஓர் இறக்கி வைக்க முடியாத மனச்சுமை. வாழ்நாள் முழுவதும் அழுத்திக்கொண்டே இருக்கும். 'உங்க பையன் என்ன பண்றான்..?’ என்கிற கேள்விக்கு முகம் மலர்ந்து பதில் சொல்லமுடியாத எந்தவொரு தாயும் தந்தையும் ஒருநாளும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது. ஓர் இளைஞனால் தன் பெற்றோருக்கு ஏற்படுகிற இந்தத் துன்பத்துக்கு விடிவும் அந்த இளைஞனிடமேதான் உள்ளது.

ஓர் இலக்கு இல்லாமல், மனம் போனபடி சுற்றித் திரியும் இளைஞனை, கடின உழைப்பின் பக்கம் திருப்புவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா..?

(தெளிவோம்)

படம்: ப.சரவணக்குமார்.

மேலும் மேலும் கடன்!

இந்தியத் தொழில் நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் மூலம் திரட்டிய நிதி 40 சதவிகிதம் அதிகரித்து கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே இவ்வளவு பணத்தைத் தொழில் நிறுவனங்கள் திரட்டி இருக்கிறன்றன.

கடந்த ஜூன் மாதத்தில் 35,214 கோடி ரூபாயும், மே மாதத்தில் 33,759 கோடி ரூபாயும் இந்திய தொழில் நிறுவனங்கள் திரட்டி இருக்கின்றன. ஏப்ரல் மாதத்தில்தான் அதிகபட்சமாக 41,812 கோடி ரூபாயைத் திரட்டியுள்ளன. அதிகமா கடன் வாங்கி, கடன்காரனா மாறிடாதீங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism