பிரீமியம் ஸ்டோரி
அக்ரி கமாடிட்டி !

மிளகு!(PEPPER) 

##~##

சென்ற வாரத்தில் ஸ்பாட் சந்தைகளில் மிளகு விலை குறைந்து வர்த்தகமானது. சென்ற வாரத்தில் ஸ்பாட் சந்தைகளில் நூறு கிலோ மிளகின் விலை 40,500 ரூபாய்க்கு வர்த்தகமானது. 2013-ல் இந்தோனேஷியாவின் லம்பங் பகுதியில் சுமார் 30 சதவிகித உற்பத்தி குறையலாம் என சர்வதேச பெப்பர் கம்யூனிட்டி தெரிவித்துள்ளது. ஐரோப்பிய வர்த்தகர்கள் இந்தோனேஷியாவின் வரத்திற்காக காத்திருக்கின்றனர். ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு மிளகு வர்த்தகம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்.எம்.சி.இ. எக்ஸ்சேஞ்சில் ஆகஸ்ட் கான்ட்ராக்ட் 395 ரூபாயும், செப்டம்பர் கான்ட்ராக்ட் 60 ரூபாய் குறைந்தும் வர்த்தகமானது. கேரளாவில் நல்ல மழை பெய்துள்ளதால் அங்கிருந்து மிளகு வரத்து வெகுவாகப் பாதித்துள்ளது. வரும் வாரங்களிலும் மிளகு வர்த்தகம் மந்தமான நிலையில்தான் இருக்கும்.

ஜீரகம்! (JEERA)

சென்ற வாரத்தில் ஸ்பாட் சந்தைகளில் ஜீரகத்தின் விலை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு டிமாண்ட் காரணமாக அதிகரித்து வர்த்தகமானது. ஜீரகத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சப்ளை குறைந்துள்ளதும் விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம். எனினும், ஜீரகம் விளையும் பகுதிகளில் நல்ல சீதோஷ்ண நிலை தென்படுவதாலும் பயிர் விளையும் மண்களில் நல்ல ஈரப்பதம் இருப்பதாலும் விளைச்சல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அதிக விலையேற்றம் தடுக்கப்படலாம்.

சென்ற புதன் அன்று உஞ்ஹா சந்தைக்கு 5,000 பைகள் (ஒரு பை என்பது 55 கிலோ) வரத்து

வந்தது. விலை கிலோவுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து விற்பனையானது. மேலும், நம் நாட்டின் ஜீரக ஏற்றுமதி 2013 - 2014-ல் 13% அதிகரித்து 90,000 டன்னாக இருக்கும். இதுவே சென்ற ஆண்டில் 79,900 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ரி கமாடிட்டி !

சிரியா மற்றும் துருக்கியில் உற்பத்தி குறைவாக இருக்கும் என்பதால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்திலும் நல்ல ஏற்றுமதி தேவை காரணமாக ஜீரகத்தின் விலை அதிகரித்தே வர்த்தகமாகும்.

மஞ்சள்! (( TURMERIC)

ஸ்பாட் சந்தைகளில் மஞ்சளின் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. உள்நாட்டு வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து தேவை குறைந்துள்ளது. சென்ற வாரத்தில் ஈரோடு சந்தைக்கு சுமார் 4,000 பைகள் (ஒரு பை என்பது 70 கிலோ) வரத்து வந்தன.

தற்போது நடப்பில் இருக்கும் கான்ட்ராக்ட் மற்றும் புதிய கான்ட்ராக்ட்களுக்கு ஷார்ட் செய்வதற்கு சிறப்பு மார்ஜினாக பத்து சதவிகிதம் செலுத்தவேண்டும் என என்.சி.டி.இ.எக்ஸ். சுற்றறிக்கை விடுத்துள்ளது. இந்த சிறப்பு மார்ஜின் ஆகஸ்ட் 6 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் ஆந்திர மாநிலத்தில் 39,442 ஹெக்டேர் பரப்பளவில்

மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளதாகவும், இது சென்ற ஆண்டு இதே மாதத்தில் 40,370 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்தது எனவும் ஆந்திர விவசாயத் துறை தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களிலிருந்து வரும் ஆர்டர்களும் சொல்லிக்கொள்ளும் விதமாக இல்லை. இந்த ஆகஸ்ட் 16-க்கு பிறகுதான் நல்ல டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்திலும் தேவை குறைவாக இருப்பதால்

மஞ்சள் விலை குறைந்தே வர்த்தகமாகும். ஈரோடு சந்தையில் விரலி மஞ்சள் 3,711-5,711 ரூபாய்க்கு வர்த்தகமானது.

அக்ரி கமாடிட்டி !

ஏலக்காய்! (CARDAMOM) 

ஏலக்காய் அதிகம் விளையும் கேரளாவில் மழை அதிகமாகப் பொழிந்ததால் பயிர் சேதம் அடைந்துள்ளது. இதனால் சென்ற வாரத்தில் விலை அதிகரித்தது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கேரளாவில் அதிகமாக பெய்ததோடு, அடுத்துவரும் நாட்களிலும் கேரளா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலைத் துறை அறிவித்துள்ளது. மழை அதிகமாகப் பொழிந்து வருவதால் ஏலக்காய் பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

கேரள ஸ்பாட் சந்தைகளில் ஏலத்திற்கு வரும் ஏலக்காய் சென்ற புதனன்று 55 டன்களாக இருந்தது. ஒரு கிலோ ஏலக்காய் சராசரியாக 594 ரூபாய்க்கு வர்த்தகமானது. எம்.சி.எக்ஸ். சந்தை குடோன்களில் சுமார் 52 டன் ஏலக்காய் இருப்பு ஆகஸ்ட் 6-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் உள்ளது. இதுவே, சென்ற வாரத்தில் 54 டன்னாக இருந்தது. வரத்து குறைவாக இருந்ததால் வரும் வாரத்திலும் விலை அதிகரித்து வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

- பானுமதி அருணாசலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு