பிரீமியம் ஸ்டோரி
இ-கோல்டு சிக்கல்...
##~##

நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட்-ல் (என்.எஸ்.இ.எல்.) நடக்கும் இ-கோல்டு, இ-சில்வர், இ-பிளாட்டினம் மற்றும் இ-காப்பர் என அனைத்து இ-சீரிஸ் வர்த்தகத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ-கோல்டு திட்டத்தில் ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் இனி என்ன செய்யவேண்டும் என்பது குறித்து ஜே.ஆர்.ஜி. வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முருகேஷ்குமாரிடம் கேட்டோம். 

''என்.எஸ்.இ.எல்.- 2010 மார்ச்-ல் இ-கோல்டு வர்த்தகத்தையும், ஏப்ரல் 21, 2010-ல் இ-சில்வர் வர்த்தகத்தையும் தொடங்கியது. இதில் இ-சீரிஸ் வர்த்தகத்தைத் தொடங்கியபோது 459.97 கோடி ரூபாய்க்கு மட்டுமே டேர்னோவர் நடந்தது. தற்போது 10,000 கோடி ரூபாய்க்கு மேல் டேர்னோவர் நடந்திருக்கிறது. அதாவது, சராசரியாக தினமும் 200 கோடி ரூபாய்க்கு டேர்னோவர் நடந்துள்ளது.

இந்த எக்ஸ்சேஞ்சில் டிரேடிங் உறுப்பினராக 7.5 லட்சம் ரூபாய்தான் கட்டணம். தமிழகத்தைச் சேர்ந்த சுமார் ஐந்து புரோக்கிங் நிறுவனங்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. அதிக  விளம்பரம் காரணமாக

இ-கோல்டு சிக்கல்...

நல்ல வரவேற்பு இந்த எக்ஸ்சேஞ்சுக்கு கிடைத்தது. அதாவது, இந்த எக்ஸ்சேஞ்சில் வாங்கும் இ-கோல்டு சீரிஸ் யூனிட்களை டீமேட் வடிவத்தில் இருப்பு வைத்துக்கொள்ள முடியும்.  சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் டெலிவரி மையங்கள் மூலம் டெலிவரியும் எடுக்க முடியும்.

மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் சமீபத்தில் என்.எஸ்.இ.எல்.-ல் ஒருநாள் ஃபார்வேர்டு கான்ட்ராக்ட் வர்த்தகத்தைத் தடை செய்தது. முதலீட்டாளர்களுக்கு பணத்தையோ அல்லது பொருளையோ திருப்பித் தர பல உத்தரவுகளைப் பிறப்பிக்க, இப்போது இ-கோல்டு, இ-சில்வர் வர்த்தகமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இந்நிலையில் முதலீட்டாளர்கள் இ-கோல்டு, இ-சில்வர் உள்ளிட்ட திட்டங்களில் போட்ட பணத்திற்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது.

இ-கோல்டு, இ-சில்வர் ஆகியவற்றை பொறுத்தவரை, அதில் செய்த முதலீடுக்கு ஏற்ப அந்தந்த உலோகத்தை டெலிவரி எடுத்துக்கொள்ள முடியும். முதலீட்டாளர் எந்த புரோக்கிங் நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்தாரோ, அந்நிறுவனத்தை அணுகி பிசிக்கல் தங்கம் டெலிவரி எடுக்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து தந்தால் போதும். இப்படி டெலிவரி எடுக்க  மேக்கிங்/பேக்கிங் சார்ஜ்,

இ-கோல்டு சிக்கல்...

டெலிவரி சார்ஜ், வாட், விற்பனை வரி, ஆக்ட்ராய் போன்ற கட்டணங்கள் உண்டு.

டீமேட் வடிவில் இருக்கும் யூனிட்களை விற்று, பணமாக வேண்டும் என்கிறவர்களுக்கு வர்த்தகம் தடைபட்டுள்ளதால் இப் போது பணம் கிடைக்காது. மீண்டும் இ-சீரிஸ் வர்த்தகத் துக்கு மத்திய அரசு அனுமதி தரும்போதுதான், டீமேட் வடிவில் இருக்கும் யூனிட்களை விற்று பணமாக்க முடியும். ஆனால், இப்போதைக்கு பலரும் பணமாகவே எடுக்க விரும்புகின்றனர்.    

தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை யில் பிரிங்ஸ் ஆர்யா என்ற தனியார் நிறுவனத் திடம்தான் டெலிவரி எடுத்துக்கொள்ள முடியும். தினமும் வர்த்தகமாகும் இ-கோல்டு, இ-சில்வர் மதிப்பின் அடிப்படையில் தங்கம், வெள்ளி வாங்கி இருப்பு வைத்திருந்தார்களா என சென்னையில் இருக்கும் என்.எஸ்.இ.எல். நிறுவனத்திடம் விசாரித்தபோது, முறையான மற்றும் தெளிவான பதில் ஏதும் கிடைக்கவில்லை. அவர்களுடைய இணையதளத்தில் மார்ச்31, 2013 அன்று அவர் களிடம் இருந்த கையிருப்புக்கு ஜூன் 3 தேதி யிட்ட ஆடிட்டர் சர்ட்டிஃபிகேட்டையே வெளியிட்டுள்ளனர்.

இ-கோல்டு திட்டம் பெரும் பிரச்னையில் சிக்கியிருப்பதைத் தொடர்ந்து, மியூச்சுவல் ஃபண்டுகள் நிர்வகிக்கும் கோல்டு இ.டி.எஃப். திட்டம் பற்றியும் நம் வாசகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து ஜியோஜித் பி.என்.பி. பரிபாஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ஆனந்த் ஜேம்ஸ்-யிடம் கேட்டோம்.

இ-கோல்டு சிக்கல்...

''தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்கவே மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால்,  தங்க முதலீட்டுத் திட்டங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இந்தியாவில் கோல்டு இ.டி.எஃப். திட்டம் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி காணும்'' என்றார்.  

இ-கோல்டுக்கு வந்த சிக்கலைத் தொடர்ந்து கோல்டு இ.டி.எஃப்.-பிலும் தங்கத்தை வாங்கி வைக்கிறார்களா என்கிற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. கோல்டு இ.டி.எஃப். திட்டத்தில் முதலீட்டாளர் தரும் பணத்திற்கு ஏற்ப தங்கம் வாங்கப்படுகிறதா? என ஐ.டி.பி.ஐ. அசெட் மேனேஜ்மென்ட்-ன் ஃபண்ட் மேனேஜர் பாலசுப்ரமணியனிடம் கேட்டோம்.

''கோல்டு இ.டி.எஃப்.-ல் முதலீட்டாளர்களிடமிருந்து திரட் டப்படும் நிதியில் 95% தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. மீதம் 5% ரொக்கமாக வைத்துக் கொள்ளப்படுகிறது. இதில் தினமும் எவ்வளவு மதிப்பிலான யூனிட்கள் வர்த்தகமாகிறதோ, அதன் மதிப்பில் தங்கத்தை பிசிக்கலாக வாங்கி வாலட் என சொல்லப்படும் குடோன்களில் வைக்கவேண்டும். இதனை செபி ஆய்வு செய்யும். இது கட்டாயம் என்பதால், கோல்டு இ.டி.எஃப். திட்டங்களுக்கு எவ்வித பாதிப்பும் வரவாய்ப்பில்லை'' என்றார்.

இதுதொடர்பாக செபி அதிகாரிகளுடனும் பேசினோம். ''கோல்டு இ.டி.எஃப். திட்டத்தின் கீழ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கி வைத்திருக்கும் தங்கத்தை செபி அதிகாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வார்கள். ஆனால், சந்தேகம் ஏற்பட்டால் எப்போது வேண்டுமானாலும் சோதனை செய்யும் அதிகாரம் செபிக்கு உண்டு'' என்றார்கள்.  

அமெரிக்காவில் கோல்டு ஃபண்டுகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் தங்கம் எவ்வளவு என  தினமும் தங்கள் இணையதளத்தில்  வெளி யிடுகின்றன. இதுபோன்ற நடைமுறையை இந்தியாவிலும் கோல்டு இ.டி.எஃப். -ஐ நிர்வகிக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் கடைப்பிடிக்கவேண்டும் என்கிற உத்தரவை செபி உடனடியாக பிறப்பிக்கவேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோள்!

- பானுமதி அருணாசலம்.

 எஃப்.எம்.சி-ன் கட்டுப்பாட்டில் என்.எஸ்.இ.எல்..!

 என்.எஸ்.இ.எல்.-ல் ஏற்பட்டிருக்கும் பிரச்னையைத் தீர்க்க ஃபார்வேர்டு மார்க்கெட் கமிஷனுக்கு (எஃப்.எம்.சி) மத்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. இதற்கு ஏதாவது சட்டத் திருத்தங்கள் தேவைப்பட்டால் அதை மத்திய அரசு உடனடியாக செய்யும் என நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் கே.சி. தாமஸ் அறிவித்துள்ளார். இதனால் இனி என்.எஸ்.இ.எல், எஃப்.எம்.சி. பிறப்பிக்கும் உத்தரவு மற்றும் விசாரணை அனைத்திற்கும் கட்டுப்படவேண்டும் என்கிற நிலை உருவாகியுள்ளது.

மேலும், மத்திய அரசின் அனுமதியில்லாமல் புதிய கான்ட்ராக்ட்கள், இ-சீரீஸ் வர்த்தகத்தை நடத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு