Published:Updated:

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

இந்த வாரம் கச்சா எண்ணெய் குறித்து ஐ.எஃப்.ஐ.என். ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ரங்கராஜன் கூறுகிறார்.

கச்சா எண்ணெய்!

''அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை

5% வரை சென்ற வாரத்தில் விலை குறைந்தது. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி செப்டம்பர் மாதத்தில் பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை (ஸ்டுமுலஸ்) குறைக்கத் தொடங்கும் என்கிற எதிர்பார்ப்புதான். இதனால் டாலரின் மதிப்பு குறைந்து கச்சா எண்ணெய்யின் விலையும் குறைந்தது.

மேலும், அமெரிக்காவில் வேலை இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை கடந்த நான்கு வார சராசரியாக 6,250 எண்ணிக்கை குறைந்து 3,35,000 என்ற எண்ணிக்கையைத் தொட்டது. இது நவம்பர் 2007-ம் வருடத்தில் இருந்த குறைந்த எண்ணிக்கை ஆகும்.

கச்சா எண்ணெய்யை அதிகம் நுகர்வதில் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனாவில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

ஏற்றுமதி 5.1 சதவிகிதம் ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது. இதுவே, ஜூன் மாதத்தில் 3.1 சதவிகிதம் இருந்தது. இறக்குமதி 10.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் பெட்ரோல் எரிபொருளின் கையிருப்பு கடந்த 24 வருடங்களில் இல்லாதளவிற்கு அதிகரித்துள்ளதாக எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன்  தெரிவித்துள்ளது.

எனினும், மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அரசியல் பிரச்னை ஏற்பட்டு, சப்ளை குறைந்ததன் காரணமாக மேலும் விலை குறையாமல் தடுக்கப்பட்டது. வரும் வாரத்தில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் பொருளாதார ஊக்குவிப்பு சலுகை எதிர்பார்ப்புகள் விலையில் பிரதிபலிப்பை ஏற்படுத்தும். என்றாலும், ரூபாயின் மதிப்பு குறைவு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்னை ஆகியவை விலையை அதிகரிக்கச் செய்யும்.

எம்.சி.எக்ஸ். சந்தையில் சப்போர்ட் 6,170 ரூபாய். இதற்கு கீழே போனால் 6,060, 6,000 ரூபாய்க்கு போகும். 6,350 ரூபாய்க்கு மேல் போனால் விலை அதிகரிக்கும். 6,300 ரூபாய்க்கு வரும்போது வர்த்தகர்கள் விற்கலாம்'' என்றார்.

தங்கம்!

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

டாலரின் மதிப்பு குறைந்ததை அடுத்து தங்கத்தின் விலை சென்ற வாரத்தில் அதிகரித்து வர்த்தகமானது. அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் குறைந்து வர்த்தகமானதும், நிதிக் கருவூலத் துறை வெளியிட்ட பாண்டுகளின் வருமானம் குறைந்ததும் தங்கத்தின் விலை உயர காரணமாகும்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் முன்னேற்றத்தைக் காட்டினால்,  அது தங்கத் தின் விலையில் பிரதிபலிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவில் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், பொருளாதாரம் முன்னேறி வருவதாலும் பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை ஃபெடரல் வங்கி படிப்படியாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய நாடுகளில் பிசிக்கல் தங்கத்திற்கான டிமாண்ட் தொடர்ந்து மந்தமான நிலையிலேயே உள்ளது. தனிநபர் முதலீட்டாளர்களும் அதிகளவில் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை என புல்லியன் வாலட் என்னும் நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. ஜப்பானின் மத்திய வங்கி அதன் நிதிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது. டாலரின் மதிப்பு குறைந்தால் வரும் வாரத்திலும் தங்கத்தின் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

அடிப்படை உலோகங்கள்!

டாலரின் மதிப்பு குறைந்தது மற்றும் சீனாவின் வர்த்தக புள்ளிவிவரங்கள் சாதகமாக வந்ததால் காப்பரின் விலை சென்ற வாரத்தில் அதிகரித்து வர்த்தகமானது. சென்ற வாரத்தில் நாம் சொன்னது போன்று காப்பர் மற்றும் நிக்கல் அதன் இலக்கு விலையை அடைந்தது.

சர்வதேச அளவில் 40% காப்பரை சீனா பயன் படுத்துகிறது. வரும் வாரத்தில் பணவீக்கம், சில்லறை விற்பனை, தொழிற்சாலை உற்பத்தி, வர்த்தக விவரங்கள் உள்ளிட்டவைகள் வர உள்ளன. லண்டன் மெட்டல்

எக்ஸ்சேஞ்ச்-ல் (எல்.எம்.இ.) இருக்கும் கையிருப்பு எதிர்பார்த்ததைவிட 0.7 சதவிகிதம் குறைந்துள்ளது. தற்போதிருக்கும் நிலையில் காப்பர் மற்றும் நிக்கலை வர்த்தகர்கள் வாங்கலாம்.

இயற்கை எரிவாயு!

குளிர்சாதனத்தின் பயன்பாடு குறைந்ததை அடுத்து இயற்கை எரிவாயுவின் விலை 2.14% வரை சென்ற வாரத்தில் குறைந்தது. மேலும், அமெரிக்காவின் இயற்கை எரிவாயு இன்வென்டரி எதிர்பார்ப்பைவிட அதிகமாக இருக்கும் என எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது. சென்ற வாரத்தில் ஒரு எம்.எம்.பி.டி.யூ. இயற்கை எரிவாயு 199 ரூபாய்க்கு வர்த்தகமானது. இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் நாடுகளில் தேவை குறைந்திருப்பதால் வரும் வாரத்திலும் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

வெள்ளி!

அடிப்படை உலோகங்களின் விலை அதிகரிப்பு மற்றும் தங்கத்தின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் சென்ற வாரத்தில் அதிகரித்தது. மேலும், ஐரோப்பா மற்றும் சீனாவின் பொருளாதார புள்ளிவிவரங்கள் சாதகமாக வந்திருப்பதால் வெள்ளிக்கான தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விலை அதிகரித்தது.

ஜப்பானின் மத்திய வங்கி தனது நிதிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்ததும் வெள்ளியின் விலையில் பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. அடிப்படை உலோகங்களின் விலை அதிகரிப்பு மற்றும் வெள்ளிக்கான தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வெள்ளியின் விலை வரும் வாரத்தில் அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

- பானுமதி அருணாசலம்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு