##~##

ஆக்க்ஷன் ப்ளான்!

எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாகச் சுற்றித் திரிகிற இளைஞர்களைத் திருத்துவதற்கு ஏதும் வழி இருக்கிறதா..? அறிவுரை சொல்லலாம்; வேறு என்ன செய்துவிட முடியும்..?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பட்டால்தான் புத்தி வரும்’ என்று சொல்வதில் விரக்திதான் தெரிகிறதே தவிர, கேள்விக்கான விடையில்லை. எனவே, இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிக்கொண்டே இருந்தேன் நான்.

அன்று சனிக்கிழமை மாலை... மெரினா கடற்கரையில் கடலை ரசித்தபடி வாக்கிங் போய்க்கொண்டிருந்தேன். நடைபாதையை யட்டி இளைஞர்கள் ஐந்தாறு பேர் பேசிக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் உற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அட, நம்ம கார்த்திக் அங்க உட்கார்ந்திருக்கானே! விக்கி மாதிரி, என் அலுவலக நண்பரின் மகன்தான் கார்த்திக்.

சற்றும் யோசிக்காமல், ஹாய் கார்த்திக்! என்றபடி அந்த இளைஞர் கூட்டத்துக்குள் நுழைந்தேன்.

நண்பர்களை அறிமுகப்படுத்தினான் கார்த்திக். ''என்ன இங்க அரட்டைக் கச்சேரியா..?'' என்று கேட்டேன்.

''சார், அரட்டைன்னு சொல்லாதீங்க. பொதுவா சனிக்கிழமை நைட்டு ஏழு மணி சுமாருக்கு நாங்க மெரினாவுல மீட் பண்ணுவோம். கொஞ்ச நேரம் மனம்விட்டுப் பேசுவோம். எங்க பேச்சுல பல டாப்பிக்குகள் வந்துபோகும். பத்து மணிக்குமேல ஒவ்வொருத்தரா கிளம்பிப் போயிருவோம்.

எங்க 'டிஸ்கஷன்’ ஜாலியாவும் இருக்கும்; சம்டைம்ஸ், ரொம்ப சீரியஸாவும் போகும். முடிஞ்ச வரைக்கும் நாங்க தவறாம மீட் பண்ணிக்கறதால, எங்க டிஸ்கஷனுக்குன்னு 'ஆடியன்ஸ்’ கூட இருக்காங்க. இன் ஃபேக்ட், எங்களை மாதிரி நிறைய குரூப்ஸ் இருக்கு'' என்றான் கார்த்திக்.

சென்னையில், பீச், பார்க், கோயில் போன்ற இடங்களில் சிலபேர் கூட்டமாக உட்கார்ந்து பேசுவதைப் பார்த்திருப்பீர்கள். இவர்கள் பொதுவாக நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள்.  உலக விஷயங்கள் அத்தனையும் பத்தி தெளிவாக, விருப்பு வெறுப்பு இல்லாமல், கேலியும் கிண்டலுமாக, ரொம்ப இயல்பாகப் பேசறதைக் கேட்கக் கேட்க நமக்கே ஆனந்தமாக இருக்கும். அன்றைய ஜமாவில் கண்ணன், அருண், மௌலி, பிரசாத், கார்த்திக்குடன் நானும் சேர்ந்துகொண்டேன். இந்த அத்தியாயத்தின் முதல் வரியைத்தான் நான் அவர்களிடம் கேட்டேன்.

'திருத்துவது’ங்கற வார்த்தையே தப்பு’ என காட்டமாக ஆரம்பித்தான் கார்த்திக்.

'சரி, திருத்துவது வேணாம், மாற்றுவது..? சீராக்குவது..? சரி செய்வது..?’ என்றேன் நான்.  

'வார்த்தையை மாத்திப்போட்டா மட்டும் சரி ஆயிடுமா..? ஏதோ பண்ணக் கூடாத தப்பு பண்ணிட்டாப்பல இல்ல பேசறீங்க..?’ என்று கேட்டான் அருண்.

எதிர்கொள் - 11

'ஸோ.., இப்போ இருக்கற மாதிரியே அப்படியே இருக்கட்டுங்கிறீங்களா..? நத்திங் ராங் இன் இட்..?’ - இது நான்.

'யெஸ். வீட்டுக்கு அடங்காம இருக்காங்களா..? வேலை கிடைச்சாலும் போக மாட்டேன்னு அடம் பிடிக்கறாங்களா..? ஏதோ ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஊர் சுத்துவோம். சின்ன சின்னதா செலவு செய்வோம். லேட்டாத் தூங்கி லேட்டா எழுந்திருப்போம்... இட் இஸ் நெய்தர் சின் நார் அ க்ரைம்...’  - உறுதியாகச் சொன்னான் கண்ணன்.

'நான் எல்லாம் காலேஜ்ல படிக்கறப்பவே பார்ட் டைம் வேலைக்குப் போயிட்டேன்...’ -அதுவரைப் பேசாமல் இருந்த மௌலி வாயைத் திறந்தான்.

'மௌலி, உனக்கு நெசஸிடி இருந்திருக்கும். எல்லாருக்கும் அப்படியில்லையே..?’ பிரசாத் சரியான பதிலடி கொடுத்தான்.  

'திஸ் இஸ் நாட் அ கொஸ்டீன் ஆஃப் நெசஸிடி பிரசாத். எவ்வளவு சீக்கிரம் பெற்றோருடைய சுமையைப் பிள்ளைகள் சுமக்க ஆரம்பிக்கறாங்களோ அவ்வளவுக்கு நல்லதுதானே..?’ என்றான் மௌலி.

'இருபதில் இல்லாத முனைப்பு, முப்பது, நாற்பதில் மட்டும் எப்படி வரும்?’ என்பது மௌலியின் கேள்வி.  

'இட் இஸ் லைக் தி பாஸிங் க்ளௌட்ஸ்; தானாகவே சரியாகிடும்’ -  இது கார்த்திக்.

'எல்லாரையும் ஒட்டுமொத்தமா 'ஜெனரலைஸ்’ பண்ணிப் பார்க்கக் கூடாது; அது மட்டும் இல்லை, இளைஞர்கள் மட்டும்தான் பொறுப்பில்லாம இருக்காங்களா..? எத்தனை 'பேரன்ட்ஸ்’ அப்படி இருக்காங்க, காண்பிக்கட்டுமா..?’ பிரசாத் மீண்டும் மிரட்டலாகக் கேட்டான்.  

'எனக்கு 27 வயசாயிடுச்சு. கல்யாணம் பண்ணிக்கோன்னு கட்டாயப்படுத்துறாங்க. இப்ப வேணாமுன்னு சொன்னா, பொறுப் பில்லாம அலையறீயே’ன்னு திட்டுறாங்க’ என்றார் கண்ணன்.

எதிர்கொள் - 11

'பொறுப்புன்னா என்ன..? வேலைக்குப் போய் சம்பாதிச்சுப் பணம் கொண்டுவந்து தரணும்; அவ்வளவுதானா..? சொஸைட்டியைப் பத்தி, கன்ட்ரியைப் பத்தியெல்லாம் எந்தக் கவலையும் வேணாம்; சம்பாதிக்கணும், வீடு வாங்கணும், கார் வாங்கணும், பேங்க் பேலன்ஸ் நிறைய வச்சிக்கணும். அவ்வளவுதான் இல்லை..?’ என்று கொஞ்சம் காட்டமாகவே கேட்டான் பிரசாத்.

இப்படி விவாதம் தொடரத் தொடர எனக்குள் வெவ்வேறு சிந்தனைகள் முளைத்தன. சுதந்திரம் என்பதே அனுபவிக்கத்தானே..? சுற்றித் திரியவேண்டிய பருவத்தில், மகிழ்ச்சியாக வாழ்க்கையை சுகிக்கவேண்டிய வயதில் அப்படி இருப்பதில் என்ன தவறு..? சிறிது காலம்தான். வேலையில் சேர்ந்து, மணம் முடித்தபிறகு வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள் அழுத்துகிறபோது, இளமையின் இனிமையான தருணங்களைத் தவற விட்டுவிட்டோமே என்கிற எண்ணம் வராமலாப் போகும்..? அதிலும், நம் இந்தியாவில் இத்தகையோரின் எண்ணிக்கை மிக அதிகம்.

பொதுவாக, சென்ற தலைமுறையினர் வறுமையை எதிர்த்து மேலே வந்தவர்கள்தாம். தனிப்பட்ட முறையில் இவர்களில் பலருக்கும் இளமையைப் பற்றிய ஏக்கம் இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

'பருவத்தே பயிர் செய்’ என்பதன் பொருள் அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும் என்பதுதானே..? இதில் 'பயிர் செய்’ என்பதற்கு நாம் தருகிற முக்கியத்துவத்தை, 'பருவத்தே’ என்பதற்குத் தரத் தயங்குவது ஏன்..? இன்னும் சொல்லப்போனால், இளமைக் கால நினைவுகள்தாம் வாழ்நாள் முழுக்க வினைஊக்கியாக இருந்து செயல்புரிய வைக்கிறது. ஆக, இளைஞர்கள் பொறுப்பற்று நடந்துகொள்வதாகச் சொல்லப்படுவதெல்லாம் சற்று மிகையான உண்மையோ!  

கடைசியில் நான் பேச ஆரம்பித்தேன். 'நீங்க ஒவ்வொருத்தர் சொல்றதும் கரெக்ட்தான்... யானையைப் பார்த்த குருடர்கள் கதையாகத் தான் நாம இதைப் பார்க்கிறோம்னு தோணுது. ஊர் சுத்தறதோ, அரட்டை அடிக்கிறதோ ஒருத்தனோட ஃபுல் பெர்சனாலிட்டி இல்லை. அது, வெளியில தெரியற கோட்டிங் மட்டும் தான்; அதுவே 'கன்டென்ட்’ இல்லை’ என்றேன் நான். அதைக் கேட்ட இளைஞர்கள் அப்படியே ஒப்புக்கொண்டார்கள்.  

'ஆனால், உழைப்பு சுகமானது இல்லைன்னு ஏன் நினைக்கிறாங்கன்னு எனக்குப் புரியலை. உழைப்பு, ஊதியம், உயர்வு... அதைத் தொடர்ந்துதான் உல்லாசமே வர முடியும். வேலைக்குப் போனா அத்தோட சந்தோஷமே போயிடுமா என்ன..?

நான் சொல்றதெல்லாம், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நம் இளைஞர்கள் தயார் ஆகணும். இப்போதைக்கு, இளைஞர்களுக்கு இதுபற்றிய தெளிவும் புரிதலும் நிச்சயம் தேவை’ என்றேன் நான்.  

''இளைஞர்களின் எண்ணம், எழுத்து, பேச்சு, நடை, உடை, பாவனை, படிப்பு, பழக்கவழக்கம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் ஒளிந்துகிடக்கிற அவர்களின் இயல்பான திறமைகளை ஒருமுகப்படுத்தியாகவேண்டும்.

இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால், திறமைகளை வளர்த்துக் கொள்வதும், இருக்கும் திறமைகளைத் திறம்படப் பயன்படுத்திக்கொள்வதும்தான். இது கொஞ்சம் சிரமம் என்றாலும் முடியாத காரியமில்லையே..?'' என்றேன்.  

ஒவ்வொரு இளைஞன் இளைஞிக்கும் இது சத்தியமாகச் சாத்தியம்தான். எப்படி..? அதை அடைய பல படிகள் உள்ளன. இந்தப் படிகளை ஏறிக் கடக்கும் ஆக்ஷன் ப்ளானை அடுத்த வாரம் பார்ப்போமா?  

(தெளிவோம்)

மின்சாரத்துக்கு உதவிய மழை!

கடந்த இரு மாதங்களாக இந்தியா முழுவதுமே நல்ல பருவ மழை பெய்து வருவதால் மின்சாரப் பற்றாக்குறை கணிசமாக குறைந்திருக்கிறது. இந்திய அளவில் நம் மின்சாரப் பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 5.8 சதவிகிதமாக இருந்தது. இதுவே ஜூலை மாதத்தில் 4.5 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. தென் மாநிலங்களில் கடந்த ஜூன் மாதம் 3,372 மெகாவாட் மின்சார பற்றாக்குறை இருந்தது. அதுவே, ஜூலை மாதம் 2,553 மெகாவாட் மின்சாரமே பற்றாக்குறையாக இருந்தது. வாழ்க மழை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism