Published:Updated:

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

Published:Updated:

மிளகு! (PEPPER)

##~##

சப்ளை குறைந்தது மற்றும் டிமாண்ட் அதிகரித்ததன் காரணமாக மிளகு விலை சென்ற வாரத்தில் அதிகரித்து வர்த்தகமானது. ஸ்பாட் மற்றும் ஃப்யூச்சர்ஸ் என இரண்டு சந்தையிலும் விலை அதிகரித்தது. ஸ்பாட் சந்தையில் 11 டன் வரத்து வந்தாலும் 13 டன் வர்த்தகமாகும் அளவுக்கு டிமாண்ட் இருந்தது. வெளிநாட்டுச் சந்தையில் இந்தோனேஷியா மிளகு வரத்திற்காக வர்த்தகர்கள் காத்திருக் கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்ற வாரத்தில் என்.சி.டி.இ.எக்ஸ்.-ல் ஆகஸ்ட் கான்ட்ராக்ட் 600 ரூபாய் அதிகரித்து 42,800 ரூபாயும், செப்டம்பர் கான்ட்ராக்ட் 793 ரூபாய் அதிகரித்து 42,900 ரூபாயும், அக்டோபர் கான்ட்ராக்ட் 4 ரூபாய் அதிகரித்து 41,970 ரூபாய்க்கும் வர்த்தகமானது. இந்திய மிளகு சர்வதேச சந்தையில் ஒரு டன் 7,025 டாலர் ஐரோப்பாவிலும், 7,275 டாலர் அமெரிக்கா விலும் வர்த்தகமானது. வரும் வாரத்திலும் தேவை அதிகமாக இருப்பதன் காரணமாக விலை அதிகரிக்கும்.

அக்ரி கமாடிட்டி !

ஜீரகம்! (JEERA)

சென்ற வாரத்தில் ஜீரகத்தின் விலை உஞ்ஹா சந்தையில் குவிண்டாலுக்கு 100 ரூபாய் குறைந்து வர்த்தகமானது. செப்டம்பர் கான்ட்ராக்ட் குவிண்டால் 13,325 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஜீரகம் ஏலம்விடும் முக்கிய சந்தைகளில் அதிகப்படியான ஸ்டாக் வந்ததால் மேலும் விலை இறங்கியது.

உஞ்ஹா சந்தையில் சென்ற வாரத்தில் 7,000 பைகள் வரத்து வந்தன. என்.சி.டி.இ.எக்ஸ்.

எக்ஸ்சேஞ்சில் ஆகஸ்ட் 13-ம் தேதி நிலவரப்படி 5,377 டன் இருப்பு இருந்தது. சென்ற வாரத்தில் ரமலான் பண்டிகை முடிந்துவிட்டதால் ஏற்றுமதி ஆர்டர் குறைந்து இருந்தது. தேவை குறைவாக இருப்பதன் காரணமாக வரும் வாரத்திலும் ஜீரகத்தின் விலை குறைந்து வர்த்தகமாகும்.

மஞ்சள்! (TURMERIC)

சென்ற வாரத்தில் வரத்து அதிகமாக இருந்ததால் மஞ்சளின் விலை குறைந்து வர்த்தகமானது. வட இந்தியா விலிருந்து ஆர்டர் வருமென விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்த்த ஆர்டர் வராததால் விலை குறைந்து விற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  மேலும், விவசாயிகளுக்கு கடந்த இரண்டு மாத காலமாக மஞ்சள் வர்த்தகத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. அடுத்தகட்ட விவசாயப் பணிகளுக்கு பணம் தேவைப்படுவதால் கையிருப்பு மஞ்சளை குறைந்த விலைக்கு விற்க நேரிட்டது.

சென்ற வாரத்தில் 5,500 பைகள் வரத்து வந்த நிலையில் 60% வரை மட்டுமே விற்பனையானது. ஈரோடு சந்தையில் விரலி மஞ்சள் குவிண்டால் 3,718 - 5,811 ரூபாய்க்கு வர்த்தகமானது. என்.சி.டி.இ.எக்ஸ்.எக்ஸ்சேஞ்சில் ஆகஸ்ட் 13-ம் தேதி 8,655 மெட்ரிக் டன் இருப்பு இருந்தது. வரும் வாரத்திலும் மஞ்சளின் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !

ஏலக்காய்! (CARDAMOM)

சென்ற வாரத்தில் ஏலக்காய் ஒரு கிலோ 604 ரூபாய்க்கு சராசரியாக வர்த்தக மானது. செப்டம்பர் கான்ட்ராக்ட் ஒரு கிலோ 758 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஏலக்காய் ஏலம்விடும் சந்தைகளில் வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை மேலும் குறைந்தது. கேரளாவில் தினவரத்தாக 78,299 கிலோ வரத்து வந்தது. எம்.சி.எக்ஸ். சந்தையில் ஆகஸ்ட் 13-ம் தேதி நிலவரப்படி, 52.50 மெட்ரிக் டன் இருப்பு இருந்தது. தேவை குறைவாக இருப்பதும், வரத்து அதிகமாக இருப்பதாலும் வரும் வாரத்திலும் ஏலக்காய் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

மிளகாய்! (CHILLI)

சென்ற வாரத்தில் குண்டூர் சந்தையில் மிளகாய் விலை குவிண்டாலுக்கு 100 ரூபாய் குறைந்து வர்த்தகமானது. சென்ற வாரத்தில் செப்டம்பர் கான்ட்ராக்ட் குவிண்டால் 5,344 ரூபாய்க்கு வர்த்தகமானது. மத்தியப் பிரதேசத்தில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் சென்ற வருடத்தை ஒப்பிடும்போது 10-15% அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியால் மிளகாயின் விலை மேலும் குறைந்தது. மேலும், குண்டூர் சந்தையில் அதிகளவில் சென்ற வாரத்தில் வரத்து வந்தது. குண்டூர் சந்தைக்கு 50,000 பைகள் வரத்து வந்தன. தேவை குறைவாக இருப்பதன் காரணமாக வரும் வாரத்திலும் மிளகாய் விலை குறைந்து வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி !

- பானுமதி அருணாசலம்