Published:Updated:

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

Published:Updated:
##~##

இந்த வாரம் தங்கம் விலை நிலவரம் குறித்து சொல்கிறார் ஆதித்யா டிரேடிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் லெனிஷ்.

 தங்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கடந்த சில நாட்களாக அதிகரித்த தங்கத்தின் விலை சென்ற புதன் கிழமையன்று கணிசமாக  அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து வார இறுதியில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,370 டாலர் வரை சென்றது. சீனாவில் தங்கத்துக்கான டிமாண்ட் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம். இந்த ஆண்டின் முதல் பாதி வரை சீனா சுமார் 706.4 மெட்ரிக் டன் அளவிற்கு தங்கத்தை வாங்கியுள்ளது என சீன கோல்டு அசோசியேஷன் தெரிவித்துள்ளது. இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது, 54%  அதிகம். இதில் தங்ககட்டிகளின் தேவை

87%-மும், ஆபரணத் தங்கத்தின் தேவை 44%-மும் அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை 376.5% அதிகரித்து, 1,083.2 டன்னாக உள்ளது. மேலும், 2008-ம் ஆண்டிற்கு பிறகு தங்க காயின் மற்றும் கட்டிகளின் தேவை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக வேர்ல்டு கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. எனினும், இந்தியாவில் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு பல தடைகளை விதித்து வருவதால் இந்தியாவில் தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய இறக்குமதி வரி அதிகரித்துள்ளதன் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும். வரும் வாரத்திலும் தங்கத்தின் விலை அதிகரித்தே வர்த்தகமாகும்.''

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

வெள்ளி!

சென்ற வாரத்தில் தங்கம் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையில் அதிகரித்தது. பொருளாதார மந்தநிலை சீரடைந்து வருவதைத் தொடர்ந்து வெள்ளி தேவை அதிகரித்து, அதன் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் முன்னேறி வருவதால் சில்வர் இ.டி.எஃப்.-ல் முதலீடு செய்வது அங்கு அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தின் முதல் பாதியில் அமெரிக்காவின் நாணயம் உற்பத்தி செய்யும் நிறுவனம் 25 மில்லியன் வெள்ளி காயின்களை விற்றுள்ளது. இது சென்ற ஆண்டு இதே காலத்தைவிட 44% அதிகம். இதற்கு முக்கிய காரணம், தங்கத்தைவிட வெள்ளியின் தொழில் துறை பயன்பாடு அதிகரித்துள்ளதே. வட்டி விகிதங்களின் மாற்றம் வெள்ளியைப் பாதிப்பதில்லை. நீண்டகால நோக்கில் பார்க்கும்போது, வெள்ளியின் விலை புதிய உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளது. வெள்ளி செப்டம்பர் கான்ட்ராக்ட் வெள்ளிக்கிழமை மாலை 49,812 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இயற்கை எரிவாயு!

சென்ற வாரத்தில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்து வர்த்தகமானது. எனினும், அமெரிக்காவின் இயற்கை எரிவாயு சப்ளை ஆகஸ்ட் 9-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 65 பில்லியன் கியூபிக் ஃபீட் அதிகரித்துள்ளது. எதிர்பார்ப்பைவிட கையிருப்பு குறைந்துள்ளது. மேலும், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனால் இயற்கை எரிவாயு வின் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு. வரும் வாரத்தில் இயற்கை எரிவாயு விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கச்சா எண்ணெய்!

சென்ற வாரத்தில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 107 டாலருக்கு வர்த்தகமானது. இதற்கு முக்கிய காரணம், எகிப்து நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக சூயஸ் கால்வாய் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், லிபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சுமார் 50% ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. எதிர்பார்த்ததைவிட கச்சா எண்ணெய் இன்வென்டரி குறைந்ததும் விலை உயர்விற்கு காரணமானது. இந்தியாவில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது மற்றும் எகிப்து, லிபியா பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக சப்ளை குறைவு உள்ளிட்ட காரணங்களால் வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

- பானுமதி அருணாசலம்