முதலீட்டாளர்களுக்குத் தரவேண்டிய தொகையைக் கொடுக்க முடியாமல் தவிக்கும் என்.எஸ்.இ.எல். எக்ஸ்சேஞ்ச் பிரச்னை தோண்ட தோண்ட விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த எக்ஸ்சேஞ்ச் தொடர்பான பிரச்னைகளை ஃபார்வேர்டு மார்க்கெட் கமிஷன் (எஃப்.எம்.சி.) கவனிக்க தொடங்கியபிறகு தினம் ஒரு செய்தி வெளியாகி, முதலீட்டாளர்களைப் பதைபதைக்க வைக்கிறது.

முதலீட்டாளர்களிடமிருந்து வாங்கிய பணம் கிட்டத்தட்ட 5,500 கோடி ரூபாயைத் திரும்பத் தர வேண்டியச் சூழ்நிலையில், என்.எஸ்.இ.எல்.

எக்ஸ்சேஞ்ச்-ன் சி.இ.ஓ., சி.எஃப்.ஓ. உட்பட ஆறு முக்கிய நிர்வாகிகள் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். தவிர, இதன் இயக்குநர் குழுவி லிருந்து இரண்டு இயக்குநர்கள் பதவியைத் துறந்துள்ளனர்.

இந்த எக்ஸ்சேஞ்ச் முன்னுக்குபின் முரணான தகவல்களைக் கூறி வருவதாக எஃப்.எம்.சி. குற்றம் சாட்டியிருக்கிறது. தவறான தகவல்களைத் தருவதால் என்.எஸ்.இ.எல். எக்ஸ்சேஞ்சின் நிர்வாகம் மற்றும் நிர்வாக குழு மீது பலமான சந்தேகம் ஏற்படுவதாகவும் எஃப்.எம்.சி. சொல்லி இருக்கிறது.

முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டிய பணத்தை என்னதான் செய்தார்கள் என தமிழ்நாடு முதலீட்டாளர் சங்கத்தின் தலைவரும், ஐதாட் நிறுவனத்தின் சீஃப் ஐடியேட்டருமான ஷியாம் சேகரிடம் கேட்டோம்.

''முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர் களிடமிருந்து வாங்கிய பணத்தை என்.எஸ்.இ.எல். எக்ஸ்சேஞ்ச் முறையான வழி களில் கையாளவில்லை. பிரச்னை வந்ததும் பல தவணைகளில் பணத்தைத் திரும்பச் செலுத்துவோம் என்று சொன்னார்கள். ஆனால், முதல் தவணை தொகையையே அவர்களால் முழுசாக தர முடியவில்லை.

இந்தப் பிரச்னையின் முக்கிய விஷயமே, இந்த எக்ஸ்சேஞ்ச் நிதி அமைச்சகத்தின் கீழ் வராமல்

நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகத்தின் கீழ் வந்தது தான். இந்த அமைச்சகத்திடம் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை கையாளுவதில் எந்தவித உள்கட்டமைப்பு வசதிகளும் கிடையாது. இவ்வளவு கோடி பணம் புரளும் இந்த

எக்ஸ்சேஞ்ச்-யை ஒழங்குமுறை செய்ய யாரும் இல்லாததால் தங்கள் இஷ்டத்திற்கு பணத்தைக் கையாண்டு இருக்கிறார்கள். உள்ளபடி சொல்லப்போனால், முதலீட்டாளர்கள் பணம் இந்த எக்ஸ்சேஞ்சிடமே இல்லை. இந்தப் பிரச்னை வெளியில் தெரியவந்த பிறகும் இன்னும் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாமல் இருப்பது முதலீட்டாளர்களை மேலும் கவலைகொள்ள வைக்கிறது. இதுவரை இந்த எக்ஸ்சேஞ்ச் சில நிர்வாகிகளை பணிநீக்கம் மட்டுமே செய்துள்ளது. இந்த நடவடிக்கைகளால் முதலீட்டாளர்களின் பணம் திரும்பக் கிடைப்பதற்கான அறிகுறிகள் உருவாகி இருக்கிற மாதிரி தெரியவில்லை'' என்றார்.

நிர்வாகம் குறித்த பிரச்னைகள் ஒருபுறமிருக்க, முதலீட்டாளர்களின் கவலையோ தங்களின் பணம் திரும்பக் கிடைக்குமா என்பதுதான். இ-கோல்டு, இ-சில்வர் போன்ற இ-சீரிஸ் வர்த்தகத்திற்கு தடை செய்ததை அடுத்து இதில் முதலீடு செய்திருப்பவர்கள் பிசிக்கல் டெலிவரி எடுத்தால் மட்டுமே தங்கள் பணத்தைத் திரும்பப் பெறமுடியும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், முதலீட்டாளர்கள் எளிதாக பிசிக்கல் டெலிவரி எடுக்க முடிகிறதா என பல புரோக்கரேஜ் நிறுவனங்களிடம் கேட்டோம். இப்போதுதான் பிரச்னை பற்றிய தகவல் அதிகமாக பரவத் துவங்கியுள்ளது என கூறுகின்றனர். இதுகுறித்து மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் இயக்குநர்களில் ஒருவரான வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்.

''முதலீட்டாளர்களுக்கு இப்போதுதான் தகவல் தெரிந்து, டெலிவரி கேட்க ஆரம்பித் திருக்கிறார்கள். ஏற்கெனவே டெலிவரி கேட்ட முதலீட்டாளர்கள் யாருக்குமே இதுவரை டெலிவரி கிடைக்கவில்லை. இ-கோல்டு வர்த்தகம் தடை செய்யப்படுவதற்குமுன் ஒரு வார காலத்தில் டெலிவரி செய்தார்கள். இப்போது 15 முதல் 20 நாட்கள் ஆகியும் யாருக்கும் டெலிவரி தரப்படவில்லை. ரிடெம்ஷன் விண்ணப்பம் கிடைத்ததற்கான ஒப்புதல் மட்டுமே இதுவரை அனுப்பப்பட்டுள்ளது. எங்கு டெலிவரி எடுக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் பின்னால் சொல்லப்படும் என சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இதுவரை எங்கு டெலிவரி என்கிற தகவலை யாருக்கும் சொல்லவில்லை'' என்றார்.

முதலீட்டாளர்கள் கேட்கிறபடி டெலிவரி செய்யப்படுகிறதா என என்.எஸ்.இ.எல்.-ன் மும்பை மற்றும் சென்னை அலுவலகத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு இந்த இதழ் அச்சுக்கு செல்லும் வரை எந்தப் பதிலும் வரவில்லை.

முதலீட்டாளர்களுக்குத் திரும்பக் கிடைக்கவேண்டிய பணம் சரியாக வந்துசேரவேண்டுமே என்பதுதான் நம் கவலையும் அக்கறையும்கூட!

பானுமதி அருணாசலம்.