வசந்தியின் குடும்பத்தை நான் சந்தித்த போது, அவர் கணவர் மரணத்தைத் தழுவி யிருந்தார். வசந்தி, தனியார் வங்கி ஒன்றில் கணக்காளர். அவர் கணவர் சண்முகம் தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்திருக்கிறார். சண்முகத்தின் சம்பளம் 20,000 ரூபாயும், வசந்தியின் சம்பளம் 13,000 ரூபாயும் என மாதம் 33,000 ரூபாய் சம்பள பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார்கள்.

சண்முகம் இறந்த பிறகு பத்து வயது மகள் திவ்யா, எட்டு வயது மகன் தினேஷ்தான் வசந்திக்கு துணை. சண்முகம் தன் பெயரில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தாலாவது அவர் காலமான பிறகு அவர் குடும்பத்தின் பொருளாதார தேவைகள் நிறைவேறியிருக்கும். ஆனால் அவர் அது மாதிரி எதுவும் செய்யவில்லை. சண்முகம் பெயரில் எடுத்திருந்த மூன்று லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மூலம் 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே வசந்திக்கு கிடைத்தது. சண்முகத்தின் இ.பி.எஃப். மூலம் சிறுதொகை மட்டுமே வசந்திக்கு கிடைத்தது. தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் சக தொழிலாளர்கள் திரட்டித் தந்த நிதி 78,000 ரூபாயும் வசந்தியின் கையில் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, கணவனின் மரணத்திற்கு பின் உறவினர்களின் உதவி வசந்திக்குக் கிடைக்கவே இல்லை. இந்த நிலையில்தான் வசந்தி நிதி ஆலோசனைக் கேட்டு என்னை சந்தித்தார்.

வசந்தியின் அன்றைய நிதி நிலவரத்தை விசாரித்தேன். மாதம் பிடித்தம் போக 13,000 ரூபாய் சம்பாதிப்பதாகச் சொன்னார். மேலும், 2002-ல் வாங்கிய வீட்டுக் கடனில் 5.50 லட்சம் ரூபாய் பாக்கி இருப்பதாகவும், அதற்கு 2017-வரை மாதம் 5,700 ரூபாய் இ.எம்.ஐ. கட்டவேண்டி இருப்பதாகவும் சொன்னார். அதுமட்டுமல்லாமல் 60,000 ரூபாய் நகைக் கடன் பாக்கி கட்டவேண்டி இருந்தது. ஏலச் சீட்டு மாதத் தவணையாக 2,000 ரூபாய் 15 மாதங்களுக்கு கட்டவேண்டி இருக்கிறது. இந்த சேமிப்பை பயன்படுத்திதான் கணவரின் இறுதிச் சடங்குகளை முடித்ததாகவும் வசந்தி சொன்ன போது தற்போதைய வருமானத்தை வைத்து இவரால் இனி சமாளிக்க முடியுமா என்று கொஞ்சம் அதிர்ந்து போனேன். சிக்கல் என்று இருந்தால் அதற்கு நிச்சயம் தீர்வு என்பது ஒன்று இருக்கும்தானே?

குழந்தைகள் இருவரின் பெயரிலும் கட்டிவந்த ஆர்.டி-யில் அன்றைய நிலையில் 22,000 ரூபாய் சேமிப்பு இருந்தது. அன்றைய நிலையில் வசந்தியிடம் பாலிசியின் மூலம் கிடைத்த பணம், சண்முகம் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து தரப்பட்ட தொகை மற்றும் ஆர்.டி. சேமிப்பு என எல்லாம் சேர்த்து 2.50 லட்சம் ரூபாய் இருந்தது. இந்தப் பணம் முழுவதையும் வங்கிச் சேமிப்பு கணக்கில் வைக்கச் சொன்னேன். மேலும், கணவரின் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் வசந்திக்குத் தெரியவில்லை என்பதால் அந்த சமயத்தில் இன்னும் பல சிக்கல்களை வசந்தி சந்திக்க நேர்ந்தது. வசந்தியின் பொருளாதார நிலைமைக்கு தக்கபடி என்ன செய்யவேண்டும் என்பது குறித்து விளக்கினேன்.

வருமானத்தைப் பெருக்க வேண்டும்!

வசந்தியைப் பகுதிநேர வேலை மூலம் வருமானத்தை அதிகரிக்கச் சொன்னேன். முதலில் அவருக்குத் தெரிந்த வத்தல்களை தயார் செய்து பாக்கெட்டில் அடைத்து விற்க ஆரம்பித்தார். அவரது கைபக்குவம் அவர் வசிக்கும் இடத்தில் வாழும் மக்களுக்கு பிடித்துப்போக, அதன்மூலம் ஓரளவு வருமானம் கிடைத்தது.

அடுத்து, ரெடிமேட் இட்லி மாவு தயாரித்து விற்று இன்னும் கூடுதல் வருமானத்துக்கு வழிசெய்தார். எல்லா செலவுகளும் போக பகுதிநேர வேலையின் மூலம் மட்டுமே மாதம் 7,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடிந்தது. இந்த வருமானத்தைப் பிடிக்க இரண்டு மாதங்களாக ஓய்வில்லாமல் போராடினார் வசந்தி.

பிசினஸை இன்னும் விரிவுபடுத்த குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆள் ஒருவரை நியமித்து வருமானம் அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். ஒரு கட்டத்தில் வசந்தியின் சம்பளம் மற்றும் பிசினஸ் வருமானம் சேர்த்து மாதம் 20,000 ரூபாய் என்கிற நிலையில், அவசரகால நிதிச் சேமிப்பு, காப்பீடு, எதிர்கால நிதித் தேவைகள் மற்றும் ஓய்வுக்கால சேமிப்பு என அந்தந்த தேவைகளுக்கு படிப்படியாக பணத்தை முதலீடு செய்யவேண்டும் என்பதைப் புரியவைத்தேன்.

காப்பீட்டுத் தொகையாக கிடைத்த 1.50 லட்சம் ரூபாயில், இரு குழந்தைகளின் பெயரில் தலா 50,000 ரூபாயை எஃப்.டி.-யில் சேமித்து வைக்கச் சொன்னேன். 8 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கச் சொல்லி அதற்கான பிரீமியத்தைச் செலுத்த மீதி இருக்கும் காப்பீட்டுத்

தொகையிலிருந்து பயன்படுத்தச் சொன்னேன். பிறகு, 2 லட்சம் ரூபாய்க்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியை எடுத்துத் தந்து அதற்கான பணத்தையும் மீதி இருக்கும் காப்பீட்டுத் தொகையிலிருந்து பயன்படுத்தச் சொன்னேன்.

கணவர் கம்பெனியில் இருந்து வந்த 78,000-ல் 60,000 ரூபாயைப் பயன்படுத்தி நகைக் கடனை மீட்டுத் தந்தேன். மாதம் 2,000 ரூபாய் சேமித்துவந்த ஆர்.டி. நிறுத்தப்பட்டு, அதில் இருந்து 22,000 ரூபாயும் சேமிப்புக் கணக்குக்கு மாற்றப்பட்டது. அதுவும் மீதம் இருந்த தொகையும் அவசரத் தேவைக்கான தொகையாக சேமிப்புக் கணக்கில் வைக்கச் சொன்னேன்.

இப்போது ஏற்கெனவே இருந்த வீட்டுக் கடன் தவிர, அனைத்து கடன்களும் அடைத்தாயிற்று. இனி குடும்பத்தின் அத்தியாவசியச் செலவு, குழந்தைகளின் படிப்புச் செலவு, அவசரகால மருத்துவச் செலவு மற்றும் வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ. தொகை, குழந்தைகளின் இதர தேவைகள் என அனைத்து செலவுகளையும் பூர்த்தி செய்த பிறகும் கையில் மீதி மாதம் 3,000 ரூபாய் இருப்பதாக என்னிடம் சொன்னார். அதைக் குழந்தைகளின் எதிர்கால கல்விச் செலவுகளுக்காக எஸ்.ஐ.பி. முறையில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யச் சொன்னேன்.

மூன்று ஆண்டு காலம் கடுமையாக உழைத்ததன் விளைவு, இன்று முதலீடு செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். இன்று அவருக்கு 41 வயது. இன்னமும் அதே தனியார் வங்கியில் கணக்காளர் பிரிவின் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் மாதச் சம்பளம் 30,000 ரூபாய். இன்னும் நான்கு வருடத்தில் வீட்டுக் கடனை அடைத்துவிடுவார். தன் மகள் திவ்யாவுக்காகச் சேர்த்துவைத்த பணத்தைப் பயன்படுத்தி அவளை சி.ஏ. படிக்க வைக்கிறார். 'என் தம்பியை நானே சம்பாதித்து டாக்டருக்குப் படிக்க வைப்பேன்’ என திவ்யா தன் அம்மாவிடம் சொல்லும்போது தாங்கமுடியாத பூரிப்பு!

வசந்தியின் தன்னம்பிக்கை, கடும் உழைப்பு, சரியான திட்டமிடல் - இந்த மூன்றும்தான் அவர் குடும்பத்தை நிலைகுலையாமல் நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறது!

தொகுப்பு: செ.கார்த்திகேயன்.
குறிப்பு: இந்தக் கட்டுரையில் வரும்
குடும்ப நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.