''உன் கவலைகள் அனைத்தும் ரூபாய் மதிப்பைபோலக் குறையட்டும்; உன் மகிழ்ச்சியோ டாலர் மதிப்புபோல உயரட்டும்!' இனி நாம் இப்படிகூட வாழ்த்தலாம். காரணம், இன்றைய நிலையில் அமெரிக்க டாலர் மதிப்பு றெக்கைகட்டி பறக்கிறது. சுமாராக ரூ.65 தந்தால்தான் ஒரு டாலரை நம்மால் வாங்க முடியும்..! இதனால் பொருளாதார வளர்ச்சி தேங்கி, தொழில் துறைக்கு எக்கச்சக்கமான பாதிப்பு.

எந்தெந்த துறைக்கு என்னென்ன பாதிப்பு என்றுதானே கேட்கிறீர்கள்? பாதிப்புகளைப் பார்ப்பதற்கு முன், டாலர் மதிப்பு உயர்ந்ததால் எந்தெந்தத் துறைக்கு என்ன சாதகம் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.

ஏற்றுமதி நிறுவனங்கள்!

ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு ரூபாய் மதிப்பு குறைந்தால் லாபம் அதிகரிக்கும். குறிப்பாக, சாஃப்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் சேவை ஏற்றுமதி, தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங் களுக்கு இதனால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புண்டு.

வாகன ஏற்றுமதி!

அதிக எண்ணிக்கையில் வாகனங்களை ஏற்றுமதி செய்துவரும் நிறுவனங்கள், ரூபாய் மதிப்பு குறைவால் கூடுதல் லாபம் சம்பாதித்து வருகின்றன. உதாரணத்துக்கு, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப் போன்ற நிறுவனங்களைக் குறிப்பிடலாம். இவற்றில் அதிக லாபம் அடையும் நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ இருக்கிறது. இதன் மொத்த வருமானத்தில் சுமார் 32 சதவிகிதம் ஏற்றுமதி சார்ந்ததாக இருக்கிறது.

எஃப்.எம்.சி.ஜி. துறை!

நுகர்வோர் பொருட்கள் துறை நிறுவனங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன. உதாரணத்துக்கு, ஐ.டி.சி., டாபர் இந்தியா போன்றவை ஓரளவுக்கு ரூபாய் மதிப்பு சரிவால் லாபம் அடைந்து வருகின்றன.

பார்மா துறை!

இந்தியாவில் இயங்கும் பல மருந்து நிறுவனங்கள் அதிக அளவில் மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகின்றன. அந்தவகையில் சிப்லா, டாக்டர் ரெட்டீஸ், லூபின், கெடிலா ஹெல்த்கேர், அரோபிந்தோ பார்மா, கிளென்மார்க் பார்மா, டிவிஸ் லேப், ரான்பாக்ஸி, சன் பார்மா போன்றவை லாபம் அடைந்து வருகின்றன. இந்தியாவிலுள்ள டாப் 10 பார்மா கம்பெனிகள் 2013 மார்ச் காலாண்டில் ஏற்றுமதி மூலம் 14,784 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளன. இது இவற்றின் மொத்த வருமானத்தில் 73%.

சென்செக்ஸ் கம்பெனிகள்!

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்-ல் இடம்பெற்றுள்ள 11 நிறுவனங்கள் லாபகரமாக உள்ளன. ஐ.டி.சி., இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாக்டர் ரெட்டீஸ், டி.சி.எஸ்., சன் பார்மாச்சூட்டிக்கல்ஸ், விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, சிப்லா, பி.ஹெச்.இ.எல். ஆகிய நிறுவனங்கள், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் லாபம் அடைந்துள்ளன. இதில் மிக அதிக லாபம் அடைந்திருப்பவை டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், மற்றும் விப்ரோ நிறுவனங்களே. ரூபாய் மதிப்பு

வீழ்ச்சியால் மட்டும் 2012-13-ல் இவை முறையே ரூ.5,700 கோடி, ரூ.3,600 கோடி மற்றும் ரூ.2,700 கோடி லாபம் அடைந்துள்ளன.

ரூபாய் மதிப்பு சரிவினால் லாபம் அடைந்துவரும் பங்குகளை வாங்கலாமா? இப்போது வாங்கினால், அதிக லாபம் பார்க்க முடியாது. எனவே, காத்திருந்து வாங்குவது உத்தமம். இனி பாதிப்புகளைப் பற்றி பார்ப்போம்.

ஆட்டோ துறை!

இத்துறைக்குத் தேவையான பல பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் செலவு அதிகரிக்கிறது. மாருதி நிறுவனம் 11 சதவிகித மூலப்பொருளையும், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 5 சதவிகித மூலப் பொருளையும் இறக்குமதி செய்கிறது. டாலர் மதிப்பு அதிகமாக இருப்பதால் அதிக பணத்தைச் செலவழித்து, மூலப்பொருளை இறக்குமதி செய்யும் கட்டாயத்தில் இந்நிறுவனங்கள் இருக்கின்றன.

பார்மா துறை!

சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாடுகளிலிருந்து வாங்கிய கடன் தொகையை இப்போது திருப்பிக் கட்ட அதிக அளவில் பணத்தைத் தரவேண்டி இருக்கிறது. இந்தியாவின் 10 முக்கிய பார்மா கம்பெனிகளின் கடன் மட்டுமே 14,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது. அரோபிந்தோ பார்மா நிறுவனம் சுமார் ரூ.3,000 கோடியும் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் சுமார் 2,500 கோடியும் ரான்பாக்ஸி நிறுவனம் சுமார் ரூ.1500 கோடிக்கும் சன் பார்மா நிறுவனம் சுமார் ரூ.3,000 கோடிக்கும் அதிகமான கடனை திரும்பத் தரவேண்டிய நிலையில் உள்ளது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் அதிகம் பாதிக்கப் படுவது ஆயில் அண்ட் கேஸ் துறையாக உள்ளது. காரணம், இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 70 சதவிகிதம் இறக்குமதி மூலம்தான் ஈடுகட்டி வருகிறது.

ஆயில் மற்றும் கேஸ்!

ரூபாய் மதிப்பு 1 ரூபாய் குறைந்தால் மத்திய அரசுக்கு ரூ.9,000 கோடி மானியச் சுமை கூடுகிறது. அந்தவகையில் கடந்த 2012-13-ல் ரூ.1,61,029 கோடி மத்திய அரசுக்கு மானியச் சுமை ஏற்பட்டுள்ளது. இதில் ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா மற்றும் கெயில் ஆகிய நிறுவனங்களுக்கான மானியச் சுமை ரூ.60,000 கோடியாக உள்ளது. சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருவதால் பெட்ரோலிய பொருட்களுக்கான மானியச் சுமை 2013-14-ல் ரூ.80,000 கோடியாக குறையும் என்பது மத்திய அரசின் கணிப்பாக உள்ளது.

சுற்றுலாத் துறை!

அண்மைக்காலமாக நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது கணிசமாக குறைந்திருக்கிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததை அடுத்து வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்கள் முன்பைவிட அதிகம் செலவு செய்யவேண்டி இருப்பதால் பலரும் தங்கள் வெளிநாட்டுச் சுற்றுலாவை ஒத்திவைத்திருக்கிறார்கள்.

பாதிப்புக்குள்ளான பங்குகளில் ரிஸ்க் என்பது வெளிப்படையாகவே தெரிவதால், இப்போதைக்கு அந்தப் பங்குகளை வாங்காமல் இருப்பது புத்திசாலித்தனம்.