தங்கம்!

''தங்கத்தின் விலை ஜூன் மாதத்தில் மட்டும் 16% சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் தங்க காசு, தங்க கட்டி மற்றும் ஆபரணங்கள் இறக்குமதி சுமார் 900 முதல் 1,000 டன் வரை இருக்கும் என வேர்ல்டு கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. 2011-ம் ஆண்டில் சீனா சுமார் 778.6 டன் தங்கமும், 2010-ம் ஆண்டில் இந்தியா சுமார் 106.5 டன் அளவிற்கும் இறக்குமதி செய்துள்ளது. இந்த அளவை இந்தாண்டில் தாண்டி இந்த இரண்டு நாடுகளும் இறக்குமதி செய்யும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் புளூம்பெர்க் நடத்திய சர்வேயில் அடுத்து வரும் மூன்று மாதங்களில் தங்கத்தின் விலை சுமார் 5 சதவிகிதம் வரை குறையும் என கூறியுள்ளது. ஆனால் ஜெ.பி. மார்கன் மற்றும் பேங்க் ஆஃப் அமெரிக்கா ஆகியவை தங்கம் ஏப்ரலில் விலை இறங்கி தற்போது மீண்டு வந்துவிட்டது. இனி இறங்க வாய்ப்பில்லை என கூறியுள்ளது. இந்தாண்டின் கடைசி காலாண்டில் சர்வதேச சந்தையில் 1,495 டாலருக்கு செல்லும் எனவும் கூறியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்து வர்த்தகமானது. அதேசமயம், இந்தியாவில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் இங்கு விலை அதிகரித்து வர்த்தகமாகவே வாய்ப்புள்ளது.''

அடிப்படை உலோகங்கள்!

அடிப்படை உலோகத்தை அதிகம் பயன்படுத்தும் சீனாவில் தயாரிப்பு குறித்த புள்ளிவிவரங்கள் சாதகமாக வந்துள்ளதாலும், அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி தலைவர் இந்த வருட இறுதிக்குள் பாண்ட் பையிங் திட்டத்தை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளதை அடுத்தும் காப்பரின் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வர்த்தகமானது. சீனாவில் கடந்த நான்கு மாதங்களில் இல்லாதளவிற்கு தயாரிப்பு குறித்த புள்ளிவிவரங்கள் அதிகமாக வந்துள்ளது. அதனால் வரும் மாதங்களில் புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் வரும் என்பதால் அங்கு இறக்குமதி அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை மாதத்தில் சீனாவின் காப்பர் நுகர்வு அதற்கு முந்தைய மாதத்தைவிட 2.97 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், ஆனால் டிமாண்ட் ஜூலை 2012-ம் ஆண்டைவிட 18.28 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தென்கொரியா சுமார் 2,000 டன் காப்பரும், 2,000 டன் ஜிங்க் வாங்க டெண்டர் அறிவிப்பை விடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் இரும்பு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை 30 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக குறைக்க வாய்ப்புள்ளது. அனைத்து காரணிகளையும் வைத்து பார்க்கும்போது அடிப்படை உலோகத்தின் விலை வரும் வாரத்தில் அதிகரித்தே வர்த்தகமாகும்.

கச்சா எண்ணெய்!

அமெரிக்காவில் வேலையில்லாதவர்கள் குறித்த புள்ளிவிவரங்கள் சாதகமாக வந்திருப்பதும், ஃபெடரல் வங்கி தலைவர் பாண்ட் பையிங் திட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் நிறுத்த வாய்ப்புள்ளதாக கூறியுள்ளதும் டாலரின் மதிப்பை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை சென்ற வாரம் வியாழக்கிழமை 1 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. மேலும், ஐரோப்பிய நாடுகளில் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்னை காரணமாக கச்சா எண்ணெய் சப்ளை பாதிப்படைந்துள்ளது. எகிப்தில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக சூயஸ் கால்வாய் வழியாக வரும் கச்சா எண்ணெய் ஒரு நாள் மட்டும் சுமார் 4.5 மில்லியன் பேரல் அளவிற்கு சப்ளை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தின வர்த்தகத்தில் ஒரு பேரல் 105 டாலர் வரை சென்றது. எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு பேரல் 6,713 ரூபாய்க்கு வர்த்தகமானது. சப்ளை பாதிப்படைந்துள்ளதும், டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வரும் வாரத்தில் காரணமாக இருக்கும்.

இயற்கை எரிவாயு!

அமெரிக்காவின் இயற்கை எரிவாயு இன்வென்டரி எதிர்பார்த்ததைவிட குறைந்ததை யடுத்து இயற்கை எரிவாயுவின் விலை 2.1 சதவிகிதம் வரை அதிகரித்து சென்ற வாரத்தில் வர்த்தகமானது. டாலரின் மதிப்பு அதிகரிப்பும் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிக்க காரணமாக இருக்கும். எம்.சி.எக்ஸ். சந்தையில் சுமார் 1.4 சதவிகிதம் வரை தின வர்த்தகத்தில் விலை அதிகரித்து 227.60 ரூபாய்க்கு ஒரு எம்.எம்.பி.டி.யூ. வர்த்தகமானது. அமெரிக்காவின் இயற்கை எரிவாயு இன்வென்டரி 57 பில்லியன் கியூபிக் ஃபீட் அதிகரித்து 3.063 டிரில்லியன் கியூபிக் ஃபீட்டாக இருந்ததாக எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிட்ரேஷன் தெரிவித்துள்ளது. இது எதிர்பார்த்த அளவைவிட குறைவு. வரும் வாரத்திலும் இயற்கை எரிவாயு விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

- பானுமதி அருணாசலம்.