''அவசர வேலை காரணமாக ஈவினிங் ஃப்ளைட்டில் பெங்களூரு கிளம்புகிறேன். அங்கிருந்தபடி உமது இ-மெயில் முகவரிக்கு மேட்டர் அனுப்புகிறேன்'' என வெள்ளிக்கிழமை காலையிலேயே ஷேர்லக் நமக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப, நாமும் ஓகே சொன்னோம். மனிதர் சொன்ன மாதிரி இரவு 8 மணிக்கு மேட்டரை அனுப்பி வைத்தார்.

விதியை மீறியதா எம்.சி.எக்ஸ்?

''முதலில் என்.எஸ்.இ.எல். பற்றி. இந்தியன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் என்பது என்.எஸ்.இ.எல். எக்ஸ்சேஞ்சின் துணை நிறுவனம். என்.எஸ்.இ.எல்.-ம், எம்.சி.எக்ஸ்.-ம் ஃபைனான்ஷியல் டெக்னாலஜியின் துணை நிறுவனங்கள். இந்தியன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் எம்.சி.எக்ஸ் சந்தையில் டிரேட் செய்திருப்பது சமீபத்தில் தெரிய வந்திருக்கிறது. ஒரு புரோட்டர் நிறுவனம், தான் நடத்தும் எக்ஸ்சேஞ்சில் டிரேட் செய்யக்கூடாது என்பது அடிப்படை விதி. இந்த விதியை மீறி இந்தியன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் எம்.சி.எக்ஸ். எக்ஸ்சேஞ்சில் எப்படி டிரேட் செய்தது என பார்வர்டு மார்க்கெட் கமிஷன் இப்போது கேள்வி எழுப்பி இருக்கிறது.

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவிப்பது ஒருபக்கமிருக்க, ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் நிறுவனத் தில் அதன் நிறுவனர் ஜிக்னேஷ் ஷா வைத்திருக்கும் 26% பங்குகளை வாங்குவதன் மூலம் எம்.சி.எக்ஸ்., என்.எஸ்.இ.எல். ஆகிய இரு எக்ஸ்சேஞ்சுகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைக்கிறது கோட்டக் நிறுவனம்.

கோட்டக் நிறுவனம் ஏற்கெனவே ஒரு கமாடிட்டி எக்ஸ்சேஞ்சை நடத்தி வருகிறது. எம்.சி.எக்ஸ். எக்ஸ்சேஞ்சை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம் கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் பிசினஸில் இன்னும் பெரிய அளவில் இறங்கலாம் என்று திட்டம்.

வேகமெடுக்கும் கோல் இந்தியா!

நிலக்கரி சுரங்க நிறுவனமான கோல் இந்தியாவின் எஃப்.பி.ஓ.வை மத்திய அரசு துரிதப்படுத்தி இருக்கிறது. இதற்காக கோல்டுமேன் சாக்ஸ், டாய்ட்ச் பேங்க், பேங்க் ஆஃப் மெர்ரில் லிஞ்ச், கிரெடிட் சூசி, எஸ்.பி.ஐ. கேப்பிட்டல், ஜே.எம். ஃபைனான்ஷியல், கோட்டக் மஹிந்திரா கேப்பிட்டல் உள்ளிட்ட 7 வங்கிகளை மெர்ச்சன்ட் பேங்கர்ஸ் ஆக தேர்வு செய்துள்ளது. 5% பங்குகளை விற்பதன் மூலம் சுமார் ரூ.7,900 கோடி திரட்டப்படுமாம்.

விலை அதிகரித்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்!

இன்று ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளின் விலை திடீரென உயர்ந்ததற்கு காரணம், நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதே. ஆனந்த் ராஜ் இண்டஸ்ட்ரீஸ், இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட், ஹெச்.டி.ஐ.எல், யுனிடெக், பெனின்சூலா லேண்ட், டி.எல்.எஃப். பங்குகளின் விலை சுமார் 5% அதிகரித்துள்ளது.

வியக்க வைக்கும் எல்.ஐ.சி.!

சந்தை சரிந்தாலும் தொடர்ந்து முதலீடு செய்யும் நிறுவனமாக எல்.ஐ.சி. இருக்கிறது. எஸ்.பி.ஐ.-ல் அதன் பங்கு மூலதனத்தை 2.86% அளவுக்கு உயர்த்தி, 13.26%ஆக அதிகரித்துக் கொண்டுள்ளது. சந்தையில் 11.57 லட்சம் எஸ்.பி.ஐ. பங்குகளை 49.15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இதனை அடுத்து எல்.ஐ.சி. வைத்திருக்கும் எஸ்.பி.ஐ. பங்கின் மதிப்பு 684 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முதல் காலாண்டில் எஸ்.பி.ஐ-ன் நிகர லாபம் 13.6% குறைந்துள்ள நிலையிலும் பங்குகளை எல்.ஐ.சி. வாங்கி இருப்பது சந்தை ஆய்வாளர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

டி.சி.எஸ்.-ன் செஞ்சுரி பில்லியன்!

100 பில்லியன் டாலர் (10,000 கோடி டாலர்) மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் மதிப்புகொண்ட முதல் இந்திய நிறுவனமாக டி.சி.எஸ். உருவாகும் என அனலிஸ்ட்கள் கணித்திருக்கிறார்கள். தற்போது இதன் பங்குகளின் சந்தை மதிப்பு 5,400 கோடி டாலருக்கு (54 பில்லியன் டாலர்) அதிகமாக உள்ளது.

டி.சி.எஸ். வருமான கூட்டு வளர்ச்சி அடுத்த 4 - 5 ஆண்டுகளில் 15%ஆக இருக்கும்பட்சத்தில் இந்த வளர்ச்சி சாத்தியமே என்கிறார்கள் அனலிஸ்ட்கள். அந்தவகையில் நீண்ட கால முதலீட்டாளர்கள், இந்தப் பங்கின் மீது ஒரு கண் வைத்தால் லாபம் பார்க்க முடியும்.

மேலும் குறைந்த ஜி.டி.பி.!

முதல் காலாண்டுக்கான ஜி.டி.பி. வளர்ச்சி 4.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் மிகவும் குறைவு. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 5.4% வளர்ச்சி கண்டது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நம் ஜி.டி.பி. வளர்ச்சி குறைந்தபட்சம் 4.7 சதவிகிதமாவது இருக்கும் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்த்ததைவிட குறைவாகவே வந்து சேர்ந்திருக்கிறது.

விவசாய வளர்ச்சி கடந்த காலாண்டில் பெரிய அளவில் கை கொடுக்கும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் வெறும் 2.7% வளர்ச்சி மட்டுமே விவசாயத் துறை வளர்ச்சி கண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியும் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 1.8% வளர்ச்சி கண்டது. ஆனால், இப்போது 0.2% குறையவே செய்திருக்கிறது.

இதன் பாதிப்பு திங்கட்கிழமை அன்று சந்தையில் எதிரொலிக்கக்கூடும் என்பதால் டிரேடர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அவசரப்பட்டால் நஷ்டத்தை அவசியம் சந்திக்க வேண்டியிருக்கும்!

முதலீட்டு ஆலோசகர் களுக்கு கிடுக்கிப்பிடி!

முதலீட்டு ஆலோசகர்கள் அனைவரும் செபியிடம் பதிவு செய்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முதலீட்டு ஆலோசகர் நிறுவனமாக இருந்தால் அதன் குறைந்தபட்ச மதிப்பு 25 லட்சம் ரூபாயாகவும், தனிநபர் என்றால் 1 லட்சம் ரூபாயாகவும் இருக்கவேண்டும்.

இதற்கான கெடு வரும் அக்டோபர் 21-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் பல ஆயிரக்கணக்கான முதலீட்டு ஆலோசகர்கள் இருக்கும் நிலையில் இதுவரையில் ஒரு டஜன் முதலீட்டு ஆலோசகர்கள்கூட பதிவு செய்யவில்லை என்கிறது செபி.

செய்தி அவ்வளவுதான். அடுத்த வாரம் உம்மை சென்னையில் சந்திக்கிறேன். பை பை!''.