''என் கணவர் கிருஷ்ணன் இப்போ என்கூட இல்லைங்க. நாங்க ரெண்டுபேரும் பிரிஞ்சு வாழ்ந்துட்டு இருக்கோம். அவர் என்கூட இருந்தப்ப பொருளாதார ரீதியா எந்தப் பிரச்னையும் எங்களுக்கு கிடையாது. நானும் அவரும் ஒரே சாஃப்ட்வேர் நிறுவனத்துலதான் வேலை பார்த்துட்டு இருந்தோம். அன்றைய நிலையில் (1992-ல்) அந்த நிறுவனம் நல்ல லாபகரமாக நடந்து கிட்டு இருந்ததால எனக்கு 20,000 ரூபாய், அவருக்கு 30,000 ரூபாய்ன்னு சம்பளம் இருந்துச்சு.

எங்களுடையது காதல் திருமணம்ங்கறதால மகிழ்ச்சியா வாழ்ந்துட்டு இருந்தோம். காதல் திருமணத்துக்குப் பிறகு கணவருடைய வீட்டுல இருந்து தொடர்பு இல்லை. என் வீட்டுலயும் அப்படித்தான். ஆனால், காலப்போக்குல என் வீட்டுல நிலைமையைப் புரிஞ்சுகிட்டு எங்களைச் சேர்த்துகிட்டாங்க. அதுமட்டுமில்லாம நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணுங்கறதால என் அம்மா, அப்பாவப் பார்த்துக்கவேண்டிய கடமை எனக்கு இருந்துச்சு. என் கடமையை உணர்ந்து என் கணவரும் என் அம்மா, அப்பாவைக் கூடவே இருக்கச் சொல்லியிருந்தார்.

எனக்கு திருமணம் ஆகி ஒரு வருஷத்துல (1993) இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானேன். இரட்டை குழந்தைங்கங்கறதால சந்தோஷம் எங்களுக்கு இன்னும் கூடுதலாச்சு. அவங்க பிறந்த சில வருடங்கள்ல எனக்கும் என் கணவருக்கும் அமெரிக்காவுக்கு போயி வேலை பார்க்குற வாய்ப்பு கிடைச்சுது. அவருக்கு வருட சம்பளம் ரூ.18 லட்சம், எனக்கு ரூ.15 லட்சம். குழந்தைங்க வளரும் சமயங்கறதால நான் அந்த வாய்ப்பைத் தவறவிட வேண்டியதாச்சு. கணவருக்கு கூடுதல் சம்பளம்ங்கறதால என்னை வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக்கச் சொல்லிட்டு, அவர் மட்டும் அமெரிக்கா கிளம்பிட்டார்'' என்று தனது கடந்தகால சந்தோஷத்தை எடுத்துச் சொன்னார் ஜெயந்தி.

2002-ல் அவர் என்னிடம் நிதி ஆலோசனை கேட்டு வரும்போது, அவருக்கு 30 வயது. அன்றைய நிலையில் முன்பு வேலை செய்த நிறுவனத்திலேயே மீண்டும் வேலைக்குச் சேர்ந்து, ரூ.40,000 சம்பளத்தில் வேலை செய்துவந்தார் ஜெயந்தி. தந்தையின் பென்ஷனாக ரூ.3,000-யும், உளுந்தூர்பேட்டையில் வைத்திருந்த இரண்டு அடுக்குகொண்ட சொந்த வீட்டின் மூலம் ரூ.10,000 வாடகை வருமானமும் கிடைத்து வந்தது. சென்னையில் குழந்தை மற்றும் பெற்றோர்களுடன் வாடகை வீடு எடுத்து தங்கி வேலைக்குச் சென்று வந்தார் ஜெயந்தி.

சோகமான திருப்புமுனை!

உங்கள் பிரிவுக்கு என்ன காரணம் என்று கேட்டேன். ''என் கணவர் அமெரிக்கா போனதும் ஒரு வருஷமா பணத்தை அனுப்பிட்டு இருந்தார். அந்த பணத்தைப் பயன்படுத்திதான் ஏற்கெனவே எடுத்திருந்த வீட்டுக் கடன் 20 லட்சம் ரூபாய்கான மாத இ.எம்.ஐ. 22,000 ரூபாயையும், குடும்பத்துக்கான செலவு, குழந்தைகளுக்கான செலவுன்னு செய்துட்டு இருந்தேன். ஒரு வருஷத்துக்குள்ள ஒரேஒரு தடவைதான் எங்களை வந்து பார்த்துட்டு போனார். அதுக்கப்புறம் அவரும் வரலை; பணமும் அனுப்பலை. அந்தச் சமயத்துல நான் பட்ட கஷ்டங்களும் துயரங்களும் சொல்லவே முடியாது. அவர் பணம் அனுப்பாம இருந்தப்ப மூணு மாசம் ரொம்பவே சிரமமா இருந்துச்சு. அதுக்கப்புறம்தான் ஏற்கெனவே வேலை செய்துட்டு இருந்த நிறுவனத்திடம் வேலை கேட்டுப் போனேன்.

அப்பதான் அந்த அதிர்ச்சியான செய்தி எனக்கு கிடைச்சது. அமெரிக்காவுல இருந்த என் கணவருடைய நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தப்ப... அவர், ''உங்க கணவர் அமெரிக்காவுல இன்னொரு பெண்ணை திருமணம் செய்துட்டு வாழ்ந்திட்டு இருக்கார்’னு சொன்னதைக் கேட்டப்ப, என் தலை மேல இடி விழுந்த மாதிரி இருந்துச்சு'' என்று சொன்னபோது அழுதே விட்டார். அதன்பிறகே சட்டப்பூர்வமாக கணவன், மனைவி இருவருக்கும் பிரிவு ஏற்பட்டிருக்கிறது.

நிதித் திட்டமிடல் ஆரம்பம்!

''சம்பளம், வீட்டு வாடகை, அப்பாவோட பென்ஷன்னு 53,000 வந்துட்டு இருக்கு. அதைப் பயன்படுத்திதான் பொண்ணுங்களுக்கு கல்வி, கல்யாணம், பெத்தவங்களோட மருத்துவச் செலவுன்னு சமாளிக்கணும். அதுக்கு உங்களுடைய நிதி ஆலோசனை நிச்சயமா எங்களை வழிநடத்தும்'' என்று என்னை தேடி வந்தார் ஜெயந்தி. அவருக்கு நிதி ஆலோசனை தருவதில் எனக்கு இருந்த பொறுப்புகள் அதிகம் என்பதை உணர்ந்து அந்த வேலையில் இறங்கினேன்.

கணவனிடம் இருந்து பிரியும்போது போராடி குழந்தைகளுக்காக அவரிடமிருந்து ஜீவனாம்ச தொகையாக 20 லட்சம் ரூபாய் கேட்டு வாங்கி இருக்கிறார். அந்தப் பணத்தை வைத்திருந்ததால் அதைப் பயன்படுத்தி முதலில் வீட்டுக் கடனை அடைக்கச் சொன்னேன். அன்றைய நிலையில் வீட்டுக் கடன் 18.30 லட்சம் ரூபாய் பாக்கி இருந்தது. அதை அடைத்துவிட்டு மீதி பணம் 1.70 லட்சம் ரூபாயை அவசர தேவைக்காக லிக்விட் ஃபண்டில் போட்டு வைக்கச் சொன்னேன்.

அதன்பிறகு 25 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொடுத்தேன். மருத்துவக் காப்பீடு என்று பார்த்தால், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து நிறுவனத்தில் க்ளைம் செய்துகொள்ள முடியும் என்பதால் அப்போதைக்கு எந்த ஒரு தேவையும் இல்லாமல் இருந்தது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாக ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி ஒன்றை எடுத்து வைக்கச் சொன்னேன். அதற்கான பிரீமியமும் குறைவுதான்.

திறமையினால் பதவி உயர்வு!

கணவனிடம் இருந்து பெற்ற பணத்தை வைத்து கடனையும் அடைத்தாயிற்று. அவசர தேவைக்கான பணத்தை ஒதுக்கி, தேவையான இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் எடுத்தாயிற்று. ஜெயந்திக்கு இரண்டு பெண் குழந்தைகள் என்பதால் அவர்கள் கல்வியில் சளைக்காமல் முன்னேறி வந்தார்கள். ஆனால், அவருக்கு இருந்த ஒரே கவலை அவர்களை எப்படியாவது நல்லபடியாக படிக்க வைத்து திருமணமும் செய்து வைக்க வேண்டும் என்பதுதான். அதற்காக இரவு, பகல் பார்க்காமல் அலுவலகம் சென்று உழைத்து வந்தார். ஐ.டி. துறை என்பதால் கூடுதல் சம்பளத்துடன் விரைவிலேயே உயர் பதவியை அடைந்தார். 2007-ல் 60,000 ரூபாய் சம்பளம் (பிடித்தம் போக) வாங்கினார். அதோடு வாடகை வருமானமும் 15,000 ரூபாய் வந்தது.

கல்வி, திருமணத்திற்கு முதலீடு!

இந்தத் தருணத்தில் வருமான வரி கட்டுவதில் பிரச்னைகள் உண்டாக அதற்கென்று தனியாகத் திட்டமிட்டு, அவரின் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் வரிச் சலுகையுடன் கூடிய முதலீட்டுத் திட்டங்களில் முதலீட்டை மேற்கொண்டு வரிச் சலுகையை பெற்றுத் தந்தேன். தனது வருமானத்தில் ரூ.33,000 குழந்தைகளின் கல்வி, திருமணத்திற்காகவும், தனது ஓய்வுக்கால தேவைகளுக்காகவும் மியூச்சுவல் ஃபண்ட், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் தங்கம் போன்ற பாதுகாப்பான இடங்களில் பிரித்து முதலீடு செய்யச் சொல்லியிருந்தேன். அவரும் வீட்டு வாடகை, குடும்பத் தேவைகள், இன்ஷூரன்ஸ் மற்றும் அன்றைய கல்விச் செலவுகள் எல்லாம் போக மீதி ரூ.35,000 பாக்கி இருப்பதாகச் சொன்னார்.

சரி, மீதமிருக்கும் பணத்தில் ரூ.33,000 மட்டும் நான் சொன்னபடி முறையாக முதலீடு செய்யச் சொல்லிவிட்டு, மீதி ரூ.2,000 அவசரத் தேவைக்காக வங்கிச் சேமிப்புக் கணக்கில் சேமித்து வரச் சொன்னேன். ஓய்வுக்காலத்திற்காகவும் சேமித்த முதலீட்டைத் தொடரச் சொல்லி, மகள்களின் கல்விக்காக முதலீடு செய்துவந்த தொகையில், கல்விக்கு போக மீதித் தொகையை அவரது ஓய்வுக்கால முதலீடாக தொடரச் சொல்லி இருக்கிறேன்.

தனியரு மனுஷியாக கணவனைப் பிரிந்து, வாழ்க்கையுடன் போராடி ஜெயித்து தன்னையும்; தன் குடும்பத்தையும் உயர்த்தி நல்ல நிலைக்குகொண்டு வந்திருக்கிறார் ஜெயந்தி. கணவனை பிரிந்த நிமிடம் அவர் துவண்டு போயிருந்தால், இன்று அவர் வாழ்க்கை யில் தோற்றுப்போயிருப்பார். இன்று அவருக்கு 42 வயது. 20 வயதில் திருமணம் செய்து, 30 வயதில் கணவனை பிரிந்து, 42 வயதில் தன் குடும்பத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்.

ஜெயந்தியின் மகள்களான பிரியதர்ஷினி மற்றும் பவதர்ஷினிக்கு இப்போது வயது 19. அவர்கள் இருவரும் நன்கு படித்ததால், மெரிட்டில் மருத்துவக் கல்லூரி சீட் வாங்கிவிட்டார்கள். அவர்களுக்காக சேர்த்த பணத்தை வைத்து கல்விச் செலவுகளை சமாளித்து வருகிறார் ஜெயந்தி. இனி இருவரையும் திருமணம் செய்து தருவதே அவரது தலையாய கடமை என்று நினைக்கிறார். இனி அவருக்கு எல்லாமே ஜெயமாக இருக்கட்டும்!

- தொகுப்பு: செ.கார்த்திகேயன்
குறிப்பு: இந்தக் கட்டுரையில் வரும்
குடும்ப நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.