இளைஞர்களை இன்டலிஜென்ட் ஆக்கும் தொடர்!

இலக்கறிந்து ஓடும் இளைஞர்கள்!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இந்தக் காலத்துக் குழந்தைங்க எவ்வளவு சுறுசுறுப்பா இருக்கறாங்க..? பாட்டு, டான்ஸ், ஸ்போர்ட்ஸ்னு ஒண்ணையும் விட்டுவைக்க மாட்டேங்கறாங்க..!’ எப்பப் பார்த்தாலும் ஏதாவது கிளாஸ், புரோக்ராம்னு ஓடிக்கிட்டே இருக்காங்க...’ என்று பல பேர் பேசறதை நாம கேட்டிருக்கோம்.

நிஜம்தான், மனம்விட்டுப் பாராட்டக்கூடிய பல விஷயங்கள் இன்றைய இளைஞர்கள்கிட்ட நிறைய இருக்கு; குறிப்பா, எதிர்காலம் குறித்த தெளிவான பார்வை அவங்ககிட்ட இருக்கிறதை நாம் மறுக்கவே முடியாது. வருங்காலத்துல தான் என்னவா வரணும்னுட்டு திட்டம்போட்டு வேலை பார்க்குற இளைஞர்கள் நிறைய பேர் இருக்காங்க. அதுல ஒருத்தன்தான், அர்ஜுன்.

சென்னையில ஒரு பாப்புலர் காலேஜ்ல, பி.காம் ஃபைனல் இயர் படிச்சுக்கிட்டு இருக்கான் அர்ஜுன். அவனுடைய அப்பாவுக்கு சுயதொழில்தான். நிதி மற்றும் பங்கு வர்த்தனை கன்சல்டன்ட். 'எப்படி போயிட்டு இருக்கு பிசினஸ்?’ என்று எப்ப கேட்டாலும், 'ஸ்டேபிளா போகுது சார்...’ என்பார்.

ஒரே பையன் என்பதால் அவனுடைய இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் படிக்கட்டும் என்று விட்டுவிட்டார். ஆனாலும், தன் தந்தையைப்போலவே நிதித் துறையைத்தான் தேர்ந்தெடுத்துக்கொண்டு இருக்கிறான்.

காரணம் கேட்டேன். 'எங்க அப்பா ரொம்ப கன்சர்வேட்டிவா இருக்காரு. ஃபைனான்ஸ்ல இருக்கிறவங்க எப்பவும் 'இன்னவேட்டிவ்’-ஆ திங்க் பண்ணிக் கிட்டே இருக்கணும். வேற எந்த ஃபீல்டைவிடவும், ரொம்ப ஃபாஸ்ட்டா, டெய்லி மாறிக்கிட்டே இருக்குற ஒரு துறை இது. ஐ டோன்ட் லைக் தி வே மை ஃபாதர் இஸ் டூயிங்’ என்று வெளிப்படையாகத் தன் தந்தையின் தொழில் சார்ந்த செயல்பாடுகளைப் பற்றிக் குறை கூறுபவன்.

அதுல அவனுடைய அப்பாவுக்குப் பெருமைதான்னு வச்சிக்குங்க... 'நான் இப்படித்தான் இருக்க முடியும்; நீ வேணுமுன்னா உன் ஸ்டைல ஃபாலோ பண்ணிக்கோன்னு சொல்லிட்டேன்’ என்பார்.

இந்த வருஷம் பி.காம் ஃபைனல் இயர். அதுக்குள்ளாவே ஏ.சி.எஸ். இன்டர் முடிச்சுட்டான். அதிலும் நல்ல ரேங்கில். 'இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வொர்க் பண்ணியிருந்தா, இன்னும் நல்ல ரேங்க்  வாங்கி இருக்கலாம் இல்லை..?’ என்றேன்.

'நோ அங்கிள். இந்த ரேங்க் எல்லாம் ரிசல்ட் வந்து ஒரு வாரத்துக்கு வெளியே பெருமையாச் சொல்லிக்கிட்டுத் திரியறதுக்குத்தான். ஒரு புரொஃபஷனலுக்கு அது அவசியமே இல்லை. ஃபீல்டுல இறங்கி ப்ரூவ் பண்ணனும். அதுலதான் சக்சஸ் இருக்கு. எனக்குக் கீழே 100-வதோ 150-ஆவதோ ரேங்க்ல இருக்கற ஒருத்தன் என்னைவிட பிரமாதமா ப்ராக்டீஸ் பண்ணி ஜெயிக்க முடியும்'' - அவன் பேசப் பேச அவன் மீது அவன் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கண்டு வியந்தேன். அதுதான் இன்றைய இளைஞர்கள் விசேஷம்.

எதிர்கொள் - 14

'சரி, உன் ஃப்யூச்சர் ப்ளான் என்ன?’

'நான் வித்தியாசமான, வெற்றியாளனா இருக்கணும்னு நினைக்கறேன். கடையைத் திறந்து வைப்போம்; வியாபாரம் பெருகப் பெருக திட்டம் போட்டுக்கலாம்னு நினைக்கிறவன் நானில்லை. சி.ஏ., ஏ.சி.எஸ்., எம்.பி.ஏ... எல்லாத்தையும் முடிச்சுட்டு, இன்டர்நேஷனலி ரினவ்ன்ட் ஃபைனான்ஷியல் கன்சல்டன்டா வரணும்; சீஃப் எகனாமிக் அட்வைஸரா வர்றியான்னு ஒவ்வொரு கவர்ன்மென்டும், உலகத்துல இருக்குற ஒவ்வொரு டாப் கம்பெனியும் கூப்பிடணும்...’

அவன் பேசப் பேச அட, என்கிற மாதிரி பார்த்தேன். இவனுக்கு மிஞ்சிப் போனால், இருபது வயதுதான் இருக்கும். அதற்குள், உலக சாதனையாளனாக வேண்டும் என்று விரும்புகிறான், திட்டம் போடுகிறான், அதற்காக இப்போதிருந்தே உழைக்கிறான்! ஒரு நாள் நிச்சயமாக சாதித்துக்காட்டுவான். அதற்கு இவன் என்ன செய்கிறான்..?

'காலையில நாலு மணியில இருந்து ராத்திரி பத்து மணி வரைக்கும் டைட் ஷெட்யூல்; அப்பப்போ மியூசிக் கேட்பேன், ரொம்ப போர் அடிச்சா, ஸ்போர்ட்ஸ் சேனல் பார்ப்பேன்; சேர்ந்தாற்போல நாலைஞ்சு நாள் லீவ் கிடைச்சா, கிரிக்கெட்கூட விளையாடுவேன். ஆனா, எக்காரணத்தைக்கொண்டும், டெய்லி படிக்கற டைம் எட்டு மணி நேரத்துக்குக் குறையாமப் பார்த்துக்குவேன். அதுல மட்டும் ஸ்ட்ரிக்ட்-ஆ இருப்பேன்.

எதிர்கொள் - 14

ஆனா, நிறையபேர் இங்கதான் மிஸ் பண்றாங்க. தினசரி எட்டு மணி நேரமோ, ஏழு மணி நேரமோ ஏன் ஒரு மணி நேரமாக்கூட இருக்கலாம். படிப்புக்குன்னு ஒதுக்கியே ஆவணும். என்ன அவசர வேலை வந்தாலும் படிக்கறதை மட்டும் விட்டுடவே கூடாது.  நேரம் இல்லைன்னு ஒரு நாள் சாப்பிடாம இருப்போமா..? எப்படியாவது நேரம் ஒதுக்கி சாப்பிடறோம்ல, அதேமாதிரிதான், படிக்கிற நேரத்தைக் கட்டாயம் படிப்புக்குத்தான் செலவு செய்யணும். அதுல மட்டும் காம்ப்ரமைஸ் கூடவே கூடாது’ - அவன் பேசுவதைப் பார்த்தால் பெரிய மனுஷத்தனம் தெளிவாகத் தெரிந்தது.

பாடப் புத்தகங்கள் மட்டுமே அவனுடைய படிப்பு இல்லை. 'காலையில ஓர் அரை மணி நேரம் நியூஸ் பேப்பர் பார்ப்பேன். முக்கியம்னு தோணற ஐட்டங்களை மார்க் பண்ணி வச்சிடுவேன். அதை மட்டும், காலேஜ் முடிச்சு வந்து ஈவினிங் முழுசா படிச்சு நோட்ஸ் எழுதி வச்சுப்பேன். குறிப்பா, ஃபைனான்ஸ் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நியூஸையும் ஒரு வரி விடாம படிச்சிடுவேன். அப்புறம், கூகுள் சர்ச்சுல போயி லேட்டஸ்ட் நியூஸை கொஞ்ச நேரம் ப்ரவுஸ் பண்ணுவேன்.

இரவு ஒன்பது மணிக்கு மேல ரேடியோவுல நியூஸ் அனாலிசிஸ் கேட்பேன். ராத்திரி தூங்கப் போறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னே, ஏதாவது ஃபிக்க்ஷன் படிப்பேன். ஒரே சப்ஜெக்டே படிக்காம மாத்தி மாத்திப் படிச்சா போரும் அடிக்காது; நமக்கும் வெர்சடைல் நாலெட்ஜ் கிடைச்ச மாதிரி இருக்கும்.’

நேரத்தை முழுசா பயன்படுத்தத் தெரிஞ்சுக்கிட்டிருக்கான்! அதனாலதான், ஒரு சக்ஸஸ்ஃபுல் புரொஃபஷனலா வரணும்னு அவனால யோசிக்கவே முடியுது. தீவிரமான சிந்தனையும் தீவிரமான செயலும் ஒண்ணுக்கொண்ணு காம்ப்ளிமென்டா¢. ஒண்ணுல இருந்துதான் இண்ணொண்ணு வருது.

நேரத்தை சரியாகத் திட்டமிட்டு வேலை செய்யறவங்க எந்தத் துறையில இருந்தாலும் நல்லா முன்னுக்கு வந்தே தீருவாங்க. நேரத்தை வீணாகக் கழிக்கிறவங்க தன் வாழ்க்கையில ஓர் அங்குலம்கூட முன்னேறுவதே இல்லை. நேரம் போதவில்லை என்பவர்கள் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள்; பொழுதுபோகவில்லை என்பவர்கள் எல்லாம் அவமானகரமாகத் தோற்றுப்போகிறார்கள்.

100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவர்கள் எப்படி ஓடுவார்கள்..? இலக்கை நோக்கி மட்டுமே முழு கவனமும் இருக்கும். தன்னைச் சுற்றி, தனக்குப் பக்கத்தில், அவ்வளவு ஏன், தனக்கேகூட என்ன நடக்கிறது என்று எந்த சிந்தனையும் இல்லை; பந்தயத்தில் முதலாவதாக வரவேண்டும், அதற்கு, தன்னால் இயன்றவரை வேகமாக ஓடவேண்டும்.

இலக்கை அடைந்த பின்னர்தான் இதயம் படபடக்கிறதா, பாதத்தில் முள் தைத்திருக்கிறதா என்றெல்லாம் எண்ணத் தோன்றும். அதே அளவு முனைப்பைத் தன்னுடைய எதிர்காலம் குறித்த திட்டமிடலில் காட்டினால் எந்தவொரு இளைஞனுக்கும், வெற்றி கைமேல் வந்து சேரும்.  

தன்னுடைய நேரத்தை மிக சாமர்த்தியமாக பயன்படுத்திக்கொண்டு முன்னுக்கு வந்து கொண்டிருக்கிற ஓர் இளைஞியைப் பற்றி இங்கு சொல்லியே ஆகவேண்டும்.

'குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இவரது பெயரை நாளைய சரித்திரம் ஓயாது உச்சரிக்கப் போகிறது’ என்று சிலரைப் பற்றி நமக்கு சொல்லத் தோன்றும். அப்படியோர் இளைஞிதான் நஸ்ரீன்.

என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்த நஸ்ரீனை நான் முதன் முதலில் பார்த்ததும், அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டதும்... சமீபத்தில்தான்!

(தெளிவோம்)

 கை விரித்த மல்லையா!

ஊழியர்களுக்கு தரவேண்டிய சம்பள பாக்கியைத் தருகிற அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிபர் விஜய் மல்லையா. இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 2,800 ஊழியர்களுக்கு மேல் வேலை பார்க்கிறார்கள். இந்நிறுவனத்தின் சி.இ.ஓ.வுக்கு 4 கோடி ரூபாய் சம்பளமும், எரிபொருள் செலவு, விமான நிலைய கட்டணம் என பல விஷயங்களுக்கு 1,340 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டதாக இந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தகவல் வெளியாக, மல்லையாவுக்கு சங்கடமோ சங்கடம்!