Published:Updated:

பென்ஷன் திட்டத்துக்கு எது பெஸ்ட்?

பென்ஷன் திட்டத்துக்கு எது பெஸ்ட்?

பென்ஷன் திட்டத்துக்கு எது பெஸ்ட்?

பென்ஷன் திட்டத்துக்கு எது பெஸ்ட்?

Published:Updated:

கேள்வி-பதில்

 இன்ஷூரன்ஸ்  VS  மியூச்சுவல் ஃபண்ட்:

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

?இன்ஷூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல் ஃபண்ட் இவை இரண்டில் எது பென்ஷன் திட்டத்திற்கு ஏற்றதாக இருக்கும்?

- கண்ணன், புதுச்சேரி.

சுரேஷ் பார்த்தசாரதி, தலைமை நிதி ஆலோசகர், மை அசெட் கன்சாலிடேஷன்.

''பென்ஷன் தேவைக்கு எந்த முதலீடு சிறந்ததாக இருக்கும் என்பதைவிட உங்களுக்கு என்ன தேவை, எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும் என்பதைப் பார்த்து முதலீட்டை மேற்கொள்வது நல்லது. அத்துடன் பென்ஷனுக்கு இந்தத் திட்டம் சிறப்பாக இருக்கும். அது அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதெல்லாம் கற்பனைதான். அப்படி எதுவும் கிடையாது.

பென்ஷனுக்காக இன்ஷூரன்ஸ் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும்போது சற்று கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். அதாவது, உங்கள் பென்ஷன் காலத்தில் 10 லட்சம் ரூபாய் தேவை என்று நினைத்து நீங்கள் வருடத்திற்கு 50,000 ரூபாய் பிரீமியம் செலுத்தி வருகிறீர்கள் எனில் அதில் பென்ஷனுக்காக 45,000 ரூபாய்தான் முதலீடு செய்யப்படும். மீதமுள்ள 5,000 ரூபாய் இன்ஷூரன்ஸ் பிரீமியமாக எடுத்துக்கொள்ளப்படும்.

பென்ஷன் திட்டத்துக்கு எது பெஸ்ட்?
பென்ஷன் திட்டத்துக்கு எது பெஸ்ட்?

ஆனால், இடைப்பட்ட காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் இழப்பீடு தொகை கிடைக்கும். அதே நேரத்தில், அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை எனில் நீங்கள் எதிர்பார்த்த தொகை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். அதாவது, நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு 5-லிருந்து 6 சதவிகிதம் வரைதான் வருமானம் கிடைக்கும். எனவே, உங்களின் இலக்கு என்ன என்பதைத் திட்டமிட்டு அதற்கு ஏற்ப திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.  

நீண்ட கால நோக்கில், அதாவது 30 வயதிற்குள் பென்ஷனுக்காக திட்டமிட்டு முதலீடு செய்கிறீர்கள் என்றால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.''

?டெபாசிட்டரி பார்டிசிபன்ட்ஸ் (Depository Participants) என்றால் என்ன? இவர்களின் பணி என்ன?

 - டி.கார்த்திக், கொட்டிவாக்கம். ,

ஏ.ஆர்.வாசுதேவன், மேலாளர், சி.டி.எஸ்.எல்.

''டெபாசிட்டரி பார்டிசிபன்ட்ஸ் என்பது இந்தியா முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும், முதலீட்டாளர்களின் டீமேட் உள்ளிட்ட முதலீட்டு விவரங்களை எலெக்ட்ரானிக் முறையில் பதிவு செய்து பாதுகாக்கும் நிறுவனங்கள் ஆகும். இந்த வேலையை சி.டி.எஸ்.எல். (Central Depository Services Limited) மற்றும் என்.எஸ்.டி.எல். (National Securities Depository Limited) ஆகிய இரண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றன.''

பென்ஷன் திட்டத்துக்கு எது பெஸ்ட்?

?ஆன்லைன் இன்ஷூரன் ஸில் ஏஜென்ட் கமிஷன் கிடையாது என்பதால் பிரீமியம் குறைவாக இருக்கிறது. அதேபோல, ஏஜென்ட் இல்லாமல் நேரடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கிளைக்கு சென்று பாலிசி எடுத்தால் பிரீமியம் குறையுமா?

- மணி, ஈரோடு.

வி.கிருஷ்ணதாசன், உதவி துணைத் தலைவர், இந்தியா நிவேஸ்  செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட்.

''இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று பாலிசி எடுப்பதால் பிரீமியம் குறையாது. நீங்கள் நேரில் போய் எடுத்தாலும் அந்த இன்ஷூரன்ஸ் பாலிசி ஏதாவது ஏஜென்ட் பெயரில்தான் கணக்கு வைக்கப்படும். மேலும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைப் பொறுத்தவரையில், தற்போது இரண்டு முறையில் மட்டும்தான் பாலிசியை விநியோகம் செய்ய முடியும். ஒன்று ஆன்லைன், இன்னொன்று ஏஜென்ட். இதில் ஆன்லைனில் பாலிசி எடுத்தால் பிரீமியம் குறைவாக இருக்கும்.''

?என் கணவர் மாதம் 27 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இரு மகள்களின் உயர்கல்விக்கு 15 லட்சம் ரூபாய் தேவை. இதற்காக எஸ்.ஐ.பி. முறையில் ஐந்து வருடங்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். மாதம் எவ்வளவு ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு டீமேட் கணக்கு தேவையா?  

@- ஸ்ரீவித்யா சங்கரநாராயணன்.

செந்தில், நிதி ஆலோசகர்.

''உங்கள் முதலீட்டுக் காலம் என்பது மிகவும் குறுகிய காலமாக இருக்கிறது. இந்த ஐந்து வருடத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் தொகையை ஈட்டுவது மிகவும் கடினம். இதற்கு நீங்கள் மாதம் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இதை 10 சதவிகிதம் வருமானம் தரக்கூடிய அதிக ரிஸ்க் இல்லாத பேலன்ஸ்டு ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலமாக உங்களுக்குத் தேவைப்படும் 15 லட்சம் ரூபாயில், 50 சதவிகித தொகை மட்டும்தான் கிடைக்க வாய்ப்புள்ளது. மீதமுள்ள தொகையை கல்விக் கடன் மூலமாக பெற்று பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கு டீமேட் கணக்கு தேவையில்லை. பான் எண் இருந்தால் போதும்.''

பென்ஷன் திட்டத்துக்கு எது பெஸ்ட்?

?ஏற்றுமதி தொழில் செய்ய மத்திய கலால் இலாகாவில் பதிவு செய்ய வேண்டுமா?

-  சங்கரபாண்டி, விருதுநகர்.

கே.உன்னிகிருஷ்ணன், இணை துணை பொது இயக்குநர், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு.

''ஏற்றுமதி தொழில் செய்ய மத்திய கலால் துறையில் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை. இதற்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்காக இருக்கும் அமைப்பான டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் ஃபாரின் டிரேட்-ல் (Directorate General of Foreign Trade) பதிவு செய்தால் போதும். இப்படி செய்யும்போது உங்களுக்கு தனியாக ஒரு எண் கொடுக்கப்படும். இதை வைத்து ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாம்.''

?இளநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறேன். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்?  

- சரவணன், விழுப்புரம்.

இ.எம்.சி. பழனியப்பன், இயக்குநர், சோனா ஃபைனான்ஷியல் சர்வீஸஸ்.

''பங்குச் சந்தையில் முதலீடு செய்வது மிகவும் சுலபம். அருகில் உள்ள பங்குச் சந்தை புரோக்கர் ஒருவரை அணுகி டிரேடிங் கணக்கும், டீமேட் கணக்கும் ஆரம்பிக்க வேண்டும். ஆரம்ப நிலையில் இண்டெக்ஸில் உள்ள பங்குகளை வாங்குவது நல்லது. அத்துடன் பள்ளிக்குச் செல்லும்போது வீட்டுப் பாடம் எழுதுவதுபோல, தினமும் பங்குகளை வாங்கி விற்பதுபோல காகிதக் கணக்கு எழுதிப் பார்ப்பது நல்லது. இப்படி செய்யும்போது ஒரு பங்கை எப்போது வாங்க வேண்டும். எப்போது விற்க வேண்டும் என்று முடிவெடுக்கும் திறமை உங்களுக்கு வரும். இதைக் காகித வர்த்தகம் என்றும் சொல்லலாம். படித்து முடித்த பிறகு முதலீடு செய்யத் தொடங்க இது உதவியாக இருக்கும்''

பென்ஷன் திட்டத்துக்கு எது பெஸ்ட்?

?கடந்த ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்த மூன்று நண்பர்கள் இணைந்து ப்ரவுஸிங் சென்டர் ஆரம்பிக்க திட்ட மிட்டுள்ளோம். இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? காவல் துறையிடம் அனுமதி வாங்க வேண்டுமா? கடன் உதவி எங்கு கிடைக்கும்?.

@- கார்த்திகேயன், சேலம்.

பி.ஆர்.பெருமாள், துணைத் தலைவர், இட்காட் கன்சல்டன்சி.

''நண்பர்களாக இருக்கும் நீங்கள் மூன்று பேரும் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு காவல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். வங்கிக் கடனும் கிடைக்கும்.''

படம்: பி.கார்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism